07/09/2017
WiFi Spy Detectorஒரு அறிமுகம் - நம்மமுடைய WiFi எனும் கம்பியில்லா இணைப்பில் நம்மை யறியாமல் யார் இணைப்பு ஏற்படுத்தி கொண்டார்கள் என கண்டுபிடிப்பதுதான் மிகப்பெரிய தலைவலிபிடித்த செயலாகும் இவ்வாறான நிலையில் WiFi Spy Detector என்ற புதிய பயன்பாடு ஆண்ட்ராய்டு ,ஐஒஎஸ் ஆகிய இயக்கமுறைமைகள் செயல்படும் கைபேசிகளில் அவ்வாறான இணைப்பினை கண்டுபிடித்திட உதவுகின்றது இது Google Play Store என்ற பகுதியில் நாம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றது மிகமுக்கியமாக WiFi freeloaders என்பது நம்முடைய சொந்த தகவல்களை அபகரிக்க செய்கின்றது அதுமட்டுமல்லாது இந்தWiFi freeloaders எனும் செயலானது நம்முடைய வலைபின்னலின் செயல்வேகத்தை மிகமெதுவாக ஆக்கிவிடுகின்றது அதுமட்டுமல்லாது இந்த WiFi Spy Detector என்ற பயன்பாடானது இவ்வாறான இணைப்பிலுள்ள சாதனங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் நமக்கு வழங்குகின்றது இது நம்முடையWiFi இணைப்பில் உள்ளவர்கள் நம்முடைய குடும்ப உறுப்பினராஅல்லது நண்பர்களா அல்லது புதிய நபரா என்றவிவரத்தை நமக்கு அறிவிக்கின்றது இதன்வாயிலாக IP address, manufacturer, device name, MacAddress, Gateway, Network masc, and DHCP Server NSD.போன்ற விவரங்களை நாம் அறிந்து கொள்ளலாம் மேலும் game console, PC, tablet, or phone.போன்றவகை இணைப்பில் நம்முடைய WiFi இணைப்பு உள்ளதாவென்றும் அறிந்து கொள்ளலாம் அதன்பின்னர் கம்பியில்லா WiFi இணைப்பு கடவுச்சொற்களை மாற்றியமைத்திடவும் யார்யாரை எந்தெந்த வகையில் அனுமதிப்பது எனவும் அமைத்து கொள்ளலாம்.