விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் Virudhunagar, formerly known as Virudhupatti , Virudhunagar is administered by a municipality coveri VIRUDHUNAGAR DISTRICT DETAILS

20/02/2014

முதியோர் உதவித் தொகை கேட்டு குவியும் விண்ணப்பங்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் முதியோர் உதவித்தொகை கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது அதிகாரிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

காரியாபட்டி பகுதியில் உள்ள கிராமங்கள், பேரூராட்சிகளில் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக நடந்த முகாம்களில் ரேஷன் கார்டு திருத்தம், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

பட்டா, முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்றிதழ், உள்ளிட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். தற்போது இரண்டாம் கட்ட முகாம்கள் தொடங்கி உள்ளன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட ஊர்களிலேயே இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்கள் வந்தாலும் அதிகளவில் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள், முதியோர் ஆகியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்களே அதிகமாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே உள்ளூரில் நடந்த சிறப்பு முகாம்களில் தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களே மீண்டும் வந்துள்ளதாம். இது அதிகாரிகளுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அம்மா திட்டத்தில் தரப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். காரியாபட்டி பகுதி முகாம்களில் முதியோர் உதவித்தொகை கேட்டு அதிக விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அம்மா திட்ட முகாம் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரே ஊரில் நடத்தப்படும்போது கடந்த முறை மனு தந்த முதியோர் உதவித்தொகை மனுக்கள் மட்டுமே மீண்டும், மீண்டும் வருகிறது. மாவட்டத்தில் நடக்கும் எல்லா முகாம்களிலும் போதிய விழிப்புணர்வு இல்லமால் இருப்பதே இதற்குக் காரணம் என்றார்.

http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/02/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-/article2066514.ece

20/02/2014

ஆட்சியர் அலுவலகம் முன் காங். ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். வேலாயுதம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பாப்கான் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் சீனிச்சாமித்தேவர், மாவட்ட துணைத் தலைவர் ராஜலிங்கராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும், விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் பயிர்கள் கருதி விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், எனவே இம்மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் வட்டார காங்கிரஸ் தலைவர் செ.ராஜா, சிவகாசி வட்டாரத் தலைவர் சுப்புராஜ், அருப்புக்கோட்டை நகரத் தலைவர் கனகவேல் உள்ளிட்ட கங்கிரஸ் கட்சியினர் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/02/20/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D.-/article2066519.ece

16/02/2014

இலவச பொது மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சுகாதாரத் துறை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சா.இ.நா எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல், சர்க்கரைநோய் மற்றும் இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கபட்டது.உப்பத்தூர், நென்மேனி, நடுசூரன்குடி, நள்ளி, ஏழாயிரம்பண்னை ஆகிய அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள் மற்றும் விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளின் சிறப்பு மருத்துவர்களும் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சித்தா, இயற்கை மற்றும் யோக சிகிச்சைமுறை மருத்துவர்களும் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

செய்தி : தினமணி

http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/02/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article2058827.ece

16/02/2014

மாநில சதுரங்கப் போட்டி

விருதுநகரில் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடந்த சதுரங்கப் போட்டியை தொழிலதிபர் ஜெய்சிங் துவக்கிவைத்தார். சென்னை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 270 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1000 ம் மற்றும் சுழற் கேடயம் ஆகியன வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகள் விருதுநகர் செஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி : தினமணி

http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/02/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article2058871.ece

Address

Virudunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when விருதுநகர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share