City net It Solutions Pvt

City net It Solutions Pvt thanks for visit our page and have a nice day

இவருக்கு கிழிக்க தான் இருந்த இப்பதான் நம்மட time
21/09/2024

இவருக்கு கிழிக்க தான் இருந்த இப்பதான் நம்மட time

Contact him
08/07/2024

Contact him

Hello, how are you? I am Fennie from HOGUO. (Shenzhen, China,13 years) Main products:Wall Chargers, Data Cables, Power B...
01/11/2023

Hello, how are you?
I am Fennie from HOGUO. (Shenzhen, China,13 years)
Main products:Wall Chargers, Data Cables, Power Banks, Earbuds, Car Chargers, and smartwatches.
I am looking for a national / area wholesaler or distributor. Do you buy these products?High quality and EXW prices.

Green parrot chick available.. 0754284300
01/03/2023

Green parrot chick available.. 0754284300

03/05/2022
55 " Wanda smart tv for sale in addalaichenai Price will be 2.lk negotiablenot the what's up afthethe inspection more de...
26/04/2022

55 " Wanda smart tv for sale in addalaichenai
Price will be 2.lk negotiablenot the what's up afthethe inspection more details what'app 0754284300

19/09/2021
02/09/2021
ஆதார வைத்தியசாலை: இடியப்பத்தின் சிக்கலை விடுவிப்போம்00000000000000000000000000000000000000000000000000000000 மிக நீண்ட ந...
12/07/2021

ஆதார வைத்தியசாலை: இடியப்பத்தின் சிக்கலை விடுவிப்போம்

00000000000000000000000000000000000000000000000000000000



மிக நீண்ட நாட்களின் பின் நமது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை மையப்படுத்தி பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசப்படும் அளவில் ஒரு பிரச்சினை எழுந்திருக்கிறது. அது இன்று முக்கிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்தச் சர்ச்சை தொடர்பில் ஊரின் முக்கியமான நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் கோணத்திலிருந்து கருத்துக்களை முன்வைத்திருக்கிறனர். செயற்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.



இந்த சர்ச்சை குறித்து பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு தரப்பும் தங்கள் பக்க நியாயங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றன. அனைத்துத் தரப்புகளின் கதைகளையும் தொகுத்து நாம் ஆராய்வது அவசியம். இதில் ஒரு தரப்பின் கதைகளை மட்டுமே கேட்டு முடிவெடுப்பது பக்கச்சார்பானதாக ஆகிவிடும். எனவே, முதலில் இந்தச் சர்ச்சையில் தொடர்பு பட்ட இரண்டு பிரதான தரப்பினதும் கதைகளை எடுத்துக்கொள்வோம். அதன் பிறகு ஏனைய தரப்புகளின் கதைகள் எந்த இடத்தில், இந்தச் சர்ச்சையோடு இணைகின்றன என்பதைப் பற்றி விவாதிப்போம்.



இந்த பிரச்சினையில் சம்மந்தப்படும் பிரதானமான தரப்புக்கள் இரண்டு. அதாவது, வெளிப்படையாக நமக்கு இந்தப் பிரச்சினையில் சம்மந்தப்படுவதாகத் தெரிகின்ற அல்லது காட்டப்படுகின்ற தரப்புகள் இரண்டே இரண்டுதான். ஒன்று, குற்றம் சுமத்தப்பட்டு வைத்தியசாலையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனக் கருதப்படும் தரப்பு. அது வைத்தியசாலையின் அத்தியட்சகர். அதாவது MS Dr.ஜவாஹிர். மற்றையது, குற்றம் சுமத்தும் தரப்பு. அது அக்கரைப்பற்றின் தற்போதைய (புதிதாக அமைந்த) வைத்தியர்கள் தொழிலாளர் சங்கம். அதாவது GMOA - Branch Union Akkaraippattu. இது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படும் அமைப்பு.



இந்த சர்ச்சையில் சம்மந்தப்படுவதாகக் கருதப்படும் ஏனைய தரப்புக்கள் “அதாஉல்லா தரப்பு” “அனைத்துப்பள்ளி வாயல்கள் சம்மேளனம்” மற்றும் “APEC international அக்கரைப்பற்று” மற்றும் உள்ளூர் அரசியல்வாதி என்ற மற்றுமொரு தரப்பு. (இந்தத் தரப்பு எது வென்று கட்டுரையில் சுட்டிக்காட்டுவேன்)



இதில் பிரதானமான தரப்புகளாகக் காணப்படும் இரண்டு தரப்போடும் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக உரையாடி அவர்களின் தகவல்களை அறிந்தேன். பிற தரப்புக்களோடும் தொலைபேசியூடாகவும், முகநுால் பதிவுகளூடாகவும் தகவல்களைத் திரட்டிக்கொண்டேன். தகவல்களைப் பெற்றுக்கொண்டால், அவற்றை வைத்து எப்படி ஆய்வு செய்வதென்றும், அவற்றில் உள்ள கதைகளை எப்படி அணுகுவதென்பதற்கு நான் சமூகவியல் ஆய்வு முறையையே பயன்படுத்துகிறேன்.

முதலில், இந்தப் பிரச்சினையில் குற்றம்சாட்டும் தரப்பான GMOA - Branch Union Akkaraippattu தரப்பில் இருந்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தொகுத்துக்கொள்வோம். ஏனெனில், இங்கு உற்றுக்கவனிக்க வேண்டியது முதலில் இவர்களின் பக்க கதைகளைத்தான். அண்மையில் அவர்கள் விடுப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் நிகழ்த்தியிருந்தனர். எனவே, ஏதோ சீரியசானதும் முக்கியமானதுமான பிரச்சினை இருக்கிறது என்றும், உடனே தீர்த்துவிட வேண்டும் என அவர்கள் கருதுவதாகத் தோன்றுகிறது. இந்தக் காரணங்களால் அவர்களின் குற்றச் சாட்டுகளைப் பார்ப்போம்.



சுருக்கமாக GMOA என இந்தத் தரப்பை ஒரு வசதி கருதிச் சுருக்கி அழைக்கிறேன். GMOA அவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிட்டிருந்த துண்டுப்பிரசுரத்திலுள்ள, MS யை ஏன் இடமாற்றக் கோருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளைக் கவனத்திற்கொள்வோம். ஏனெனில் இவைதான் பிரதானமான குற்றச்சாட்டுகளாக இருக்கும். இதன் பின்னர் ஏதும் கட்டுரைகளை எழுதும்போது, இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு மேலாக வேறு குற்றங்களும் இணைக்கப்படுமானால் அவை பிரதானமான குற்றச் சாட்டுகளாக இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்வது கடினமான ஒன்றல்ல.



GMOA வெளியிட்ட துண்டுப்பிரசுரம், “அடக்குமுறையின் உச்சத்தை தொட்டு அராஜக பரிபாலனம் மேற்கொள்ளும் வைத்திய அத்தியட்சகரின் செயற்பாடுகள் கடந்த நான்கரை வருடங்களாக இந்த வைத்தியசாலையை ஆட்டி பேயாட்சி செய்து கொண்டிருப்பதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே இந்த பகிஷ்கரிப்பைச் சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மேற்கொள்ளப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்ற பீடிகையோடு தொடங்குகிறது.



0 வைத்தியர்களுக்குப் பிரச்சினையாகத் தென்பட்டவை, வைத்திய அத்தியட்சகருக்கு பிரச்சினையாக தென்படவில்லை.

0 கொரோனா பற்றாளர்களைப் பராமரிக்க ஏற்பாடுகளைச் செய்வதற்குக் காலம் கடத்தியமை.

0 ஆண் பெண் கொரோன பற்றாளர்களை ஒரே அறைக்குள் வைத்து, ஒரே கழிப்பறைகளைப் பயன்படுத்தச் செய்தமை.

0 எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டிய வைத்தியசாலையை முன்னேற்றாது இருந்தமை.

0 சக ஊழியர்களை மதித்து உரையாடாமல் இருந்தமை.

0 மயக்கும் வைத்திய நிபுணரைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அலட்சியம் செய்து, ICU என்ற அதிதீவிர சிகிச்சைப் பிரிவை இயங்கச் செய்வதற்குக் காலம் கடத்தியமை.



இந்த ஆறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து இறுதியாக, “கடந்தகால அனுபவங்கள் மற்றும் நிகழ்கால நடைமுறைகளை வைத்துப்பார்க்கும் போது தொடர்ந்தும் இந்த வைத்திய அத்தியட்சகரோடு பயணிக்க முடியாது என்பதே எமது தீர்மானம். என்ற நிலைப்பாட்டோடு GMOA வின் இந்தத் துண்டுப்பிரசுரம் முடிவடைகிறது.



GMOA சார்பில் பேசியவரோடு, நான்கரை ஆண்டுகள் அடக்குமுறையின் உச்சம், அராஜக பரிபாலனம், பேயாட்சி என்றெல்லாம் கூறியிருக்கிறீர்களே, அவை இவ்வளவுதானா? இவை குறித்து நான்கரை வருடங்களாக ஏன் எந்த முறைப்பாட்டையும் செய்யவில்லை என்று கேட்டேன்.



முறைப்பாடுகள் பல செய்யப்பட்டிருக்கின்றன. அப்போது, வைத்திய அத்தியட்சகர் அவர்களுக்கு ஆதரவான சபைதான் இருந்தது. அதே நேரம், வைத்திய அத்தியட்சகருக்கு மிக நெருக்கமான நண்பரான அசயி நிரஞ்சன என்பவர், சுகாதார அமைச்சில் வடகிழக்கிற்கான செயலாளராக இருந்த காரணத்தால் இந்த முறைப்பாடுகள் மறைக்கப்பட்டன என்றார். தனித்தனி நபர்களாக முறைப்பாடுகளைச் செய்வதால், இத்தனைகாலம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருந்தன என்றார். தற்போது, ஊழியர் சங்கம், மற்றும் GMOA சங்கம் போன்றவற்றை நாங்கள் கைப்பற்றி வைத்திய அத்தியடச்கரக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம் என்றார்.

என்னவகையான நடவடிக்கைகளை இதுவரை எடுத்திருக்கிறீர்கள் என வினவினேன். சுகாதார அமைச்சுக்கு MS மீதான குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் அனுப்பினோம். அது போதாது உள்ளூர் அரசியல் வாதி ஒருவருடைய முறைப்பாடும் தேவை என்று சொல்லப்பட்டது. எனவே, APEC ஊடாக அதாஉல்லா சேரை சந்தித்து உதவி கேட்டோம். “நான் ஆதரவுமல்ல, எதிர்ப்புமல்ல. நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் இதில் தலையிடப்போவதில்லை என்றார்” பின்னர், நாங்கள் மொட்டுக்கட்சியின் அமைப்பாளர் நிஹாலைச் சந்தித்து அவரின் உதவியைப் பெற்றுக்கொண்டோம் என்று சொன்னார்.



அதுவும் போதாமல் இருந்தது. அக்கரைப்பற்றிலுள்ள சமூக நிறுவனம் ஒன்றின் கடிதம் தேவைப்பட்டது. எனவே, GMOA வால் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பினோம். பிரச்சினையை விளங்கிக்கொண்ட அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனம் கடிதம் தந்தது. அதையும் சுகாதார அமைச்சுக்கு அனுப்பினோம் என்றார். தற்போது, அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் கடித்ததில் அதன் செயலாளர் கையொப்பமிடவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக உத்தியோக பூர்வ தகவல்கள் கிடைக்கிறதே என்று மேலும் ஒரு கேள்வியைக் கேட்டேன். நாங்களும், செயலாளர் றகுமத்துல்லாஹ் அவர்களிடம் இது குறித்து வினவினோம். தான் ஏதோ அச்சத்தில் அந்த முறைப்பாட்டை செய்ததாக்கூறினார் என்றார்.



இத்தோடு இதை நிறுத்திக்கொள்கிறேன். இந்த வாக்குமூலங்களைக் கட்டுரையின் பிற்பகுதியில் குறுக்கு விசாரணை செய்வோம். இனி, குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஆதார வைத்தியசாலையின் MS Dr.ஜவாஹிர் அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், தனது நிலைப்பாடுகள் தொடர்பாகவும் என்ன சொல்கிறார் என இனிப்பார்க்கலாம்.



MS Dr. ஜவாஹிர் கடும் கூலாக உரையாடத் தொடங்கினார். உங்கள் மீது GMOA பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இடமாற்றம் செய்வதற்கான ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கியிருக்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர்கள் என்னை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது உண்மை. ஆர்ப்பாட்டம் நடாத்துவதும் உண்மை. ஆனால், அவர்கள் வைத்திருப்பது குற்றச்சாட்டுகள் அல்ல. அவர்கள்தான் அவற்றைக் குற்றச் சாட்டுகள் என நம்பியிருக்கிறார்கள் என்றார்.



வைத்தியர்களுக்கு பிரச்சினையாகத் தோன்றுவது உங்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டாக அவர்கள் நம்பும் ஒன்றை முன்வைத்திருக்கிறார்களே இல்லையா? ஆமாம் அவர்கள் சுட்டிக்காட்டும் விசயம் உண்மையானது. (குற்றச்சாட்டு அல்ல அது) வைத்தியசாலை என்பது பொது மக்களுக்குச் சேவை வழங்கும் ஒரு அரச நிறுவனம். அதாவது, பொதுமக்களுக்குச் சேவை வழங்கும் நிறுவனம். அந்தச் சேவையை வழங்கும் பணியில் ஈடுபடும் அரச சம்பளம் பெறும் ஊழியர்கள்தான் வைத்தியர்களும் பிற ஊழியர்களும். ஆகவே, பொது மக்களுக்குச் சேவை வழங்குவது பற்றித்தான் அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் என்ற வகையில் நான் யோசிக்க முடியும். அதுதான் எனது கடமை.



வைத்தியர்களுக்கும், பிற வைத்தியசாலை ஊழியர்களுக்கும் சேவை வழங்கும் ஒரு அரசாங்க நிறுவனமாக என்னால் வைத்தியசாலையை பார்க்க முடியாது. எனவே, அவர்களுக்குப் பிரச்சினையாக இருப்பதும், எனக்குப் பிரச்சினையாக இருப்பதும் வேறு வேறு விசயங்களாகத்தானே இருக்கும் இல்லையா? என என்னை நோக்கியே ஒரு கேள்வியை முன்வைத்தார்.



வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் போன்றோரிடம் அவர்களை மதித்து நடந்துகொள்வதில்லை என்றும், அடக்குமுறையும், அராஜகமும், கொண்ட உங்கள் நிருவாக அமைப்பு பேயாட்சியாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்களே? என்றேன். அதற்கு அவர், அரசாங்க சம்பளம் வாங்குபவர்கள், மக்களுக்குச் சேவை வழங்குபவர்கள் என்றவைகையிலும், ஒரு மேலதிகாரி என்ற வகையில் மிக கராராக நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு. உண்மையில் வேலையைச் சரியாகச் செய்பவர்கள் அதை ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லமாட்டார்கள். பலநூறுபேரை வைத்து ஒரு நிருவாகத்தை நடாத்தும் ஒருவர், அதுவும் சிறப்பாக மக்களுக்குச் சேவை வழங்கப்பட வேண்டும் என நினைக்கின்ற, நேர்த்தியான ஒரு சிஷ்டம் இருக்க வேண்டும் எனக் கருதும் எவரும் எப்படி நடந்துகொள்வாரோ அப்படித்தான் நான் நடந்துகொண்டேனே தவிர வேறு ஒன்றும் இதில் இல்லை. இது ஒரு குற்றச்சாட்டும் இல்லை.



கொரோன தொற்றாளர்களர்களைப் பராமரிப்பது தொடர்பான முன்னேற்பாடு, ICU என்ற அவசரச் சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்துவதில் தாமதமாக இருந்ததாக ஒரு குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளதே? என்றேன் அதற்கு அவர், “தாமதம்” என்பது குற்றச்சாட்டல்ல. அதைச் “செய்யவில்லை” என்றால்தான் குற்றச்சாட்டாக அமையும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவை என்னோடு மட்டுமே தொடர்புடைய விடயமல்ல. இது அவர்களுக்கும் தெரியும். என சுரக்கமாகப் பதிலளித்தார்.



உங்கள் காலத்தில் வைத்தியசாலையை எவ்வளவோ முன்னேற்றியிருக்க முடியும்? ஆனால் அதற்கு நீங்கள் முயலவில்லை என்றும் ஒரு குற்றச் சாட்டு உள்ளதே…



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உருவாக்கப்பட்டுப் பல வருடங்களுக்குப் பிறகுதான் நான் அங்கு வருகிறேன். ஆனால், ஒரு வைத்தியசாலைக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமானதும், அடிப்படையாதுமான ஒரு விசயம் அங்கே இருக்கவில்லை. வைத்தியசாலை நோயாளிகளுக்குச் சேவை செய்கின்ற நிறுவனம். எனவே, வைத்தியசாலையில் அமைந்திருக்க வேண்டிய சிஷ்டம் என்பது அவர்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அந்த சிஷ்டத்திற்கான முறை “waiting time” என அழைக்கப்படும்.



இது ஒரு நோயாளி எப்போது அட்மிட்டாகிறார். அவரை எப்போது ஒரு வைத்தியர் பார்வையிடுகிறார். அவருக்கான பணிகள் எப்படி நடக்கின்றன. அவர் எப்போது வைத்தியசாலையை விட்டுப்போகிறார். வைத்தியசாலையின் சேவையில் நோயாளிக்குத் திருப்தி இருக்கிறதா? போன்ற விசயங்களைப் பதிவு செய்யும் ஒரு முறை. இந்த சிஷ்டத்தைக்கூட நான் வந்த பிறகுதான் உருவாக்குகிறேன். இப்படி வைத்தியசாலையின் உள்ளக நிருவாகத்தில் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையிலும், வைத்தியசாலை நிருவாகத்தை இலகுவாகக் கையாளும் விதத்திலும் மாற்றியமைத்தேன்.



அது தவிர, பல விசயங்களைச் செய்திருக்கிறேன்.

Endoscopy

Laser machine

10 ICU beds

Pipeline medical gas system to NICU,


theatre and ICU
Completion of first floor of left wing

Completion of right wing 2nd floor

Ist phase completion of right wing 3rd floor

Seconds X-ray machine

CRS system to xray department

3rd dental chair
Started Histopathology department with consultant

Many national awards and presidential awards

CCTV system Started

3rd and 4ty theatre

Expansion of laboratory services with 15 million

Second lift allocation received

Established Mental health unit, Natpunilayam

Established eye clinic,

ENT clinic and skin clinic

Appointment of consultant Radiologist, Dermatologist, Histopathologist.

Cadre increased

Dialysis unit established

Hot water catering system established

Consultant longue

Hira land, front wall

Number of beds increased from 234 to 296

Post natal ward starte போன்றவற்றோடு

இலங்கையின் மூன்று தேசிய விருதுகளை நோக்கி வைத்தியசாலையைக் கொண்டு சென்றிருக்கிறேன். என்று சொல்கிறார்.

(இவற்றுக்கான புகைப்படங்கள் அனைத்தும் இந்தக் கட்டுரையோடு இணைக்கப்பட்டுள்ளது)



GMOA வின் வெளிப்படையான குற்றச்சாட்டாக இது இல்லாது போயினும் அரசல் புரசலாக ஒரு கதை உலவுகிறது. என்னிடம் அந்தக் கதை வந்து சேர்ந்தது. நான் எதையும் மறைப்பவனல்ல. எனவே, அது குறித்த கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். விரும்பினால் பதிலளிக்கலாம். அல்லது விட்டு விடலாம். அதற்காக நான் கேட்காமல் இருக்க முடியாது. “பெண்களைத் தொந்தரவு செய்வதாகத்தான்” அந்தக் கதை ……. சிரிக்கிறார். உங்கள் வெளிப்படையான அணுகுமுறை பிடித்திருக்கிறது எனச் சொல்கிறார். இப்படி ஒரு விசயம் இருந்தால் அதுதான் முதலாவது குற்றச்சாட்டாக அமைந்திருக்கும் அல்லவா? என்ற பதிலோடு நிறுத்திக்கொண்டார். எனக்கும் தோன்றிய விசயம்தான், அப்படி ஏதாவது சம்பவங்கள் இருப்பின், உங்களை இடம்மாறுவதற்கு முயல வேண்டியதில்லை. உங்கள் தொழிலையே பறிக்கும் சட்ட நடவடிக்கைகளுக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்று நானும் நினைத்ததுண்டு என்றேன்.



இடமாற்றம் செய்யும் கடிதம் வந்தால் என்ன செய்வீர்கள்? அப்படிக் கடிதம் அமைச்சிலிருந்து வரும் என நினைக்கிறீர்களா? என்று கேட்டேன். அமைச்சு என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால், அப்படி கடிதம் வந்தால் நான் இரண்டு விசயங்களை முக்கியமாகக் கவனிப்பேன். முதலாவது, எந்த ஸ்டேசனை பரிந்துரைக்கிறார்கள் என்பதைக் கவனிப்பேன். இரண்டு, என்ன குற்றச்சாட்டை அது முன்வைக்கிறது என்பதையும் கவனிப்பேன். குற்றச்சாட்டு ஏதும் கூறப்பட்டிருந்தால், அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நிரூபிப்பதற்கான எனது விருப்பத்தைக் கோருவேன். குற்றச்சாட்டுகள் இல்லாதபட்சத்தில், பொருத்தமான ஒரு ஸ்டேசன் பரிந்துரைக்கப்படுமானால் ஏற்றுக்கொள்வேன். இவ்வளவும்தான் இந்தக் கட்டுரைக்குத் தேவையானவை. (இவைகடந்தும் தனிப்பட்ட முறையில் நிறையப் பேசினோம்.)



MS ஆக இருப்பவரும், GMOA ஆல் குற்றம் சுமத்தப்பட்டவருமான Dr.ஜவாஹிர் அவர்களின் பதில்கள் ஒரு உயரதிகாரிக்கான தெளிவான பதில்களாக இருக்கின்றன. நிருவாகத்தைச் சீர்செய்வதில் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடித்ததாகக் கூறுவதில், கோபங்காரணமாக ஏசியிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. மற்றபடி, GMOA வெளியிட்ட துண்டுப்பிரசுரத்திலுள்ள பிரதான குற்றச்சாட்டுகள் உண்மையில் குற்றச்சாட்டுகளே அல்ல என்ற தோற்றத்தைத் தருகின்றன.



இப்போது, GMOA வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் உள்ள பிரதான குற்றச்சாட்டுகளைச் சற்று ஆழமாகக் கவனித்துப் புரிந்துகொள்வோம். அடக்குமுறையின் உச்சம், அராஜக பரிபாலனம், பேயாட்சி போன்ற அச்சுறுத்தும், உணர்ச்சியைக் கிளறும் சொற்களைப் பாவித்திருக்கிறார்கள். ஆனால், அப்படி என்ன விசயங்களை MS Dr. ஜவாஹிர் செய்தார் என்பதை அவர்கள் விளங்கப்படுத்தவில்லை.



நான்கரை வருடங்கள் பொறுத்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள், இனிமேலும் பொறுக்க முடியாத நிலையில்தான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் என்பது மிக அதிகம். அராஜக நிலைப்பாடு உள்ள ஒரு வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சேவைகள் சரியாக நடைபெற்றிருக்காது எனவே, இத்தனை ஆண்டுகள் பொறுத்ததினுாடாக நோயாளிகளுக்கு சரியானசேவையை வழங்காது போவதற்கு இவர்களும் துணைபோயிருக்கிறார்கள் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.



அதே நேரம், கடந்த நான்கரை வருடங்களும், GMOA சபையில் நான்கு பொடிகள் மாறி மாறி வந்திருக்க வேண்டும். அந்த நான்கு பொடிகளும் ஏன் எந்த முறைப்பாடுகளையும் செய்யாமல், MS சோடு இணங்கிப்போயின. அதாவது முறைப்பாடுகள் வராது இருந்தால் சிறந்த நிருவாகத்தைக் கடந்த நான்கரை ஆண்டுகளும் செய்திருக்கிறார் என்றுதானே பொருள்படும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் புதிய GMOA பொடி உருவான பிறகுதான் பிரச்சினைகள் வருகிறது எனில், என்ன காரணம். என்ற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா?



அமைச்சில் MS Dr ஜவாஹிருக்கு நெருக்கமான ஒரு செயலாளர் இருக்கிறார். அவர்தான் முறைப்பாடுகளை டிரெக்டரிடம் கொண்டு சேர்க்காமல் மறைக்கிறார் என்பது உண்மையானால், அப்படி அனுப்பப்பட்ட முறைப்பாடுகளை நிச்சயமாக வெளிக்கொண்டுவரவேண்டும். (வைத்தியசாலையில் எதற்கெடுத்தாலும் முறைப்பாடு செய்கின்ற ஒரு டொக்டர் இருக்கிறார். அவர் எந்தக்காலத்திலும் முறைப்பாடுகள் செய்தவர் என்று ஒரு செய்தியும் இருக்கிறது) அது தவிர வேறு ஏதாவது முறைப்பாடுகள் இருக்கிறதா? நான்கரை வருடம் பொறுக்க முடியாத அராஜக நிருவாகம் நடந்தது என்றால், குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அல்லது வாரத்திற்கு ஒன்று இப்படிக் கணைக்குப்பார்த்தால், சுகாதார அமைச்சில் முறைப்பாடுகளை வைப்பதற்கென்றே ஒரு தனி யுனிட்டைத் திறக்க வேண்டி வந்திருக்கும். அப்படி ஏதும் நடந்திருக்கிறதா?



இவர்கள் சொல்வதைப்போல, நெருக்கமான ஒரு செயலாளர் இருக்கிறார்தான். ஆனால், அவரோ முன்பு களுபோவில வைத்தியசாலையில் கடமை புரிந்தவர். கடந்த இரண்டுமாதங்களாகத்தான் சுகாதார அமைச்சில் பணிபுரிகிறார். எனவே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது, நன்கு வருடங்களும் நான்கு மாதங்களும் இவர்களால் அனுப்பப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் அங்கே இருக்க வேண்டும் அல்லவா? அவைகள் ஏன் இல்லாது போயின? அவற்றுக்கு ஏன் நடவடிக்கை எடுக்காது போயினர்? இப்படியான கேள்விகளை இது எழுப்புகிறதல்லவா?



இந்த கேள்விகளும், சந்தேகங்களும், விளக்கங்களும் இப்படியே இருக்க, ஊரிலுள்ள பிற அமைப்புகளும், அரசியல் வாதிகளும் இந்தச் சமாச்சாரத்தில் எப்படி வந்து நுழைந்தன என்ற கேள்வி முக்கியமானது. ஊரென்றால் நான், நான் என்றால் ஊர் என அடிக்கடி சொல்லி மார்தட்டும் அதாஉல்லா அவர்களும், மாநகர சபையின் மேயரான அவரது மகனும், ஊரின் மூலைமுடுக்கெல்லாம் என்ன நடக்கிறது எனக் கண்ணில் எண்ணையூற்றிக்கொண்டு கவனித்துக்கொண்டும், தமது உடைமைபோல ஊரைக் கைப்பற்றி வைத்திருக்கவும், வெளியே இருந்து யாரும் வந்து ஊரில் எதுவும் செய்யக்கூடாது என்ற கொள்கையை தமது இலட்சியமாக இதுவரை வரித்துக்கொண்டிருப்பது இந்தப் பிராந்தியத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் தெரியும். அதாஉல்லாவுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது என்றும் வெளியூர்களில் நம்பிக்கொண்டிருக்கும்போதும், அதாஉல்லாவின் கட்சியிலிருக்கும் ஒரு முக்கிய நபர் அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும்போதும், அங்கிருந்தும் ஒரு கடிதம் சுகாதார அமைச்சுக்கு போயிருப்பது வெட்ட வெளிச்சமான பிறகும், MS Dr ஜவாஹிர் மீது சுமத்தப்பட்டிருப்பவை குற்றங்களே அல்ல எனக் கருதக்கூடிய வகையில் இருப்பதாலும், இந்த இடமாற்றத்தை, அட்டாளைச்சேனை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

பிரதேச வாதம் என்றுதானே எடுத்துக்கொள்வார்கள். அதைத்தான் அந்த ஊர்மக்கள் செய்தனர். அதாஉல்லா எம்பியாக இல்லாத காலங்களில், MS ஆக இருந்த MS Dr ஜவாஹிர் ஆதார வைத்தியசாலைக்குச் செய்த முன்னேற்றங்கள் அனைத்தும் சகிக்க முடியாத துயரைக்கொடுத்தவைதான். உதாரணமாக, ஹிறா நிலத்தை எடுத்தபோதும், வைத்தியசாலையின் முன்பக்கச் சுவரை அழகுபடுத்தும் விதமாகக் கட்டும்போதும் பிரச்சினைகள் வந்தன. பொலிஸ் நிலையம்வரைச் சென்று மதில் கட்டுவதைத் தடுப்பதற்குத் தனது மகன் மேயரை வைத்து காய்நகர்த்தி அதில் தோற்றுப்போயும் இருந்தவர். எனவே, MS அவர்களை மாற்றுவதற்கு அவர் மனதில் வழமைபோல விரும்பம் இல்லாதிருந்திருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை அது அவர் மனதில் இருந்தது.



அக்கரைப்பற்றுக்கு அடுத்தபடியாக கொஞ்சம் வாக்குகள் இருக்கும் ஊர் அட்டாளைச் சேனைதான், அதனால்தான் இதில் நேரடியாக இறங்காமல், இன்று அவரின் பாதாளலோக குழுவாக இருக்கும் APEC என்ற குழுவை வைத்து காய்களை நகர்த்தினார். ஆதார வைத்தியசாலையில் நடந்த GMOA சபையின் அதிகார மாற்றத்திலும் ஊழியர்களுக்கான வெல்பெயார் சபையின் அதிகார மாற்றத்திலும் மறைவில் பங்கேற்றவர்கள் இந்தக் குழுவினர்தான். இந்தக் குழுவில் ஊருக்கான நலன் விரும்பிகள், பெருமைக்கு எதையாவது செய்ய விரும்புகிறார்கள், இதை வைத்து ஏதாவது ஒரு “அதிகாரக் குஞ்சை” பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையிலுள்ளவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். மனிதர்கள்தானே இல்லையா? ஆனால், இந்தக் குழுவை எப்படிப் பாவிக்க வேண்டும், எந்த அளவுவரை இடங்கொடுக்க வேண்டும் என்ற அதாஉல்லாவின் பாரம்பரிய திட்டங்களால் அணுகப்படுபவைதான்.



படித்தவர்கள் இடையிலான சண்டை அவர்கள் பார்க்கட்டும் என அதாஉல்லா சொன்ன வார்த்தை இந்தக் குழுவினருக்கு புரியவே இல்லை. ஆனால், MS Dr ஜவாஹிர் இடமாறப்பட்டால் நல்லதுதான் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. எனவே APEC இதை முயன்று வேலையை முடிக்க வேண்டும் என்பதுதான் இந்த அவர் சொன்ன வாக்கியத்தின் அறிவுறுத்தல். ஏனெனில், நான் ஆதரவும் இல்லை எதிர்ப்புமில்லை என்ற வாக்கியமே அதற்குச் சாட்சி. உண்மையில் சரியானதொரு அரசியல் தலைவராக இருந்தால், அவர்களிடம் ஏன் MS யை மாற்ற வேண்டும் என்ன பிழை அவன் செய்திருக்கிறான் எனக் கேட்டறிந்து உண்மையாகத் தவறு இருக்கும்பட்சத்தில் நானும் களத்தில் இறங்கி அவரை மாற்றுகிறேன் எனச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது, அவனிடம் தவறு இல்லை மாற்றும் முயற்சியைக் கைவிடுங்கள் என அறிவுறுத்தி புத்திமதி சொல்லியிருக்க வேண்டும். இதுதானே நியாயமானது. ஏன் அதைச் செய்யவில்லை? ஏன் என்றால் MS தவறு செய்திருக்காவிட்டாலும் மாற்றப்பட வேண்டும் என்ற மன நிலைதானே காரணம் இல்லையா?



(APEC பிரதானமாக அதாஉல்லாவுக்கு சேவை செய்யும் நிறுவனம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த தேர்தல், அதற்கு முன்பான தேர்தல்களுக்கெல்லாம் நிதி சேகரித்துக் கொடுத்தும், அதைப் பெருமையாகச் சொன்னதையும் நாமறிவோம்.)



கொரோனா தொற்று காலத்தை முன்வைத்து, கடிதம் அனுப்பும் புதிய பொறிமுறையை அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனம் உருவாக்கியிருந்தது. இது தெரிந்தும், (அந்தக் கடித வேலைகளில் APEC கிற்கும் தொடர்புண்டு என அறிய முடிகிறது) அந்தப் பொறிமுறைக்கமைவாக அனுப்பப்பட்ட கடிதத்தில் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் கையெழுத்திடவில்லை என்ற பீதியை அதாஉல்லாவின் தற்போதைய இடது கையான (அதாஉல்லா இடது கைப்பழக்கமுள்ளவர் என்பதால் அவருக்கு முக்கியமானது இடதுகைதான் என எடுத்துக்கொண்டு இதைச் சுட்டிக்காட்டுகிறேன்) தல்ஹா சீனிமுகம்மதை வைத்து செயலாளரின் கையொப்பம் போலியானது அவர் கையெழுத்திடவில்லை எனப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து,APEC யையும், GMOA குழுவினரையும், அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தையும் சங்கடத்திற்குள் ஆக்கியதை என்னவென்று சொல்வது. அதுவும் போதாமல், செயலாளரை பொலிஸில் முறைப்பாடு கூடச் செய்யவைத்து அல்லது செய்யும் நிலைக்குத் தள்ளியது, அட்டாளைச் சேனையில் எழுந்த எதிர்ப்புக்காக மட்டும்தானா? அப்படியிருந்தால் கூட இப்படியொரு செயலை ஒரு தலைவர் செய்வது நியாயமா?



GMOA மற்றும் APEC இருகுழுவினரிடமும் ஒப்படைக்கப்பட்ட அசைமென்ட் ஒரு கட்டத்தில் பலவகை சாத்தியங்களை ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. அவை அனைத்தையும் ஒரு கல்லில் கொஸ்சலாம் என்ற தந்திரோபாய உத்தியைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.



ஒரு பக்கம் தனக்குப் பிடிக்காத MS Dr.ஜவாஹிர் அவர்களின் இடமாற்றம் நடைபெறப்போகிறது. அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளரின் கையெழுத்து பிரச்சினையை கிளப்பிவிட்டால், இதை அதாஉல்லா செய்யவில்லை என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி அதைச் சமாளிக்கலாம். அடுத்து, மேயர் தருவதாகச் சொன்ன சபீஸை தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்ற காரணத்தை முன்வைத்து அதைக் கொடுக்காமல்விடலாம். அதோடு அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தையும் கலைத்து தலைமைப் பதவியையும் பறித்து, கட்சியைவிட்டும் நீக்கி ஓட்டாண்டியாகத் துரத்திவிடலாம். நாம சொன்னதைச் செய்யாமல் வாப்பாக்குமூத்த வேலை பார்க்கக் கிளம்பிவிட்ட APEC ற்கும் ஒரு பாடம் புகட்டலாம். நான் சொல்வதைச் செய்கின்ற பார்வையாளர்களாக மட்டும்தான் இருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் என்ன செய்வேன் என்பதை உணர்த்த நல்லதொரு சந்தர்ப்பம். அத்தோடு, நீங்களாகவே செய்து முடியுங்கள் என்று சொன்னதையும் மீறி, வேறொரு அரசியல் முகாமை நாடிச் சென்ற GMOA வையும் உறுக்கி வைக்கலாம் என எத்தனையோ சமாச்சாரங்கள் நிறைந்த ஒரு தருணத்தை அதாஉல்லாவைப் போன்ற தர்மமற்ற அரசியல் வாதி பயன்படுத்தாமலா போவார்?



அதைத்தான் சரியாகப் பயன்படுத்தினார். இவர்கள் அனைவருக்கும் இது புரியுமா? ஆனால், சபீஸை என்ன செய்ய வேண்டும் என நினைத்தாரோ அது நடக்கவில்லை என்பதே ஒரு முக்கியமான தோல்வி என்று சொல்லலாம். அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் என்றவைகையில் மிகத் தந்திரமான முறையில் ஒரு கடிதத்தை எழுதியிருந்துதான் அதன் காரணம். ஏற்கனவே, வைத்தியசாலை என வந்தபோது முற்றிலும் எதிரணி என இருந்தும், தவத்திற்கு ஒரு வைத்தியசாலையை அமைப்பதற்குத் தனது சொந்த இடத்தை வழங்கியிருந்தார் சபீஸ். இந்தக் கொரோனாக் காலத்தில் ஆதார வைத்தியசாலை சுமுகமாக இயங்க முடியாமல் முரண்பட்டு கிடக்கக்கூடாது என்றவைகையில், குற்றம் சுமத்தப்பட்ட, மற்றும் குற்றம் சுமத்திய இரண்டில் எந்த அணிக்கும் சார்பில்லாமல், இந்த முரண்பாட்டைத் தீர்த்து சுமுகமாக இயங்க வைக்குமாறு கோரி கடிதத்தை அமைத்ததோடு, மிகப் புத்திசாலித்தனமான காயை சபீஸ் நகர்த்தியிருந்தார். இதைக்கூட அறியாமல்தான் சபீஸை பலியிட முயற்சிகள் நடந்தேறின. அதுவும் தோல்வியில் முடிந்துவிட்டது. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஆனால், அந்தக் கடிதத்தின் ஒரு பிரதி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பது ஏற்கமுடியாததுதான்.

இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவெனில், அதாஉல்லாவுக்குத் தெரியாமல் பென்னாம்பெரிய மலை ஒன்று அக்கரைப்பற்றி உடைக்கப்படும் சம்பவம் நடந்தது என்பதாகும். அவருக்குத் தெரியாமல் ஒரு தலைமுடியைக்கூட புடுங்கமுடியாது. இத்தனை நாடகங்களின் பின்னாலும் மறைவிலிருந்து நடத்தியவர் ஒருவரேதான். ஆனால், அவர் கொடுத்த அசைமென்டையும் மீறி சில விசயங்கள் நடந்தன என்பதுதான் உண்மை. இவற்றில் தல்ஹா சீனி முகம்மது என்றவர் செய்த அனைத்தும் அதாஉல்லாவின் செயற்பாடே என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது.ஆதார வைத்தியசாலை: இடியப்பத்தின் சிக்கலை விடுவிப்போம்

00000000000000000000000000000000000000000000000000000000



மிக நீண்ட நாட்களின் பின் நமது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை மையப்படுத்தி பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசப்படும் அளவில் ஒரு பிரச்சினை எழுந்திருக்கிறது. அது இன்று முக்கிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்தச் சர்ச்சை தொடர்பில் ஊரின் முக்கியமான நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் கோணத்திலிருந்து கருத்துக்களை முன்வைத்திருக்கிறனர். செயற்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.



இந்த சர்ச்சை குறித்து பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு தரப்பும் தங்கள் பக்க நியாயங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றன. அனைத்துத் தரப்புகளின் கதைகளையும் தொகுத்து நாம் ஆராய்வது அவசியம். இதில் ஒரு தரப்பின் கதைகளை மட்டுமே கேட்டு முடிவெடுப்பது பக்கச்சார்பானதாக ஆகிவிடும். எனவே, முதலில் இந்தச் சர்ச்சையில் தொடர்பு பட்ட இரண்டு பிரதான தரப்பினதும் கதைகளை எடுத்துக்கொள்வோம். அதன் பிறகு ஏனைய தரப்புகளின் கதைகள் எந்த இடத்தில், இந்தச் சர்ச்சையோடு இணைகின்றன என்பதைப் பற்றி விவாதிப்போம்.



இந்த பிரச்சினையில் சம்மந்தப்படும் பிரதானமான தரப்புக்கள் இரண்டு. அதாவது, வெளிப்படையாக நமக்கு இந்தப் பிரச்சினையில் சம்மந்தப்படுவதாகத் தெரிகின்ற அல்லது காட்டப்படுகின்ற தரப்புகள் இரண்டே இரண்டுதான். ஒன்று, குற்றம் சுமத்தப்பட்டு வைத்தியசாலையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனக் கருதப்படும் தரப்பு. அது வைத்தியசாலையின் அத்தியட்சகர். அதாவது MS Dr.ஜவாஹிர். மற்றையது, குற்றம் சுமத்தும் தரப்பு. அது அக்கரைப்பற்றின் தற்போதைய (புதிதாக அமைந்த) வைத்தியர்கள் தொழிலாளர் சங்கம். அதாவது GMOA - Branch Union Akkaraippattu. இது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படும் அமைப்பு.



இந்த சர்ச்சையில் சம்மந்தப்படுவதாகக் கருதப்படும் ஏனைய தரப்புக்கள் “அதாஉல்லா தரப்பு” “அனைத்துப்பள்ளி வாயல்கள் சம்மேளனம்” மற்றும் “APEC international அக்கரைப்பற்று” மற்றும் உள்ளூர் அரசியல்வாதி என்ற மற்றுமொரு தரப்பு. (இந்தத் தரப்பு எது வென்று கட்டுரையில் சுட்டிக்காட்டுவேன்)



இதில் பிரதானமான தரப்புகளாகக் காணப்படும் இரண்டு தரப்போடும் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக உரையாடி அவர்களின் தகவல்களை அறிந்தேன். பிற தரப்புக்களோடும் த

அட்டாளைச்சேணை பிரதான வீதியில் வாகாணம் ஒன்றின் (motor bik)ஆவணம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது உரியவர் என்னை தொடர்பு கொண்டு பெற...
12/07/2021

அட்டாளைச்சேணை பிரதான வீதியில் வாகாணம் ஒன்றின் (motor bik)ஆவணம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது உரியவர் என்னை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளவும்
0758146022

11/07/2021

I cloud unlock accept

Address

City Net IT Solutions (PVT) LTD, Colombo/Batticaloa Road, Addalaichenai
Addalachenai
32350

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Saturday 08:30 - 12:00
Sunday 08:29 - 12:00

Telephone

+94754284300

Website

Alerts

Be the first to know and let us send you an email when City net It Solutions Pvt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City net It Solutions Pvt:

Share