AVM Computers

AVM Computers This page is about the business products new and used selling by A.V.M. Computers, Tiruvannamalai

What the hell is this K7 Computing Private Limited. I bought your product by paying cash. How dare you daily show a pop ...
23/07/2024

What the hell is this K7 Computing Private Limited. I bought your product by paying cash. How dare you daily show a pop up screen, that even I cannot close it. Why should I buy your product when the old product is more than 100 days validity.

This is absolutely against the consumer rights. How can you compell the customer to go to your website and order the purchase. No one in you sales team doesn't understand that this compulsion on customer will lead to avoid your products in future. One of my customer came to me and asking to uninstall K7TS and request to install any other anti-virus product, since it is annoying him daily.

If you wish to show the notification, show it as notification not as a popup that cannot be closed without click and go to your website. A customer screen is not your advertisement billboard at free of cost and dragging them to your website to insist them to upgrade your product is legally punishable.

K7 Computing Private Limited
Tiruvannamalai Computer Technology Association - Tvmcta
India Consumer Complaints

உலகத்துக்கே லீவ் விட்ட தெய்வம் . எங்கே இருந்தாலும் நல்லா இருடா தம்பி.
19/07/2024

உலகத்துக்கே லீவ் விட்ட தெய்வம் . எங்கே இருந்தாலும் நல்லா இருடா தம்பி.

பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் ஏதாவது கேள்விக் கேட்டால், பதிலை சொல்லுவோம். திருப்பி அவர் விடை சரியா என்றுக் கேட்டால்,...
02/04/2024

பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் ஏதாவது கேள்விக் கேட்டால், பதிலை சொல்லுவோம். திருப்பி அவர் விடை சரியா என்றுக் கேட்டால், விடையை மாற்றி சொல்லுவோம். நம்ம chatgpt கூட அப்படித்தான் போல. ஒரே கேள்வியை ரெண்டு தடவைக் கேட்டால், ரெண்டாவது தடவை வேறு ஒரு விடையை சொல்லி விடுகிறது.

chatgpt : "ஏம்பா நான் சரியாத்தானே பேசுறேன்."

TANGEDCO இந்தப் பதிவுக்கு சிலர் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். உண்மையில் stabilizer மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறதா அல்...
05/03/2024

TANGEDCO இந்தப் பதிவுக்கு சிலர் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். உண்மையில் stabilizer மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறதா அல்லது வீணாக்குகிறதா? என்பது கேள்விக்குரியதாகிறது. Stabilizer எப்படியா மின்சாரத்தை மிச்சப்படுத்தும், அதன் வேலை மின்சாரத்தை சீர்ப்படுத்துவது மட்டும் தானே? என்றுக் கேட்பவர்களுக்கு - 'மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என்றே சில stabilizerகள் விளம்பரம் செய்கின்றன. Load இல்லாதபோது மின்சாரம் செலவழியாது என்பது தானே electrical தத்துவம். ஆமாம். ஆனால் ஒவ்வொரு மின் சுற்றுக்கும் (electrical circuit) அது தன வேலையை செய்வதற்கு சிறிது மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். அது அந்த மின்சாதனத்தில் உள்ள மின் பொருட்களைக் கொண்டு மாறுபடும். Stabilizerகளில் transformer இருப்பதால், மின் விரயம் சிறிது அதிகமாக இருக்கும். பொதுவாக stabilizerகளில் 2% முதல் 5% வரை இருக்கும். அவ்வளவு தானே என்று நினைக்காதீர்கள். இரு மாதங்களுக்கு 69 யூனிட் செலவாகும்.

-->https://www.youtube.com/watch?v=7qNTtX5_h5U

இது ஒரு stabilizer எதனுடனும் இணைக்கப்படாமல் இருக்கும் போது விரயமாவது. இப்போது வரும் ஏ.சிக்கள் in-built stabilizer உடன் வருகின்றன. எனவே அந்த stabilizerஉம் மின்சாரத்தை உபயோகப்படுத்தும். அப்போது குறைந்தப்பட்சம் இரு மடங்கு அதாவது 140 யூனிட்கள் மின் விரயம் ஆகும்.

மேற்க்கூறிய மின் விரயங்கள், நீங்கள் ரிமோட் மூலம் ஏ.சியை நிறுத்தி விட்டு stabilizerஐ ஆனில் வைத்திருக்கும் போது ஆகும் மின் விரயம். எனவே, ஏ.சியை ரிமோட்டில் நிறுத்தியப் பின் அதன் கதவுகள் மூடிய பின், உங்கள் சுவரில் உள்ள சுவிட்ச்சை ஆப் செய்ய மறக்காதீர்கள்.

இந்த வருட GST வரலாறு காணாத வருமானம் என்று ஒரு அறிவிப்பு இந்த வருட கடைசியில் வரும் பாருங்க. நாமளும் தேசப் பற்று மேலோங்க ச...
22/12/2023

இந்த வருட GST வரலாறு காணாத வருமானம் என்று ஒரு அறிவிப்பு இந்த வருட கடைசியில் வரும் பாருங்க. நாமளும் தேசப் பற்று மேலோங்க சட்டை காலரை மேல் தூக்கிக் கொள்வோம். ஆனால், இதற்கு பின்னால் மிகப் பெரிய சோகம் இருக்கிறது. எத்தனை தொழில் முனைவோர்களை இந்த பெருமை காலில் கீழ் வைத்து நசுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

GST என்பது ஒவ்வொரு வியாபாரியும் அவருடைய லாபத்தில் 18% வரியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது தான் சட்டம். GST வந்த புதிதில் நீங்கள் வாங்கும் நபர் உங்களிடம் வாங்கிய GST தொகையினை கணக்குக் காட்டியிராவிட்டால், அவர்கள் உங்களுக்கு கொடுத்த GST பிடித்தம் செய்த பில்லை காண்பித்து நீங்கள் அந்த வரியை உங்கள் வரித்தொகையிளிருந்து கழித்துக் கொள்ளலாம் என்று இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் நாம் பொருட்களை வாங்கிய நபர் GST கணக்கை தாக்கல் செய்துள்ளாரா என்று cross check செய்ய எந்த வழியும் இல்லாமலிருந்தது. ஒரு வருடம் கழித்து gstயில் இருந்து ஒரு மெயில் வரும். அதில் நாம் பொருட்கள் வாங்கி நாம் கணக்கு காண்பித்து, ஆனால் நமக்கு போர்ட்களை விற்றவர்கள் கணக்கு காண்பிக்காமல் விட்ட பில்களை தொகுத்து விளக்கம் கேட்கும். நாம் நாம் வாங்கிய பில்களை சமர்ப்பித்து கணக்கை சரி செய்துக் கொள்ளலாம். இதில் பிரச்சினை என்பது கொரொனோ காலத்தில் வந்தது. நிறைய கம்பனிகள், கடைகள், சிறு தொழில்கள் கடையை மூடி விட்டார்கள். அவர்கள் நமது கணக்கில் GST பிடித்தம் செய்த பில் இருக்கிறது. ஆனால் அவர்கள் வரி கட்டாமல் தொழிலை மூடி விட்டு சென்று விட்டார்கள். சிலர் இறந்தும் விட்டார்கள்.

இப்போது அந்த எல்லா கடைகளுக்கும் GST நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. 3,4 வருடங்களுக்கு முன் நீங்கள் input credit எடுத்து உங்கள் வரியில் கழித்துக் கொண்ட தொகையை நீங்கள் வாங்கிய நிறுவனம் கணக்கில் காண்பிக்கவில்லை எனவே அந்த வரிப்பணம் அதற்கு தண்டனை பணம், அதற்கு வட்டி என அந்த வரிப்பணத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று நிறைய பேருக்கு நோட்டிஸ் வந்துள்ளது. சிலருக்கு லட்சங்களில், சிலருக்கு கோடிக்கு அருகில் இந்த நோட்டிஸ் வந்துள்ளது. அதை தான் முதலிலேயே கணக்கு காண்பித்து ஒரிஜினல் பில்லையும் கான்பித்தோமே, நாங்கள் இந்த வரியை எங்களுக்கு சப்ளை செய்தவரிடம் கொடுத்துவிட்டோம். அவர் கட்டவில்லையெனில் அவரைத்தானே கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, 'அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு பணம் வரவில்லை, எனவே கட்டுங்கள்.' என்ற ஒற்றை பதில் தான் வருகிறது.

ஒரு சின்ன கணக்கு.

பொருள் உற்பத்தி விலை - 1000.00 GST - 180
தேசிய விநியோகிஸ்தர் - 1100.00 GST - 198-180=18
மாநில விநியோகிஸ்தர் - 1200.00 GST - 216-198=18
பகுதி விநியோகிஸ்தர் - 1300.00 GST - 234-216=18
நகர விநியோகிஸ்தர் - 1400.00 GST - 252-234=18
கடை - 1500.00 GST - 270-252=18

இப்போது இந்த 1500 ருபாய் பொருளுக்கு 252 ரூபாய் வரி செலுத்தியாகி விட்டது. நடுவில் இருந்த நகர விநியோகிஸ்தர் கொரொனோ நேரத்தில் விநியோகம் செய்ய முடியாததால், படு நஷ்டமாகி நிறுவனத்தை மூடி விட்டார். பெரும்பாலானோர் இறந்து விட்டார்கள். அதனால் அந்த நிறுவனம் GST கட்டாமல் விட்டு விட்டார்கள். இப்போது கடைக்காரருக்கு நோட்டிஸ் வந்துள்ளது. அந்த நகர விநியோகிஸ்தர் உங்கள் பில்லை கணக்கு காட்டவில்லை. எனவே, அந்த பொருளுக்கான வரி ருபாய் 180, தண்டனை 180, வட்டி 100, ஆக மொத்தம் ரூபாய் 460/- கட்ட வேண்டும்.

இது ஒரு பொருளுக்கான வரி. 100 ருபாய் லாபத்திற்கு 460+18=478 ரூபாய் வரி கட்ட வேண்டும் என்றால் என்னாவது? ஒருவருக்கு இது போன்று 50 லட்சம் வரி பாக்கி வந்துள்ளது. அவர் அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க ஆரம்பிக்க, அரசு அவரது நிறுவன வங்கிக்கணக்கை முடக்கி வைத்துள்ளது. பொருட்களை வாங்க அவர் பணம் அனுப்ப முடியவில்லை. சம்பளம் கொடுக்க முடியவில்லை. வட்டிக்கு வெளியே வாங்கினால் நிறுவனத்தை மேலும் நடத்த முடியாது. வேறு வழியில்லை. நிறுவனத்தை மூடி விட்டார். 30க்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் நிற்கிறார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் கேஸ் போடலாம். எத்தனை வருடங்கள் ஆகுமென்று தெரியாது. ஒரு சில வக்கீல்கள் வெற்றி பெறலாம் என்கிறார்கள். ஒரு சிலர் வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள். அப்படியே கோர்ட்டிற்கு போனாலும், அதற்கும் நாம் முன்கூட்டியே ஒரு அமௌண்டை கோர்ட்டில் கட்டியாக வேண்டும். சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு அது சாத்தியம் இல்லாத ஒன்று.

வணிக சங்கங்கள் இதற்கு ஒரு கூட்டு முயற்சி செய்தாக வேண்டும். அல்லது மாநில அரசாங்கமாவது இதை கையில் எடுக்க வேண்டும். இல்லாவிடில் நேர்மையாக வரி செலுத்துபவர்கள் தொழில் செய்ய முடியாமல், ஏமாற்றுபவர்கள் தான் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை வந்துவிடும்.

வணிகர்கள் இனிமேல் GSTR2A சரி பார்த்த பின் GST கட்டுவது தான் சிறந்த


Acer Aspire 4720 laptop with Intel Core2Duo T5250 (1.50GHz) Processor, 120 GB HDD, 3 GB RAM, 14.1"W Acer CrystalBrite LC...
27/05/2023

Acer Aspire 4720 laptop with Intel Core2Duo T5250 (1.50GHz) Processor, 120 GB HDD, 3 GB RAM, 14.1"W Acer CrystalBrite LCD Display, DVD Writer, Wifi, Gigabit LAN, Card Reader, We**am, Doulby Sound System, Bluetooth, Modem, Origional Acer Adapter, New Battery with 3 months warranty.

Price : 6000/-

திருவிழா சலுகைகள்.K7 Total Security. 1.    ஒரு வருடத்திற்கு ஒரு கணினிக்கு ரூ.500/-ல் இருந்து ரூ. 100/- குறைத்து ரூ. 400/...
23/09/2021

திருவிழா சலுகைகள்.

K7 Total Security.

1. ஒரு வருடத்திற்கு ஒரு கணினிக்கு ரூ.500/-ல் இருந்து ரூ. 100/- குறைத்து ரூ. 400/-க்கே.

2. 12 மாதங்களுக்கு பதில் 15 மாதங்கள் உபயோகப்படுத்தலாம். (3 மாதங்கள் இலவசம்).

3. உங்கள் மொபைலுக்கு K7 Mobile Security இலவசம்.

மேலும் சலுகைகளுக்கு அழைக்கவும் 99522 22520

Address

1, Tirukoilur Road Lane, Opp : Meenakshi Theatre
Tiruvannamalai
606601

Opening Hours

Monday 10am - 1:30am
Tuesday 10am - 1:30pm
5pm - 7:30pm
Wednesday 10am - 1:30pm
5pm - 7:30pm
Thursday 10am - 1:30pm
5pm - 7:30pm
Friday 10am - 1:30pm
5pm - 7:30pm
Saturday 10am - 1:30pm
5pm - 7:30pm
Sunday 10am - 1:30pm

Alerts

Be the first to know and let us send you an email when AVM Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AVM Computers:

Share