23/12/2025
ஏதாவது கடையிலிருந்து " பாவித்த தொலைபேசியை சந்தைவிலையிலும் பார்க்க குறைவான விலையில் வாங்குகிறீர்களா?.
இது தொடர்பில் கவனமாக இருங்கள்!!
நீங்கள் ஒரு கடைக்குச் செல்கிறீர்கள். அங்கு ஷோகேஸில் ஒரு தொலைபேசி உள்ளது. அது சந்தை விலையிலும் பார்க்க குறைவான விலையில் விற்பனைக்கு வைக்கப்படட்டுள்ளது அதற்கான ஆவணங்கள் ரிசிட்கள் பெட்டி எதுவும் இல்லை என விற்பனையாளர் கூறுகிறார் நான் தனிப்பட்ட உத்தரவாதம் தருவதாகவும் கூறி விற்பனை செய்கிறார் அதனை இலாப நோக்கை மாத்திரம் கருத்தில் கொண்டு அதனை வாங்குபவராக நீங்கள் இருந்தால் இதன் பின்னர் நீங்கள் அதிக சட்ட சிக்கல்களையும் தண்டனைகளையும் சந்திக்க நேரிடலாம் என அறிவீர்களா ?
இந்த தொலைபேசியை உங்களது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் காட்டினை பயன்படுத்தி பாவனைக்கு உட்படுத்தும் நாளிலிருந்து நீங்கள் ஒரு குற்றவாளியாக மாறுகிறீர்கள்
குறித்த தொலைபேசியினை யாராவது திருடிய பின்னர் அந்த உரிமையாளர் அதனை பொலீசில் தொலைபேசியின் IME இலக்கத்துடன் முறையிடும் போது அந்த தொலைபேசியில் திருட்டு சம்பவத்தின் பின்னர் பயன்படுத்தப்பட்ட சிம் தொடர்பான தகவல்கள் பட்டியலிடப்படும் இதனை பொலிசார் பயன்படுத்தி குறித்த ததொலைபேசியை பயன்படுத்தும் நபரினை அடையாளம் கண்டு கொள்வர் இதன் மூலம் பின்வரும் சிக்கல்களை சநேதிக்க நேரிடலாம்
இப்படி ஏன் நடக்கிறது? 👇
1. சட்டம்: திருடப்பட்ட பொருட்களை உடமையில் வைத்திருப்பது
நீங்கள் தொலைபேசியை விலைக்கு வாங்கியுள்ளீர்கள் ஆனால் அந்த போன் வேறொருவரிடமிருந்து திருடப்பட்டது என்றால், சட்டத்தின் முன்னால் நீங்கள் "திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர்" ஆகிறீர்கள்.
இலங்கை தண்டனைச் சட்டத்தின் 394 395பிரிவின் படி, திருடப்பட்டது என்று தெரிந்தும் அல்லது நம்புவதற்கு காரணம் இருந்தும் அதை பெறுவது கடுமையான குற்றம்.
யாரும்"எனக்குத் தெரியாது" என்று எளிதில் தப்பிக்க முடியாது. நீங்கள் குற்றமற்றவர் என்றால் அதனை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
2எவ்வாறு இதனை பொலிசார் கண்டுபிடிக்கின்றனர் ? தொலைபேசியை பரிகொடுதத்த நபர் புகார் செய்து Ime எண்ணை கொடுக்கிறார் .
பொலிசார் TRCSL ( இலங்கை தொலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ) வழியாக அந்த IME இலக்கமுடைய தொலைபேசில் பயன்படுத்திய சிம் எது என்று பார்ப்பதன் மூலம்.
நீங்கள் சிம் போட்டு தொலைபேசியை பயன்படுத்த ஆரம்பித்ததும் உங்களின் பெயர், முகவரி பதிவு செய்யய்டுகிறது .
தொலைபேசி வாங்குவதாக இருந்தால் புதிய அல்லது பெட்டி மற்றும் பற்றுச்சீட்டுடடைய தொலைபேசிகளை கொள்வனவு செய்து இவ்வாறான சிக்கல்களிலிருந்து பாதுகாப்பாய் இருங்கள்.
முடிந்தால் இதனைபகிருங்கள்.