UpRigg Innovation

UpRigg Innovation "Empowering digital growth with virtual assistance and online learning. 🚀"

செயற்கைக்கோள் உற்பத்தி தொழில் :------------------R. முஹம்மது அனஸ் B.E (ECE), B.Sc (Psy)+91 86080 33532----------------வி...
29/12/2023

செயற்கைக்கோள் உற்பத்தி தொழில் :-
-----------------
R. முஹம்மது அனஸ் B.E (ECE), B.Sc (Psy)
+91 86080 33532
----------------
விண்வெளி துறையில் இஸ்ரோவை போலவே நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன அவற்றிடம் சேட்டிலைட் ஏவுவதற்கான ராக்கெட்டுகள், ராக்கெட்டை ஏவும் பூஸ்டர் தொழில்நுட்பம், சாட்டிலைட் தயாரிக்கும் தொழில்நுட்பம் என அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது.

அவற்றில் முக்கிய பங்காற்றி வரும் இரண்டு தனியார் நிறுவனத்தை பற்றியும் அதில் இருக்கும் உயர் கல்வி, வேலைவாய்ப்பு , ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.

1. Pixeel , பெங்களூரு
------------------

2018 ஆம் ஆண்டு பெங்களூரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

இதுவரை இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் X நிறுவனத்தின் மூலம் டெமோ சேட் 1, சகுந்தலா மற்றும் ஆனந்த் என்ற மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளனர்.

ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்றால் என்ன?

ஒரு இலையை நமது மொபைல் போனில் படம் பிடிக்கும் பொழுது நமக்கு RGB என்று அலை நீளங்களை கொண்ட இமேஜ் கிடைக்கும், இதன் மூலம் இந்த படத்தில் உள்ளது இலை என்று நாம் தெரிந்து கொள்ளலாம்

ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜ் முறையில் அதே இலையை படம்பிடிக்கும் போது அந்த இலையில் உள்ள நியூட்ரிஷியன் கன்டென்ட் , குளோரோஃபில், கனிம வளங்கள் (பொட்டாசியம், மாங்கனீசு Etc...) போன்ற தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்லும் பொழுது அவற்றில் ஏற்படும் கசிவுகளையும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம்

இதுவரை இந்த தொழில்நுட்ப செயற்கைகோள்கள் அரசு சார்பில் மட்டுமே அனுப்பப்படும் அந்த தகவல்கள் அனைத்தும் நாட்டின் அரசு நிறுவனங்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்கு மட்டும் கொடுக்கப்படும்.

கூகுள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் இதுவரை pixeel நிறுவனத்தில் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன 2024 ஆம் ஆண்டின் கடைசிக்குள் 30 தொடர் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதை இலக்காக கொண்டுள்ளது இந்நிறுவனம்.

2. Skyroot Aerospace , ஐதராபாத்
------------------

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமான SKYROOT AEROSPACE 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, தங்களின் ரக்கெட்களுக்கு தேவைப்படும் ப்ரொபெல்லர் முதல் டிசைன் வரை அணைத்தும் இவர்களின் சொந்த தயாரிப்பு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி Dr. அப்துல் காலம் அவர்களின் நினைவாக தங்களின் ப்ரொபெல்லர்களுக்கு கலாம் - 80 என்று பெயரிட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பங்களான 3டி பிரின்டிங் , கார்பன் பைபர் இலைகள் போன்றவற்றை தங்களின் ராக்கெட்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

இதுவரை இவர்கள் விக்ரம் - s , விக்ரம் - I , விக்ரம் - II , விக்ரம் - III என்ற நான்கு ரக்கெட்களை தயாரித்துள்ளனர்

விக்ரம் - s
-------------

நவம்பர் 18, 2022 அன்று விக்ரம் - S ராக்கெட் வெற்றிகரமாக இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. 80 kg எடையை விண்ணில் 100 km தொலைவிற்கு ( வெப்ப அடுக்கு - Thermosphere ) வரை எடுத்து சென்று தனது முதல் முயற்சியில் சாதனை படைத்தது.

விக்ரம் -s ராக்கெட்டில் மூன்று செயறகைக்கோள்கள் இடம்பெற்றன 1. அர்மேனிய நாட்டின் BAZOOMQ, 2. சென்னையை சேர்ந்த SPACE KIDZ INDIA 3.ஆந்திராவை சேர்ந்த N-SPACE TECH ஆகிய நிறுவனங்களின் செயற்கை கோள்கள் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டன.

விக்ரம் - I, II, III
-------------------
அதிகபட்சமாக 480 kg எடையுள்ள செயற்கோள்களை 500 km தொலைவில் LIO (Low Inclination Orbit) ஆர்பிட்டிலும் 290 kg to எடையுள்ள செயற்கோள்களை 500 km தொலைவில் SSPO (Sun Synchronous Polar Orbit) ஆர்பிட்டிலும் செலுத்தும் திறன் கொண்டது.

விக்ரம் - II மற்றும் III ராக்கெட்டுகள் முறையே 595 kg எடையுள்ள செயற்கைக்கோளை to 500 km (LIO) தொலைவிலும் , 815 kg to எடையுள்ள செயற்கைக்கோளை 500 km (LIO) தொலைவிற்க்கும் எடுத்து செல்லும் திறன் கொண்டது.

எங்கு படிக்கலாம்?
------------------------

ராஜஸ்தான் , கோவா மற்றும் ஐதராபாத் இல் உள்ள BITS - Pilani (Birla Institute of Technology & Science) கல்வி நிறுவனத்தில் Pixxel நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உவைஸ் அஹமது அவர்கள் படித்துள்ளார். இந்த நிறுவனத்தில் பனிரெண்டாம் வகுப்பிற்கு பின்பு எப்படி படிப்பது என்று பார்க்கலாம்

Birla Institute of Technology And Science, Pilani (BITS Pilani)
------------------
பாடப்பிரிவு :-
------------
இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலையில் கணிதம் , உயிரியல் , பொருளாதாரம் , இயற்பியல் , வேதியியல் பாடப்பிரிவுகள் உள்ளன, டூயல் டிகிரி படிக்கும் வாய்ப்புகளும் இங்கு உள்ளது

தகுதி தேர்வு :-
--------------
பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் / வேதியியல் / கணிதம் உள்ளிட்ட பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்

வருடம் ஒருமுறை நடத்தப்படும் BITSAT எனும் எனும் நுழைவு தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கான தேர்வு மையம் சென்னை மற்றும் கோவை யில் உள்ளது மத்திய அரசின் NCERT படப்பிரிவுகளின் 11 மற்றும் 12 வகுப்பு புத்தகத்தில் இருந்து கேள்விகள் இடம் பெரும். 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் BITSAT தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்

மத்திய, மாநில அரசின் பொது தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெறவதன் மூலம் இங்கு சேரலாம்

மேலும் விவரங்களுக்கு https://www.bitsadmission.com/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

வேலைவாய்ப்பு ?
------------------
Pixxel நிறுவனத்தில் ஆப்டிகல் , எலக்ட்ரிகல் , எலக்ட்ரானிக்ஸ் , மெக்கானிக்கல் , ஏரோஸ்பேஸ் போன்ற துறைகளிலும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களுக்கு பணி வாய்ப்புக்கள் உள்ளது.

தற்போது இந்த நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்து கொள்ள https://www.pixxel.space/careers என்ற இணையதளத்தினை பார்வையிடவும்

மேற்காணும் நிறுவனத்தில் உள்ள அறிவை அடிப்படையாக (Knowledge Based) கொண்டு பணிக்கு முன்னுரிமை கொடுத்து உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். நீங்களும் சமூக ஆழுமை ஆகலாம்....

உயர் கல்வி ஆலோசனைகளை பெற https://wa.link/hld2ob இணைப்பை கிளிக் செய்யவும்.

30/11/2023

நீங்கள் வெப் டிசைனிங் இல் ஆர்வம் உள்ளவரா?
Government Laptop வைத்து website செய்ய முடியுமா?
🚀 Unleash Your Web Design Journey with Confidence! 🌐✨
Ready to transform your aspirations into a thriving web design career? Say goodbye to confusion and embrace a seamless learning experience! 🚀
⏳ Don't waste another moment on scattered tutorials! Your journey begins now with our exclusive course in தமிழ் (Tamil). 🎓🔧
🔗 Join Now: 7010598529
🌟 Why Choose Our Course ?
🎯 Learn Web Design STEP by STEP with Limited Skills
❌ No Prior Experience Required
❌ No Coding Knowledge Needed
✔️ Start Designing Websites Like a Pro, Right Away!
🔍 What You'll Discover in 90 Minutes:
✅ How to Kickstart Your Web Design Journey
✅ Key Factors for Creating Stunning Websites
✅ Web Designing Opportunities in the Digital Era
🖥️ WordPress: Your Gateway to Success!
Powering over one-third of the web, WordPress holds a 40% market share. 🌐 Millions trust it globally to craft beautiful websites effortlessly.
🚨 Don't Miss Out on This Digital Wave!
❌ Stop Trial & Error
❌ Stop Wasting Time on Unproductive Web Design
✔️ Learn to Build Professional Websites without Writing a Single Line of Code!
📲 Secure Your Spot Now!
Join our course : 7010598529
Ready to redefine your future in web design? Sign up now and unlock the doors to a world of possibilities! 🌈💻
See you on the inside! 🚀

"Empowering digital growth with virtual assistance and online learning. 🚀"

வெப்சைட் பண்ணி சம்பாதிக்கலாம் வாங்க.....
11/09/2022

வெப்சைட் பண்ணி சம்பாதிக்கலாம் வாங்க.....

நீங்களே ஒரு குட்டி ரோபோவை வடிவமைக்க வேண்டுமா?Call pannunga 7010598529----------------------What is MICROBOT (MBOT)A robo...
07/09/2022

நீங்களே ஒரு குட்டி ரோபோவை வடிவமைக்க வேண்டுமா?

Call pannunga 7010598529
----------------------

What is MICROBOT (MBOT)

A robot 🤖 that brings people of all ages closer to technology. Through hands-on making you learn the logical connection between mechanical components, electronics and code. MBOT is truly open source in both hardware and software, encouraging anyone in the world to invent their own versions, adding more functions and features. MBOT makes robotics easier and effective for a variety of grade levels, age groups and subjects.

Building robots is fun, easy, and can be done by nearly anyone when you have the right tools in front of you. Our course guides you through the tools and techniques you will need to get started building robots.

What MICROBOT Stater Can Do

1) MBOT is an interactive robot that anyone can make.

2) MBOT can walks, dances, makes sounds and avoids obstacles.

3) Completely open source, Arduino compatible, 3D printable and create an inclusive environment for all kids.

4) Suitable for Educational STEM and introduction to robotics projects

Meta verse என்றால் என்ன? உலகில் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் தனது இணை நிறுவனங்களான வாட்ஸாப்ப், இன்ஸ்டாகிராம் போன்றவற்...
08/01/2022

Meta verse என்றால் என்ன?

உலகில் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் தனது இணை நிறுவனங்களான வாட்ஸாப்ப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றுடன் ஒரே குடையின் கீழ் இருந்த போதும் இந்த நிறுவனங்களின் பொதுப்பெயராக ஃபேஸ்புக் என்பதே புழக்கத்தில் இருந்தது. இன்டர்நெட்டின் அடுத்த புரட்சிக்கு ஃபேஸ்புக் தயாராகி விட்டதை குறிக்கும் வகையில் அதன் தாய் நிறுவனத்திற்கு 'மெட்டா' எனும் புதிய பெயரை அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் அறிவித்தார்

அதனைத் தொடர்ந்து 'மெட்டா' என்ற பெயர் குறித்து சமூக வலைதள மற்றும் நாளேடுகளில் மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதுதான் எதிர்கால தொழில்நுட்பம் என பல தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறிவரும் நிலையில் மெட்டா எனும் மெட்டாவெர்ஸை குறித்து ஒரு சிறிய செய்தி தொகுப்பு

தற்போதைய உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக உலகில் எந்த முலையில் உள்ள ஒருவரை கூட தொடர்பு கொண்டு அவருடன் வாட்ஸாப்பில் சாட் செய்யலாம், பேசலாம், வீடியோ காலில் அவரை பார்க்க கூட செய்யலாம் இதை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனால் எப்படி இருக்கும்.

இப்போது உங்கள் மனதில் ஒரு விஷயம் தோன்றும் 'இதுக்கு மேல இன்னும் என்னபா இருக்கு இனிமே நேர்ல தான் போய் பேசணும்' ஆம் நீங்கள் நினைத்தது சரியே. நேரில் சென்று தான் பேச போகிறோம் அதற்காக நீங்கள் விமானமோ, பேருந்தோ பிடித்து செல்ல வேண்டியது இல்லை வெறும் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸை (VR Glass) அணிந்து கொண்டால் போதும் நீங்கள் பேச விரும்பும் நபர் உங்கள் கண் முன் தோன்றுவர் நீங்கள் அவர் முன் தோன்றுவீர்கள் நீங்கள் இருவரும் பேசலாம்.

நாம் இன்னும் அடுத்த கட்டம் சென்றால் என்ன ஆகும்.உங்கள் கற்பனை குதிரையை சற்று ஓட விட்டு பாருங்களேன். இன்னும் நாம் செய்யாமல் இருப்பது நமக்கென ஒரு உலகத்தை உருவக்காதது தான். தற்போது அதற்கான முயற்சியில் தான் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், மேஜிக் லீப் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.இன்னிலையில் ஃபேஸ்புக்கும் தனது பங்கிற்கு பத்து பில்லியன் டாலர் முதலீடு மற்றும் ஆயிரக்கணக்கான பணியாட்களுடன் 'ஃபேஸ்புக் விர்ச்சுவல் லேப்ஸ்' என்ற பெயரில் பெரும் ஆர்வத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்னர் களத்தில் இறங்கியது. இதன் தற்போதைய வடிவமே மெட்டாவெர்ஸ் இதன் சுருக்கத்தை தான் மெட்டா என்று தன்னுடைய நிறுவனத்தின் புதிய பெயராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தையை முதன் முதலில் நீல் ஸ்டெபன்ஸன் (Neal Stephenson) என்ற எழுத்தாளர் 'ஸ்நோ க்ராஷ்' என்ற தனது புத்தகத்தில் பயன்படுத்தியிருப்பார். 'மெட்டாவெர்ஸ்' என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'ரெடி ப்ளேயர் ஒன்' படத்தில் வரும் OASIS-ஐ கூறலாம். இந்தப்படம் 2045-ல் நடப்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நிஜ உலகில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபட OASIS என்ற விர்சுவல் உலகத்தில் மக்கள் வாழ்வார்கள். இதுவே மெட்டாவெர்ஸுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸை (VR Glass) அணிந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாத செயல்களை எல்லாம் விர்ச்சுவல் உலகில் செய்யலாம். இதுதான் இதுவரை மெட்டாவெர்ஸூக்கு இந்த உலகம் அளித்திருக்கக்கூடிய பொருள்.

சரி நாம் மேலே பேசிக்கொண்டிருந்த விசயத்திற்கு வரலாம் விர்ச்சுவல் உலகத்தை உருவகிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் அப்படி என்ன இருக்க போகிறது.நாம் தினசரி காணும் உலகம் பல்வேறு அம்சங்களை கொண்டது ஒரு மனிதன் தன்னுடைய ஒரு நாளில் பள்ளி கல்லூரிக்கு சென்று படிப்பான், அலுவலகம் சென்று வேலை பார்ப்பான், வார இறுதி நாட்களில் பொழுதினை போக்குவதற்கு சினிமா, கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி போன்ற இடங்களுக்கு செல்வான் இது தான் அவனுடைய இன்றைய உலகம். இவை அனைத்தயும் தான் விர்ச்சுவல் உலகில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு தோன்றும் ஐயம் சரியே. இது எப்படி சாத்தியம் இதே கேள்வியை நாம் தொழில்நுட்ப உலகிடம் பல முறை கேட்டு விட்டோம் முதலில் எங்கயோ இருக்கும் ஒருவரிடம் எப்படி பா பேச முடியும் என்றோம் போன் வந்தது பின்னர் அது சாதாரண விஷயம் ஆனது. பேசியது கூட சரி எப்படி பா பார்க்க முடியும் என்றோம் வீடியோ கால் முறை வந்ததது அதே போல் தான் இந்த மெட்டாவெர்ஸூம்.

இதையெல்லாம் பார்த்தால் உலகம் இன்னும் மேம்பட்டு நன்றாக இருக்க போவது போல தோன்றலாம் ஆனால் அப்படி அல்ல நிறவேற்றுமையில் துவங்கி உடல் இயக்க கோளாறு, உண்மையான உலகிற்கும் விர்ச்சுவல் உலகிற்குமான இடைவெளி குறைவு போன்ற பல்வேறு சிக்கல்கள் இதில் உள்ளன.

என்னோட business கு website வேணுமா வேணாமா? website இருந்தா என்ன use?இந்த மாறி சந்தேகம் உங்களுக்கும் இருக்கா கீழ இருக்க bu...
08/01/2022

என்னோட business கு website வேணுமா வேணாமா?

website இருந்தா என்ன use?

இந்த மாறி சந்தேகம் உங்களுக்கும் இருக்கா கீழ இருக்க buttonஅ கிளிக் பண்ணி whatsapp பண்ணுங்க நாங்க சொல்றோம்

நீங்களும் சுலபமாக ஒரு Website ஐ உருவாக்க வேண்டுமா?கிழே இருக்கும் link ஐ கிளிக் செய்து whatsapp இல் தொடர்பு கொள்ளுங்கள்
08/01/2022

நீங்களும் சுலபமாக ஒரு Website ஐ உருவாக்க வேண்டுமா?

கிழே இருக்கும் link ஐ கிளிக் செய்து whatsapp இல் தொடர்பு கொள்ளுங்கள்

Address

RVE South Main Road, Kangeyam Main Road
Tirupur
641604

Alerts

Be the first to know and let us send you an email when UpRigg Innovation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share