Nenasala Alaveddy

Nenasala Alaveddy Improve IT and Communication Skills in Our Society.

05/05/2014
Wish you all a very Happy New Year...
14/04/2014

Wish you all a very Happy New Year...

kids programme
05/04/2014

kids programme

Start IT Training at  Nenasala Alaveddy join the April 2014 intake. Check out to see where you fit ..
15/03/2014

Start IT Training at Nenasala Alaveddy join the April 2014 intake.

Check out to see where you fit ..

பிறந்ததினம்
15/02/2014

பிறந்ததினம்

இன்று மாலை 3 மணியளவில் அளவெட்டி அறிவகத்தின் சார்பாக ஸ்ரீஹர்ஷனால் வடிவமைக்கப்பட்ட, கந்தரோடை தமிழ்க்கந்தையா வித்தியாசாலைக்...
30/01/2014


இன்று மாலை 3 மணியளவில் அளவெட்டி அறிவகத்தின் சார்பாக ஸ்ரீஹர்ஷனால் வடிவமைக்கப்பட்ட, கந்தரோடை தமிழ்க்கந்தையா வித்தியாசாலைக்கான இணையத்தளம் உத்தியோகபூர்வமாக உயர்திரு.த.குருகுலராஜா (கௌரவ அமைச்சர், கல்வி,பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம், வடக்கு மாகாணசபை, யாழ்ப்பாணம்.) அவர்களால் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உயர்திரு.மு.இராதாகிருஸ்ணன் (மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர், மாகாணக்கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

கந்தரோடை தமிழ்க்கந்தையா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்..

26/01/2014

கூகுள் நிறுவனம் மால்வேரிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும் வசதியுடன் கூகுள் க்ரோம் 32-ஆம் பதிப்பை வெளியிட்டுள்ளது.

நீங்கள் ஏற்கனவே கூகுள் க்ரோம் உலவியை நிறுவியிருந்தால் About பகுதிக்கு சென்றால் தானாக அப்டேட் ஆகும். இல்லையென்றால் google.com/chrome என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கூகுள் க்ரோம் 32 புதிய வசதிகள்

Tab Indicator:

google chrome 32

நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் ஆடியோ, வெப்கேம் ஆகியவைகள் செயல்பட்டாலோ, உங்கள் கணினியை டிவியில் தொடர்புபடுத்தியிருந்தாலோ அதன் குறியீட்டை tab-ல் தெரிந்துக் கொள்ளலாம்.

Malware பாதுகாப்பு:

malware notification

நீங்கள் இணையத்தில் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது மால்வேர் கோப்பு இருந்தால் அது பற்றி தானாகவே அறிவிப்பு செய்யும். Dismiss என்பதை க்ளிக் செய்து மால்வேரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர்களுக்கான மேற்பார்வை:

google users

கூகுள் கிறோம் ப்ரவ்சரில் தனித்தனியாக பல கணக்குகள் உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு கணக்கிற்கும் அவர்கள் எந்தெந்த தளங்களை பார்க்கலாம் என்று அனுமதி கொடுக்கலாம். மேலும் அவர்கள் எந்தெந்த தளங்களை பார்த்தார்கள் எனவும் கண்காணிக்கலாம்.

16/01/2014

இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா?

ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப
வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.
ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே செய்யலாம்.
இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
www.chrome.google.com
இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.
இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow OfflineMail என்பதை தேர்வு செய்யவும்.இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் னில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும்.
இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம் அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print,Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

Address

Alaveddi

Alerts

Be the first to know and let us send you an email when Nenasala Alaveddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nenasala Alaveddy:

Share