Mahayugam.lk

Mahayugam.lk , , ,

15/02/2026

குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற பெற்றோர் இதை பாருங்கள் | Korean Love Game

13/02/2026

மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் - பெண் ஒருவர் மரணம்

வாழைச்சேனை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகளின் அட்டகாசத்தினால் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வாழைச்சேனை நாசிவந்தீவு ஆற்றின் வழியாக ஊருக்குள் புகுந்த மூன்று யானைகள் திசை தெரியாமல் பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்ததில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரணமடைந்தவர் கொழும்பு றாகம் பகுதியை சேர்ந்த கொடிதுவக்கு ஆராய்ச்சிக்கே சிராணி (வயது 67) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் தனது உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்த வேலையிலயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை இந்துக்கல்லூரி மதில் மற்றும் பொது மக்களின் மதில் நான்கு, மோட்டார் சைக்கிள் ஒன்று, முச்சக்கரவண்டி ஒன்று என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது.

குறித்த யானைகளை கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச பொது மக்களின் உதவியுடன் வாழைச்சேனை நாசிவந்தீவு ஆற்றின் வழியாக துறத்தி விட்ட போதும் பிரதேச மக்கள் அச்சத்துடனயே காணப்படுகின்றனர்.

ந.குகதர்சன் - மட்டக்களப்பு செய்தியாளர்

11/02/2026

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் இன்று (11) வெளியிடப்பட்ட நாளைய (12) தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு:
👇

2026 பெப்ரவரி 12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2026 பெப்ரவரி 11ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (12ஆம் திகதி) மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

#

06/01/2026
24/12/2025
05/12/2025
02/12/2025

சுமத்ரா தீவில் 502 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா, சுமத்ரா தீவின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் இதுவரை
502 பேர் உயிரிழப்பு - 500க்கும் மேற்பட்டோர் மாயம்

02/12/2025

காதில் கேட்குதா பெரியாரிஸ்ட் !
| | | |

Address

Wellawatta
00200

Alerts

Be the first to know and let us send you an email when Mahayugam.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahayugam.lk:

Share