21/10/2023
கத்தார் மாஸ்டர் செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனும், முதல்நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து, கிளாசிக் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றுள்ளார்.
7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் முதலிடம் வகிக்கும் கார்த்திகேயன் முரளி எஞ்சிய சுற்றுகளிலும் வெற்றிபெற்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.