தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்

தமிழில் தொழில்நுட்ப தகவல்கள் எளிய தமிழில் கணணி சம்பந்தமான கட்டுரைகள், மென்பொருள் தரவிறக்கம் இன்னும் பல

அஸ்ஸலாமு அலைக்கும்.
தமிழ் பேசும் மக்களுக்காக தமிழில் கணணி,மொபைல், இணையம் பற்றய தகவல்களை பறிமாறவே இப்பக்கம் உருவாக்கப்பட்டது.

எளிய தமிழில் கணணி சம்பந்தமான கட்டுரைகள், மென்பொருள் தரவிறக்கம், மற்றும் கணணி சம்பந்தமான கலந்துரையாடல் பகுதி இன்னும் பல ...

26/10/2022

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

ஹார்ட்வேர் பிரச்சினை

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்சினை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

ரம் மெமரி சிப்ஸ்

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

ஹார்ட் டிஸ்க் டிரைவ்

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

வீடியோ கார்ட்

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

வைரஸ்

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரிண்டர்

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

சாப்ட்வேர்

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

அதிக வெப்பம்

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

மின் ஓட்டம்

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

17/10/2022

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது.

இதற்கமைய, Clone WhatsApp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12/10/2022

🔴தீபாவளியை முன்னிட்டு 10% விலைக்கழிவு...

🔶 டிஜிட்டல் உலகில் பலதரப்பட்ட தகவல் தொழிநுட்ப தீர்வுகளை (IT Solutions) வழங்கி வரும் 𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒 ஆகிய நாங்கள் உங்கள் சிறிய, நடுத்தர மற்றும் பெரியளவிலான வணிகங்களுக்கான தொழிநுட்பம் சார்ந்த சகல தேவைகளுக்கும் எங்களிடமிருந்து தீர்வுகளை சிறந்த தரத்துடனும், தீபாவளி விசேட விலைக்கழிவுடனும் பெற்றுக்கொள்ளுங்கள்.

🎀 எமது சேவைகளாவன...
* 𝑷𝒐𝒊𝒏𝒕 𝒐𝒇 𝑺𝒂𝒍𝒆 (𝑷𝑶𝑺) & 𝑩𝒊𝒍𝒍𝒊𝒏𝒈 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎
* 𝑺𝒐𝒇𝒕𝒘𝒂𝒓𝒆 & 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕
* 𝑪𝑪𝑻𝑽 & 𝑺𝒆𝒄𝒖𝒓𝒊𝒕𝒚 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎
* 𝑾𝒆𝒃 𝑫𝒆𝒔𝒊𝒈𝒏 & 𝑾𝒆𝒃 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕
* 𝑮𝒓𝒂𝒑𝒉𝒊𝒄𝒔 𝑫𝒆𝒔𝒊𝒈𝒏
* 𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝑴𝒂𝒓𝒌𝒆𝒕𝒊𝒏𝒈

⭐ தீபாவளி விசேட விலைக்கழிவு இம்மாதம் (ஒக்டோபர்) 31ஆம் திகதி வரை மாத்திரமே ⭐

✅தரம் ✅நேர்மை ✅புதிய தொழில்நுட்பம் ✅நட்புறவான வாடிக்கையாளர் சேவை ✅குறைந்த செலவு

🚩 மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்...
🏡 𝙃𝙀𝘼𝘿 𝙊𝙁𝙁𝙄𝘾𝙀:-
NO-91, MILL ROAD, VAVUNIYA.
0777447725, 0776442329

🏘️ 𝙊𝙐𝙍 𝘽𝙍𝘼𝙉𝘾𝙃:-
NO-524, COLOMBO ROAD, THILLAIYADI, PUTTALAM
0718414184, 0716903578

📬 📬 இன்னுமொருவர் அல்லது உங்கள் நண்பர்கள் பயனடைய இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்...📬 📬

10/10/2022

உங்கள் கணினியை வேகமாக இயங்க வைக்க ஐந்து எளிய வழிகள்...

1.கணினி வன் தட்டில் ( ஹார்ட் டிஸ்கில்- Hard disc) ஏற்பட்ட தகவல் விரிசல்களை ஒட்டுவது ( defragmentation) :
இதன் அர்த்தம் என்ன என்று கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இது கணினியைப் பராமரிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

கணினியில் உள்ள கோப்புகளுக்கிடையே இருக்கும் தகவல்களை உங்கள் கணினி படித்து, பயணம் செய்யும் வேகத்தை இந்த "தகவல் விரிசல்களை ஒட்டும்" வேலை விரைவுபடுத்துகிறது. தகவல்களை ஒழுங்காக அடுக்குவதன் மூலம் அதை கணினி செய்கிறது.

புதிதாக வாங்கிய நவீன வன் தட்டுகள் கூட காலம் செல்லச்செல்ல மந்தமடைகின்றன. இதற்குக் காரணம் கோப்புகள் கணினியில் சேமிக்கப்படும் முறைதான்.

இந்த வன் தட்டு புதிய கோப்புகளை எழுதவும், கழிக்கவும் செய்யும்போது, அந்த கோப்புகள் துண்டுதுண்டாக, வன் தட்டின் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்படுகின்றன. எல்லா தரவுகளும் ஒன்றாக வைக்கப்படுவதில்லை.இது கோப்புகளை நாம் அணுகுவதை மேலும் சிக்கலாக்குகிறது.

எனவே உங்கள் கணினியின் வன் தட்டெங்கும் தகவல்கள் கொத்துக் கொத்தாகப் பரவிக் கிடப்பதை ஒழுங்கு செய்வதன் மூலம், கணினியில் காலியாக இருக்கும் இடத்தை ( கணினியில் நினைவுக் கொள்திறன்- memory capacity என்ற அளவில்) உங்களால் அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும், தகவலை அணுகுவதையும் இது எளிதாக்கும்.

2. தேவையற்ற கோப்புகளை அழித்தல்

இப்போதெல்லாம் 200 GBக்குக் குறைவான அளவுள்ள கணினியின் வன் தட்டை எளிதில் நிரப்பி விட முடியும். ஒரு வன் தட்டு நிரம்ப நிரம்ப, அந்தக் கணினி எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்கக் கஷ்டப்படும்.

உங்கள் கணினியில் ஒரு வேளை ஏராளமான , நீங்கள் பயன்படுத்தாத பழைய கோப்புகள் இருக்கலாம். அவை உங்கள் கணினியில் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்.

எது அது மாதிரி பழைய தேவையற்ற கோப்பு என்பதை அறிந்து கொள்வது , புதிய செயலி (app) ஒன்றை தரவிறக்கம் செய்வது போல எளிதான வேலைதான்.

சந்தையில் கணினிகளுக்காக ( பி.சி மற்றும் மேக் கணினி ஆகிய இரண்டுக்குமே) பல்வேறு ப்ரோக்ராம்கள் இருக்கின்றன. பி.சி கணினிகளுக்கு ஸ்பேஸ் ஸ்னிஃப்ஃபர் (SpaceSniffer) மற்றும் விண்டிர்ஸ்டாட் (WinDirStat) போன்ற ப்ரொக்ராம்களை வைத்து உங்கள் வன் தட்டில் எந்த கோப்புகள் அதிக இடத்தை ஆக்ரமித்துக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய முடியும்
உங்கள் கணினி ஓஎஸ் எக்ஸ் உலவியில் இயங்கும் மேக்கிண்டோஷ் கணினியாக இருந்தால், இதைச் செய்வது இன்னும் எளிது. ஃபைண்டர் ( Finder) என்ற தேடல் வசதியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். இது நீங்கள் உங்கள் மேக் கணினியில் எல்லாக் கோப்புகளையும் நேரடியாக பார்த்து அழிக்க உதவும். செயலிகள், நிரல்கள், வன் தட்டுகள், கோப்புகள், டிவிடி ட்ரைவ்கள் போன்றவை உட்பட . நீங்கள் உங்கள் கோப்புகள் மற்றும் ஃபோல்டர்களை இங்கிருந்தே ஒழுங்குபடுத்திக்கொள்ளலாம். மேக் கம்ப்யூட்டரில் எங்கு வேண்டுமானாலும் தேடிப்பார்த்து உங்களுக்கு வேண்டாத எந்த விஷயத்தையும் அழித்துவிடலாம்.

3.தானே தொடங்க ஆரம்பிக்கும் நிரல்களைத் தவிருங்கள்

இது உங்கள் கணினியை வேகப்படுத்தும் மிக வேகமான வழிகளில் ஒன்று. குறிப்பாக, கணினியை தொடங்குவதை துரிதப்படுத்துவதற்கு.

உங்கள் கணினியில் அது தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் நிரல்கள் என்ன என்பதைப் பார்த்து, அது அதே நேரத்தில் செயல்படத் தொடங்கவேண்டியதில்லை என்று நீங்கள் நினைத்தால், அதைத் தடுப்பது சாத்தியம்தான்.

ஒ.எஸ்.எக்ஸ் , அதன் ஆக்டிவிட்டி மானிட்டர் (Activity Monitor) மூலமும், விண்டோஸ் அதன் "டாஸ்க் மேனேஜர்" மூலமும் இதை செய்ய அனுமதிக்கின்றன. உங்களிடம் மேக் கணினி இருந்தால், "சிஸ்டம் ப்ரெஃப்ரென்ஸஸ்"ஐப் பார்த்து, பின்னர் அதிலிருந்து "யூசர்ஸ் அண்ட் குரூப்ஸ்" என்ற வழியைத் தேர்ந்தெடுத்து, பின்னர் நீங்கள் நிறுத்த விரும்பும் நிரல்களை தேர்ந்தெடுக்கலாம்.

உங்களிடம் பி.சி கணினி இருந்தால், இலவசமாகக் கிடைக்கும் "ஆட்டோரன்ஸ்" என்ற கருவையைப் பயன்படுத்தலாம். இது தானாக இயங்கத் தொடங்கும் நிரல்களைக் கட்டுப்படுத்துகிறது.

4. வைரஸ்கள் மற்றும் கெட்ட நிரல்களை அழித்தல்

வைரஸ்களுக்கு எதிரான மென்பொருள் இல்லாமலேயே கணினியை பராமரிக்க முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வைரஸ்களுக்கு எதிரான மென்பொருட்கள் கணினி நினைவு மற்றும் அதன் செயல்படு திறனை அதிகம் பயன்படுத்துகிறது என்றும் , குறிப்பாக பழசாகிவிட்ட கணினிகளில் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் வல்லுநர்களாக இல்லாதவர்களுக்கு, பிரச்சனை ஏற்பட்ட பின் வருந்துவதைக் காட்டிலும் முன்னரே பாதுகாப்பாக இருப்பதே சாலச் சிறந்தது. எனவே வைரஸ்களுக்கு எதிரான மென்பொருளை வைத்துக்கொள்வது நல்லது.

உங்கள் கணினிக்கேற்ற வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். மைக்ரோசாப்ட்டின் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ், பாண்டா க்லவுட் வொய் அவிரா போன்றவைகளை வைத்துக்கொள்ள குறைந்த அளவு கணினி நினைவாற்றலும் , செயல்படு சக்தியும்தான் தேவைப்படும். பி.சி கணினிகளுக்கு இது போன்ற பொருத்தமான மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன.

மேக் கணினிகள் வைரஸ்களால் பாதிக்கப்படுவதில்லை என்ற புனைவு வெகுவாகப் பரவியிருந்தாலும், ஆப்பிள் கணினிகள் இயல்பாகச் செயல்படுவதைக் காட்டிலும் மெதுவாக இயங்கினால், நீங்கள் சந்தேகப்படவேண்டும்.
அவாஸ்ட் (Avast) அல்லது சோஃபோஸ் (Sophos ) வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் கணினியில் வைத்துக்கொள்ளவேண்டும் . இவை இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள்.

5. இணையச் செயலிகளைப் பயன்படுத்துங்கள்

கூகிள் டாக்குமெண்ட்ஸ்( Google Docs) , அடோபி பஸ்வோர்ட்( Adobe’s Buzzword) , ஸோஹோ (Zoho) அல்லது பீப்பெல் ( Peepel) போன்ற செயலிகள் இருக்கும் போது மைக்ரோசாப்டின் ஆபிஸ் நிரலை ஏன் கணினியில் நிறுவ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

உங்கள் உலவியில் இயங்கக் கூடிய இணையச் செயலிகளால் ஏறக்குறைய எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

அவைகளுக்கு இரண்டு அனுகூலங்கள் இருக்கின்றன. ஒன்று அவைகளை இயக்குவது மெலிதான வேலை, இரண்டு, அவை வன் தட்டை அதிகம் ஆக்ரமிப்பதில்லை.

இந்த ஐந்து வழிமுறைகளை நீங்கள் முயன்று பாருங்கள். அப்படியும் உங்கள் கணினி விரைவாக இயங்கத் தொடங்கவில்லையெனில், அதன் பிறகு ஒருக்கால் நீங்கள் கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை அழைப்பது பற்றியோ அல்லது புதிய கணினி வாங்குவது பற்றியோ முடிவு செய்யலாம் !

04/10/2022

10 Ways to protect your personal data

27/09/2022

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அதிவுயர் தொழில்நுட்பத்துடனான புதிய வசதி!

வாட்ஸ்அப் செயலி (APP) நாளுக்கு நாள் புதுமைமிக்க புதிய வசதிகளை பாவனையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதன்படி, கூட்டு வீடியோ தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் வகையில் (Group Video Call) தற்போது அதிவுயர் தொழில்நுட்பத்துடனான புதிய வசதியை வழங்கவுள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வசதி இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த புதிய வசதிக்கான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டு வீடியோ தொலைபேசி அழைப்பு வசதியானது, முழுமையான பாதுகாப்பை வழங்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

29/08/2022

WhatsApp இல் அறிமுகமாகவுள்ள "Undo Delete"!

WhatsApp அடிக்கடி தனது பயனர்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது. அந்தவகையில் அண்மையில் Online Status ஐ மறைப்பது, ஒருமுறை மட்டுமே பார்க்ககூடிய Text மற்றும் புகைப்படங்களை அனுப்புவது, Two Step Verification போன்ற பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி பயனர்களுக்கு புதியதொரு அனுபவத்தைக் கொடுத்திருந்தது.\

விரைவில் Android மற்றும் Apple Smartphone பயனர்களுக்காக இரண்டு புதிய வசதிகளை WhatsApp அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கும் திறன் மற்றும் Group Adminகள் ஒரு குழுவில் உள்ள எந்தவொரு செய்தியையும் நீக்குவதற்கான அதிகாரம் என இந்த இரண்டு புதிய வசதிகளையும் வழங்கவுள்ளது.

WhatsAppஇல் செய்தி அனுப்பும் பொழுது சில நேரங்களில் தெரியாமல் ஏதாவதொரு Message ஐ அனுப்பிவிடுவோம். அதனை அவசர அவசரமாக Delete செய்ய முயற்சிக்கும்பொழுது, ‘Delete for Everyone' என்பதற்கு பதிலாக ‘Delete for me' என்று கொடுத்துவிடுவோம்.

இதனை மீட்டெடுக்கும் வகையில் "Undo Delete" என்கின்ற Option ஐ WhatsApp அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதி Message ஐ அனுப்பியதில் இருந்து எவ்வளவு நேரத்திற்குள் வேலை செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

தற்பொழுது ​​ஒரு சில Beta பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி பரிசோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22/08/2022

கணணி வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்ற சொல்லைக் கேட்டவுடன் நாம் உயிரியல் வைரஸ்களைப் போல இந்த கணணி வைரஸ்களை எண்ணிவிடக்கூடாது. கணணி வைரஸ்கள் ஒன்றும் இயற்கானவை அல்ல. இதை சொல்லவதற்கு காரணம் இதை தெரியாதவர்களும் இருக்கலாம் என்பதால் தான். சரி அப்படியென்றால் இந்த கணணி வைரஸ்கள் என்றால் என்ன?

கணணி வைரஸ்கள் என்பன நீங்கள் உங்கள் கணனியில் பயன்படுத்தும் வோர்ட், எக்ஸ்செல், கூகிள் குரோம் போன்ற சாப்ட்வேர்களைப் போல ஒரு சாப்ட்வேர் தான். அதுவும் ஒரு ப்ரோக்ராம் என்பதைத்தான் இப்படி சொன்னேன்.

ஆக கணணி வைரஸ்கள் என்பன, சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணனியின் செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணனியின் செயற்பாட்டையோ முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய கணணி ப்ரோக்ராம் ஆகும். இவற்றிக்கு இருக்கும் ஒரு முக்கிய பண்பு இவற்றால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணனிகளுக்கு பரவிச்செல்ல முடியும். இப்போது ஏன் இந்தப் ப்ரோக்ராம்களுக்கு வைரஸ் என்று பெயரிட்டார்கள் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

கணணி வைரஸ்கள் உருவாகுவதற்கு காரணமாக இருப்பன, கணனித் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஓட்டைகளே! ஆழமாக ஆராய வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயம் கணணி அறிவியல் (computer science) அடிப்படையில் இதனை பார்க்க வேண்டும். இங்கு என்னால் முடிந்தவரை இலகுவாக விளக்குகிறேன்.

எனக்கு கணனியின் மறுபக்கத்தை காட்டிய ஆசிரியர் அடிக்கடி சொல்லுவது, அவர் சொன்னதை தமிழுக்கு மொழிபெயர்த்தால் இப்படி வரும், “முறைமை (system) என்று ஒன்று இருக்கும் வரை அதில் ஓட்டை என்று ஒன்று இருந்துகொண்டே இருக்கும்”. அவர் சொல்லவந்தது முற்றுமுழுதாக பூரணப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்று ஒன்றும் கிடையாது அல்லது இதுவரை அப்படி ஒன்றை டிசைன் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்ற ஒன்றே. இப்படியான ஓட்டைகளே இந்த வைரஸ்கள் இயங்க வழிவகுக்கின்றன.

கணினி வைரஸ்கள் உருவகியதற்கும், இன்னும் உருவாகிக்கொண்டிருப்பதற்கும் பல்வேறு துணைக்காரணங்களை நாம் காணலாம். சுயலாபம் கருதி, அரசியல் காரணங்களுக்காக, போட்டி நிறுவனங்களை வீழ்த்த, மற்றும் ஆண்டி-வைரஸ்களை விற்பனை செய்ய(??!!) இப்படி பல காரணங்கள். சும்மா உள்ளலாயிக்கு வைரஸ் ப்ரோக்ராம்களை உருவாக்குபவர்களும் உண்டு!

15/08/2022

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள பல புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தும் பிரபலமான செயலியாக உள்ளது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பயனர்களை ஈர்த்துள்ளது. காரணம், இது மிகவும் எளிதாக பயன்படுத்த கூடிய ஒன்றாக (user friendly) உள்ளது. தகவல்களை எளிய முறையில் மற்றவர்களுக்கு அனுப்பும் படியாகயும் உள்ளது. அதனால், இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

குரூப் சாட், இமோஜி, ஸ்டிக்கர் எனப் பல அம்சங்கள் பயனர்களை கவர்ந்துள்ளது. அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் புதுவித அம்சங்களுடன் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வாட்ஸாப் நிறுவனம் கடந்த 2017ல் அறிமுகப்படுத்திய Delete For Everyone ஆப்சன் மூலம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அனுப்பிய மெசேஜ்களை நீக்க முடிந்தது. இனிமேல் இரண்டு நாட்கள் மற்றும் 12 மணி நேரம் வரை Delete For Everyone ஆப்சன் மூலம் மெசேஜ்களை நீக்கும் வசதியை வாட்ஸாப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இந்த வசதியை ஆன்ட்ராய்ட் மற்றும் iOS இரண்டிலும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாட்ஸ்அப் பாவனையாளர்கள் கொடுக்கும் தகவல்களைப் பாதுகாக்க உதவும் நோக்கத்தில் இன்னும் பல அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாவனையாளர்கள் வாட்ஸாப் குழு ஒன்றிலிருந்து ஏனைய உறுப்பினர்களுக்கு காட்சிப்படுத்தாமல் மிகவும் அமைதியாக விட்டுவிட வெளியேறவும் முடியும்

ஒரு பாவனையாளர் ஒன்லைனில் இருக்கும்போது அவர் ஒன்லைனில் இருப்பதை யார் பார்க்கலாம் என்ற கட்டுப்பாடுகளையும் இனி அமைக்கலாம்.

“ஒருமுறை பார்க்கவும்” அம்சத்தைப் பயன்படுத்தி செய்திகள் அனுப்பப்படும்போது ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதைத் தடுக்கும் முடியும்.

Address

Vavuniya Town

Alerts

Be the first to know and let us send you an email when தமிழில் தொழில்நுட்ப தகவல்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்:

Share