14/11/2015
உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.
எதிர்கால உலகை ஆளப்போகிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்களால் சுட்டப்படும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டா டப்படும் தினம் குழந்தைகள் தினம். இந்தியாவில் முன்னா ள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியும், பல்வேறு நாடு களில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வரு கிறது. அதேசமயம், சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உலகிலேயே, அதிகளவிலான குழந்தை மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியா வில் குழந்தைகளின் நிலை பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்காக குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட் டுள்ளனர். கணிசமான சதவிகித குழந்தைகள் “குழந் தை தொழிலாளர்களாக” உள்ளனர்.
அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பல வித மான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப் படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையா ன தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிரு க்கின்றனர்.
இவர்களின் துன்பங்களுக்கு சரியான பதில் சொல்வதாக அமையுமா, வருடா வருடம் நடக்கும் குழந்தைகள் தின கொண்டாட்டங்கள்? ஆள்வோர்களும், அதிகாரிகளும் குழ ந்தைகளின் நல்வாழ்வு தொடர்பாக விடை காண வேண்டிய கேள்விகள் எவ்வளவோ உள்ளன! உலகளாவிய அமைப்பான ஐ.நா. சபை, குழந்தைகள் உரிமை மற்றும் நல் வாழ்வு தொடர்பாக பல தீர்மான ங்களை நிறைவேற்றியிருக்கிறது. உலகின் ஏராளமான நாடுகள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் காகித அளவிலேயே, பேச்சளவிலே யே உள்ளன. குழந்தைகளு க்கு எந்த நன்மையும் கிடை க்கவில்லை.
உலகிலேயே எந்தவிதமான வன்முறைக்கும் எளிதாக இலக்காகிற வர்கள் குழந் தைகள்தான். ஆப்ரிக்க நாடு களின் குழந்தைகள் உட் பட, மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் மிக மோசமான பாதி ப்பிற்கு ஆளாகியுள்ளார்கள். அந் த நாடுகளில் வருங்கால தலை முறைகளே அழிந்து வருகின்றன. குழந்தைகள் சமூகத்தின் மீது செ லுத்தப்படும் எந்தவொரு அநீதியு ம், எதிர்கால உலகின் மீது செலு த்தப்படும் அநீதியே ஆகும். எதிர் கால உலகை அது நிச்சயம் சீரழி க்கும். குழந்தைகள் தின கொண் டாட்டங்களில், குழந்தை களுக்கு விதவி தமாக வேஷ மிடுவதும், பல்வேறுவிதமான போட்டிகளை நடத்துவது மட்டுமே நமக்கு திருப் தியை தந்துவிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மேம்படுத்துவதன் பொருட்டே, சிற ப்பு விழாக்களும், நிகழ்ச்சிகளும் அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், நமது சமூகத்தில் அவை சம்பிரதாயங்களாக மாறிவிட்டன. அது போலத்தான் குழந்தைகள் தினமும் மாறிவிட்டது. நமது நாட்டின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இந்த உலகின் குழந் தைகளுக்கே, என்று விமோச்சனமும், நல்வாழ்வும் கிடைக்கிறதோ, அன்றுதான் உலகெங்கிலும் உண்மையான குழந்தைகள் தினம் கொண்டாடப்படும்.