Annamalai NET CAFE

Annamalai NET CAFE "Enjoy the High speed internet..." Enjoy the beauty of life

12/10/2014

பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என
தெரிகிறது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.இதேபோல், பள்ளி துப்புரவாளர் பணியிடமும், கணிசமான எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், கல்வித்துறை வட்டாரம் கூறுகிறது.

இதுகுறித்து, அந்த வட்டாரம், மேலும் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை எனில், 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; அதிக கல்வித்தகுதி எனில், வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின், மாவட்ட அளவிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கும். இது குறித்த, விரிவான வழிகாட்டுதல் அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

ஆய்வக உதவியாளர் பணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கலாம் என்பதால், இந்த பணிக்கு, கடும் போட்டி ஏற்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை, 50 லட்சத்திற்கும் மேல் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி, 10ம் வகுப்பு என்பதால், கிட்டத்தட்ட பதிவு செய்தோர் அனைவருமே போட்டியில் இருப்பர். பதிவு மூப்பு அடிப்படையில் பார்த்தாலும், இந்த பணியைப் பெற பல லட்சம் பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த பணியைப்பெற கடும் முயற்சியை மேற்கொள்வர் என தெரிகிறது.

02/05/2014
தென்மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி....கர்நாடகாமாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ர...
02/05/2014

தென்மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி....

கர்நாடகாமாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் வொர்க் ஷாப், ரயில் சக்கர ஆலை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 333

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

Fitter - 178

Machinist - 15

Turner - 20

Welder - 83

Electrician - 24

Ref A/C Mechanic - 13

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 11.04.2014 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in. என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Personnel Officer/Recruitment,

Railway Recruitment Cell,

Divisional Office Compound, HUBLI- 580020.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.05.2014.

மேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrchubli.in. என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ரேடார் மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி.....கொச்சின் பல்கலைக்கழகத்தின் செயல்படும் Atomspheric Rader Research மையத்தில் கீழ்...
02/05/2014

ரேடார் மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி.....

கொச்சின் பல்கலைக்கழகத்தின் செயல்படும் Atomspheric Rader Research மையத்தில் கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Resarch Scientist

காலியிடம்: 01

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Atmospheric Sciences/Electronics/Physics பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Electronics and Communication பாடத்தில் முதல் வகுப்பு எம்.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Radar Operation/Signal Processing/Atmospheric Dynamics பிரிவில் ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Research Associate
காலியிடம்: 01

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Atmospheric Sciences/ Space Physics

Atmospheric Sciences/ Space Physics பாடத்தில் முதல் வகுப்பில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். Radar Related Instrumentation/Signal Processing/System Development/Atmospheric Modelling துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Technical Assistant/Skilled Assistant

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.25,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எம்.காம் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.Tally மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். Radar Equipment கொள்முதல் Radar Centre நிர்வாகம் ஆகியவற்றில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் க்ல்வித்தகுதி, பணி அனுபவம் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தங்களைப்பற்றிய முழு விவரம் அடங்கிய பயோ டேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2014

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Advanced Centre for Atmospheric Radar Research, Department of Atmospheric Sciences, Cochin University of Science and Technology Lakeside Campus, Fine Arts Avenue, Cochin - 682016.

கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி...!தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செயல்பட்டு வரும் மத்திய அ...
02/05/2014

கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி...!

தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரீய வித்யாலயா வித்யாலயா பள்ளியில் PGT,TGT,PRT பணிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 04 மற்றும் 05 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணிகள் விவரங்கள்:

1.PGT ஆசிரியர் பணி:

a. English
b. Hindi

c. Economics
d. Physics
e. Maths

f. Computer Science
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

2.TGT ஆசிரியர் பணி:

a. Hindi

b. Sanskrit

c. Maths

d. Social Science
e. Science
கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

3.PRT

4. Computer Instructor
5. Coaches for Sports, Music & Dance, Yoga

6. Tamil

7. Doctor
8. Counsellor
9. Nurse

கல்வித்தகுதி: தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள், அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் காலம்:

பணி 1,2 மற்றும் 3 பணியிடங்களுக்கு 04.05.2014 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

பணி 4 முதல் 9 பணியிடங்களுக்கு 05.05.2014 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு http://www.kv2madurai.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் பணிபுனேயில் செயல்பட்டு வரும் ராணுவ மருத்துவ கல்லூரியில் (AFMC) M...
01/05/2014

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் பணி

புனேயில் செயல்பட்டு வரும் ராணுவ மருத்துவ கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. MBBS படிப்பை முடித்தவர்கள் இந்திய மருத்துவராக பணி அமர்த்தப்படுவர்.

பணி: MBBS

கால அளவு: 41/2 வருடம் படிப்பு மற்றும் 1 வருட பயிற்சி

காலியிடம்: 130 இதில் 10 இடங்கள் SC/ST பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.

மொத்த காலியிடங்களில் ஆண்களுக்கு 105, பெண்களுக்கு 25.

கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் அடங்கிய +1 பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பி.எஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: +2 தகுதி அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள் 17 முதல் 22 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பி.எஸ்சி பட்டதாரிகள் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். அதாவது 01.01.1991-க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 31.12.2014 தேதியின்படி நிர்ணயிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் CBBE - ஆல் அகில இந்திய அளவில் நடத்தப்படும் AIPMT 2014 நுழைவுத் தேர்வின் அடிப்படையில் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவர்.

AIPMT தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.afmc.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும்.

AIPMT-2014 தேர்விற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள்: 13.05.2014

எழுத்துத் தேர்வில் முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் English Language, Comprehension, Logic and Reasoning, Psychological Assessment போன்ற தகுதிகளை பரிசோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். இதற்கு ஆன்லைன் முறையில் பதில் அளிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை எஸ்பிஐ கிளைகளில் பணமாக செலுத்தவும். பணம் செலுத்துவதற்கான செல்லானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பக் கட்டண செல்லானை 19.05.2014-க்கு முன்பாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 20.05.214-ஆம் தேதிக்கு முன்பாக கட்டணத்தை செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.afmc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2014

மேலும் விண்ணப்பதார்ரகளுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.afmc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

life is ours.....!!
27/04/2014

life is ours.....!!

hai frds............!!!
27/04/2014

hai frds............!!!

Address

VOC Street, JAYAMANGALAM
Theni
625603

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Telephone

04546-237365

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annamalai NET CAFE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share