14/08/2026
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் நடத்திய 33வது இரத்ததான முகாம்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக 80வது இந்திய 🇮🇳 சுதந்திர தினத்தை* முன்னிட்டு...
*14/08/2026* (வெள்ளிக்கிழமை) அன்று *“கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை, அல் மஹ்ஜர், இரத்த வங்கியில்* பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை இம்முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சவுதி அரேபியா ஜித்தாவின் கிளை மற்றும் பல பகுதிகளில் இருந்தும் குருதிக் கொடையாளர்கள் *104 நபர்கள்* ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களில் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு மொத்தம் *“90 யூனிட்கள்”* இரத்ததானம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையின் இரத்தவங்கி மேலாளர் டாக்டர் அஹ்மது இலியாஸ் அவர்களின் மேற்பார்வையிலும், ஜித்தா மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோரின் சிறந்த களப்பணியால் இம்முகாம் சிறப்பாக நடைபெற்றது.
TNTJ ஜித்தா மண்டலம்
சவுதி அரேபியா
14/08/2026