Net zone swamimalai

Net zone swamimalai internet browsing centre& designer

30/10/2024
ஸ்ரீ மாருதி இ -சேவை மையம் -சுவாமிமலை-----------------------சுவாமிமலையில் ஆதார் சிறப்பு முகாம் -----------------------நாள...
27/10/2024

ஸ்ரீ மாருதி இ -சேவை மையம் -சுவாமிமலை
-----------------------
சுவாமிமலையில் ஆதார் சிறப்பு முகாம்
-----------------------
நாள் : 28.10.2024 -திங்கள்
29.10.2024 -செவ்வாய்
30.10.2021-புதன்

ஆகிய 3 தினங்களுக்கு மட்டும்

இடம் : நியூ மங்கள மஹால் - பேஷ்வா தெரு -சுவாமிமலை
-----------------------

தேவையான ஆவணங்கள்

ஆதார் புதிதாக எடுக்க (இலவசம்)

1.பிறப்பு சான்று அசல்
2.தாய் அல்லது தந்தை ஆதார் அட்டை
-----------------------

கைரேகை மற்றும் புகைப்படம் மாற்ற (ரூ.100)
1.ஆதார் அட்டை
-----------------------
மொபைல் எண் மாற்ற (ரூ .50)

1. ஆதார் அட்டை
2.மொபைல் எண்
-----------------------
பிறந்த தேதி மாற்ற (ரூ .50)

1.பிறப்பு சான்று
2.பாஸ்போர்ட்
3.10/12 வகுப்பு மதிப்பென் சான்று
4.அரசு ஊழியர் அடையாள அட்டை
-----------------------
பெயர் மாற்ற (ரூ .50)

1.புகைப்படத்துடன் கூடிய மாற்று சான்று (TC )
2.புகைப்படத்துடன் கூடிய சாதி சான்று
3.புகைப்படத்துடன் கூடிய 10/12 வகுப்பு மதிப்பென் சான்று
4.பான் கார்டு
5.பாஸ்போர்ட் (காலாவதி ஆகாதது )
6.ஓட்டுநர் உரிமம்
7.ரேஷன் அட்டை (குடும்பத்தலைவர் மட்டும் )
8.வாக்காளர் அட்டை
-----------------------
முகவரி மாற்ற (ரூ .50)

8.வாக்காளர் அட்டை
7.ரேஷன் அட்டை (குடும்பத்தலைவர் மட்டும் )
5.பாஸ்போர்ட் (காலாவதி ஆகாதது )
4.பஞ்சாயத்து தலைவர் அல்லது VAO சான்று
5.திருமண சான்று

ஆவணங்கள் அனைத்தும் அசல் தேவை ,மேலும் ஆதார் திருத்தும் செய்ய வேண்டுவோர் நேரடியாக முகாமிற்கு வர வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ மாருதி இ -சேவை மையம்
(மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையம்)
சுவாமிமலை

7200253531
8903169073
9790525101
--------------------------

சுவாமிமலை ஸ்ரீ மாருதி இ - சேவை மையத்தின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைய கீழ்கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை க்ளிக் செய்து குழுவில் இணையலாம்.

WhatsApp Group Invite

28/07/2013
உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 . ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட...
04/03/2013

உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 . ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது? காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தான் இந்த நாள் உலக சிட்டுக்குருவிகள் நாளாக 2010-ம் ஆண்டிலிருந்து மார்ச் 20 அன்று நினைவுறுத்தப்படுகிறது.


மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.


உலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது.

முதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.

பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.

சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.

முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.

இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.

முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறது?அதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.

மிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்?

மூன்றாவதாக, உணவுக்குத்தான் இப்படிப் போராட்டம் என்றால் மனிதனின் குறுகிய சிந்தனையின் விளைவாக கான்கிரீட் காடுகளாகிவிட்ட நிலையில் சிட்டுக்குருவிகள் எங்கே போய் வீடு கட்ட முடியும்? அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிய வீடுகள், எப்போதும் மூடியே இருக்கும். முழுவதும் மூடிய வீட்டுக்குள் எப்படி இவைகள் புதுக்குடித்தனம் புகுந்து குடியிருக்க முடியும்?

நான்காவதாக, இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத்தால் அங்குதான் சிட்டுக்குருவிகளுக்கு காத்திருக்கிருக்கிறது பேரதிர்ச்சி.

மனிதனின் நாகரிக வளர்ச்சியில் கைப்பேசி பிரதானமாகிவிட்டது. இவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. மாநகரங்கள், நகரங்களில் கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு கைப்பேசி கோபுரங்களில்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.

கைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியிடப்படும் "மின்காந்தக்' கதிர்வீச்சுகள் பறவைகளின் முட்டைகளை அதன் கருவிலேயே பதம் பார்த்து வருவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

கைப்பேசிக் கோபுரங்கள் வெளியிடும் மிகக் குறைந்த அளவு கதிரியக்க அதிர்வலைகள் 900 முதல் 1,800 மெகாகர்ஸ். இவை மைக்ரோ அலைகள் என்று சொல்லக்கூடிய மின் காந்த அலைகள் என அழைக்கப்படுகின்றன.

இவை முட்டையின் மேல் தட்டின் கடினத்தன்மையை முற்றிலும் பாதித்து ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கைப்பேசிக் கோபுரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவை பறவையினத்துக்கும் தேனீக்களுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாகின்றன.

ஏனெனில் பறவைகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவை. இந்த மின்காந்த அலைகள் பறவைகளின் உணர்வுத் திறனைப் பாதித்துத் தவறாக வழிகாட்டி தங்கள் உணவைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுத்தி மற்ற உயிரினங்களுக்கு எளிதில் உணவாக்கி விடுகின்றன.

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாம்தான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு நம் மண்ணையும், நம் வாழ்வையும் நஞ்சாக்கி வருகிறோம்.

அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தானியங்கள், கொஞ்சம் தண்ணீர். அவை உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒரு சிறிய பெட்டி. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நாட்டுச் செடிகள். மரம் நடும்போது மறந்தும் அழகுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேற்றிடத்து மரங்களை நட வேண்டாம். பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அறவே தவிர்த்திடுவோம். இயற்கை முறையில் பயிரிட முயல்வோம். இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் அவசியத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை இதில் ஈடுபடுத்துவோம்.

கிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

சிட்டுக்குருவிகள் என்னும் இந்த சின்னத் தேவதைகள் தங்கள் வீட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என திடமாக நம்பினார்கள். இது கோடைகாலம் ஆதலால் சிட்டுக்குருவிகள் முதல் மற்ற பறவைகள் வரை உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்துப் போகின்றன. இந்த அடைக்கலத்தான் குருவிகள் மனிதரிடம் அடைக்கலம் வேண்டி நம் வீட்டின் கதவைத் தட்டி நிற்கின்றன. இவ்வளவு கஷ்டங்களிலும் இந்தச் செல்லச் சிட்டுகள் நம்மிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் செலவில்லாத சின்ன விஷயங்களை மட்டும்தான்.

நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.

01/08/2012

TAMIL MOVIE MADHUBANA KADHAI A new Tamil Movie in the Name of Madhubhana Kadai produced by Mantej Media Productions, Directed by Kamalakannan, kami Baskaran,...

13/05/2012
ஜென் துறவி ஒருவரிடம் அவரது சீடர், ""விவாதத்தாலும் வார்த்தைகளாலும் கடவுளை நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.""நிழல் என...
13/05/2012

ஜென் துறவி ஒருவரிடம் அவரது சீடர், ""விவாதத்தாலும் வார்த்தைகளாலும் கடவுளை நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
""நிழல் என்றால் என்னவென்று பார்வையற்ற ஒருவனுக்கு விளக்கும் முயற்சிதான் அது'' என்றார் குரு

wish u happy new year to all.......
31/12/2011

wish u happy new year to all.......

30/12/2011

Tamil song Ilamai itho itho from Sakala kalaa vallavan Music : Ilaiyaraaja Singer: S.P.Balasubramaniam (SPB) Actor: Kamal hassan

ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6...
30/12/2011

ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் புத்தகங்கள் பிரித்து அச்சடிக்கப்பட உள்ளன.

முப்பருவ முறையின்படி, 7, 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு இனி 2 புத்தகங்களை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் பிரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட உள்ளன. பிற வகுப்பு மாணவர்களுக்கு இப்போதுள்ளது போல் 5 முதல் 6 புத்தகங்கள் வரை வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட உள்ளன.

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, முழுக் கல்வியாண்டுக்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்கள் தீர்க்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றவாறு பாட நூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்குப் பரிந்துரையை அனுப்பியிருந்தது.

அந்தப் பரிந்துரையை ஏற்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

= ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களைக் கணக்கிடும்போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன.

= 1 முதல் 6 வகுப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

= 1, 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய 4 பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். 3, 4, 5, 6 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.

= 7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தைத் தொகுதி-1 எனவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலைத் தொகுதி-2 எனவும் ஒரு பருவத்துக்கு இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படும்.

= தமிழ் வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டு வழிகளுக்கும் மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கும் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

= சிறுபான்மை மொழிப்பாடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்கள் அந்தந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சேர்த்து அளிக்கப்படும்.

= சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அந்தந்த மொழி சார்ந்த மொழிப் பாட நூல் தனியாக வழங்கப்படும். அது மூன்றாகப் பிரிக்கப்படாமல் ஆண்டிற்கு ஒரு புத்தகமாகவே, இப்போது நடைமுறையில் உள்ளதைப் போலவே வழங்கப்படும்.

= பாடப்புத்தகங்களை "ஏ 4' அளவில் அச்சிடுவதன் மூலம் பாடவாரியாக ஒருங்கிணைப்பது எளிதாக அமையும்.

= 9, 10 வகுப்புகளுக்கு முப்பருவ முறை 2012-13-ல் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதால் பழைய முறையைப் பின்பற்றி பாடநூல்களை அச்சிட்டு வழங்க வேண்டும்.

ஆசிரியர் கல்வி வாரியத்தின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றவாறு பாடநூல்களைப் பிரித்து அச்சிட தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்று ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 6.5 கோடி புத்தகங்கள்: இந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்கு 150 பதிப்பாளர்கள் வரை இறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புத்தகங்களை அச்சிடும் பணி ஜனவரி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.

சமச்சீர் புத்தக ங்கள்: வரும் கல்வியாண்டில் சமச்சீர் புத்தகங்களில் உள்ள குறைகளை நீக்கி பிழைகளற்ற புத்தகங்களாக அச்சிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் தொடங்கி மார்ச் மாதத்துக்குள் அச்சிடும் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி ஆண்டின் தொடக்க நாளிலேயே: அனைத்து மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டின் தொடக்க நாளிலேயே பிழையில்லாத, தரமான புத்தகங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



வகுப்புவாரியாக ஒவ்வொரு பருவத்துக்கும் மாற்றியமைக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை விவரம்:

இப்போதைய ஒருங்கிணைக்கப்பட்ட புத்தகங்கள்

1. 4 (368 பக்கங்கள்) 1 (138 பக்கங்கள்)

2. 4 (432 பக்கங்கள்) 1 (154 பக்கங்கள்)

3. 5 (640 பக்கங்கள்) 1 (228 பக்கங்கள்)

4. 5 (632 பக்கங்கள்) 1 (225 பக்கங்கள்)

5. 5 (680 பக்கங்கள்) 1 (243 பக்கங்கள்)

6. 5 (608 பக்கங்கள்) 1 (243 பக்கங்கள்)

7. 5 (1024 பக்கங்கள்) 2 (190 பக்கங்கள்)

8. 5 (1152 பக்கங்கள்) 2 (220 பக்கங்கள்)

தமிழக பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 16-ல் தொடக்கம்.இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி தொடங்க உள...
30/12/2011

தமிழக பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 16-ல் தொடக்கம்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி தொடங்க உள்ளது.

சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். ஏப்ரல் 27 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, பிளஸ் 2 தேர்வு மார்ச் முதல் வாரத்திலும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் கடைசி வாரத்திலும் தொடங்கும். சமச்சீர் கல்வி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்குகிறது.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்குகளால் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிப்பதில் இந்த ஆண்டு தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் முழுமையாக நடத்தி முடிக்கவும், அனைத்துப் பாடத்திட்ட மாணவர்களும் பொதுப்பாடத்திட்டத்துக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கவும் வழக்கத்தைவிட மூன்று வாரங்கள் தாமதமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

75 சதவீதங்கள் பாடங்கள் முடிவு: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் இதுவரை 75 சதவீதப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக, டிசம்பர் மாதத்துக்குள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் நடத்தி முடிக்கப்படும். அதன்பிறகு, பொதுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக தேர்வுகளும், திருப்புதல் தேர்வுகளும் (ரிவிஷன் டெஸ்ட்) நடத்தப்படும்.

இந்த ஆண்டு பெரும்பாலான பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பாடங்கள் ஜனவரி கடைசி வாரத்திலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோதான் முடிக்கப்படும் என்று தெரிகிறது. அதன்பிறகுதான், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு உள்ளிட்டவற்றை நடத்தி அவர்களைப் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டியுள்ளது.

அதோடு, பொதுப் பாடத்திட்டத்தின் படி, மாநில பாடத்திட்ட மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வும் எழுத வேண்டும்.

கல்வி அதிகாரிகள் பரிந்துரை: செய்முறைத் தேர்வு நடத்தவும், செய்முறைத் தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கவும், திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் வசதியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் அண்மையில் நடந்த கூட்டத்தில் பரிந்துரைத்தனர்.

இந்தப் பரிந்துரைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து அட்டவணையைத் தயாரித்துள்ளது.

ஓரிரு நாளில் அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அரசின் பரிசீலனைக்கு இப்போது அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஓரிரு நாளில் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

அதோடு, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களின் எண்ணிக்கையும், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும்.

சமச்சீர் கல்வியில் நடந்தது என்ன? மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய 4 பாடத்திட்டங்களுக்குப் பதிலாக சமச்சீர் கல்வியின் கீழ் பொதுப்பாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதற்காக, 6 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்தப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி சமச்சீர் கல்வி அமலாக்கத்தை தள்ளிவைக்க அரசு முடிவு செய்தது.

ஆனால், சமச்சீர் கல்வியை பத்தாம் வகுப்பு வரை இந்த ஆண்டிலிருந்தே உடனடியாக அமல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகு, கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதியிலிருந்து பாடப்புத்தக விநியோகம் தொடங்கியது.

வழக்குகள் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 60 வேலை நாள்கள் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுசெய்யும் விதமாக, பள்ளிகளின் பாடவேளை அதிகரிப்பு, சனிக்கிழமைகளில் பள்ளிகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 42 வேலைநாள்கள் அதிகரிக்கப்பட்டன

Address

123. North Street
Swamimalai
612302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Net zone swamimalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Net zone swamimalai:

Share