Gandhi Computers

Gandhi Computers எங்களிடம் அணைத்து வகையான ஆன்லைன் சேவைகளும் உடனே செய்து தரப்படும்

பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்...
20/12/2025

பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்...

விடுபட்டவர்கள் ஜனவரி-18 ஆம் தேதிக்குள் BLO விடமோ, இ சேவை மையம் மூலமாகவோ படிவம்-6 ஐ விண்ணப்பித்து அனுப்பலாம்.
19/12/2025

விடுபட்டவர்கள் ஜனவரி-18 ஆம் தேதிக்குள் BLO விடமோ, இ சேவை மையம் மூலமாகவோ படிவம்-6 ஐ விண்ணப்பித்து அனுப்பலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டாம் கட்ட பட்டியலில் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு...
18/12/2025

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டாம் கட்ட பட்டியலில் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மீண்டும் மேல் முறையீடு செய்யப்படுகிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லாதவர்கள்:-
_______________________________________
1.குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

2.ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

3.மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

4.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

5.சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

6.ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

7.ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.

8.ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

இவர்களை தவிர மற்ற அனைவரும் தகுதி உள்ளவர்கள்.

தேவையான ஆவணங்கள்:-
1. விண்ணப்பதாரர் பெயர்.
2. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்
3. குடும்ப அட்டை எண்.

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
இ சேவை மையம்
புதுப்பேட்டை,
ஆத்தூர்
9715087474

PG-TRB - க்கு பதிவு செய்ய அணுகவும்:-காந்தி கம்ப்யூட்டர்ஸ்அரசு இ சேவை மையம்நகராட்சி கட்டிடம்புதுப்பேட்டை, ஆத்தூர் (TK) 63...
06/08/2025

PG-TRB - க்கு பதிவு செய்ய அணுகவும்:-

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
அரசு இ சேவை மையம்
நகராட்சி கட்டிடம்
புதுப்பேட்டை, ஆத்தூர் (TK) 636141
9715087474
[email protected]

15/03/2025
😘
04/01/2025

😘

தவறான தகவல் யாரும் நம்ப வேண்டாம்...
17/08/2024

தவறான தகவல் யாரும் நம்ப வேண்டாம்...

புதிதாக ஸ்கூல்ல குழந்தைகளை சேர்ப்பவர்களுக்கு...சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்🔖சாதிச் சான...
04/05/2024

புதிதாக ஸ்கூல்ல குழந்தைகளை சேர்ப்பவர்களுக்கு...

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்

🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவலாக வழங்கப்படுவது இல்லை.

🔖பிள்ளைகளுக்கு சாதி சான்று பெற பெற்றோரின் சாதி தொடர்பான ஆவணங்கள் அவசியம்.

🔖பெற்றோரிடம் சாதி சான்று இல்லை என்றால் அவர்களின் பள்ளி மாற்றுச் சான்று ஆவணங்களை வைத்து முதலில் அவர்களுக்கு சாதி சான்று பெற்றுக் கொள்ள வேண்டும்.

🔖தந்தையின் சாதியைத்தான் குறிப்பிட்டு சாதிச் சான்று பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

🔖பெற்றோர் இருவரும் வேறு வேறு சாதியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு சாதிச் சான்று பெறும்போது அம்மா அப்பா இருவரில் யாரேனும் ஒருவரின் சாதியை குறிப்பிட்டு சாதி சான்று பெற்றுக் கொள்ளலாம்.

🔖முதல் குழந்தைக்கு யாருடைய சாதியைக் குறிப்பிட்டு சான்று பெறுகிறோமோ அதையே அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் பின்பற்ற வேண்டும்.

🔖உதாரணமாக முதல் குழந்தைக்கு தாயின் சாதியையும் இரண்டாவது குழந்தைக்கு தந்தையின் சாதியையும் குறிப்பிடுவது தவறு.

🔖முன்பு சாதிச் சான்று கையால் எழுதி அட்டைகளில் வழங்கப்பட்டு வந்தது. உங்களிடம் அப்படி அட்டையில் வழங்கப்பட்ட சாதி சான்று இருந்தால் அதையே ஆதாரமாக வைத்து இணைய வழியில் விண்ணப்பித்து தற்போது வழங்கப்படும் ஆன்லைன் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுதல் அவசியம்.

🔖உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்காக செல்லும்போது இணைய வழி சான்றிதழ்களை தான் கேட்பார்கள்.

🔖சில வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட இணைய வழி சாதி சான்றிதழில் புகைப்படம் இல்லாமல் வரும்.

🔖எனவே தற்போது மீண்டும் விண்ணப்பித்து புகைப்படத்துடன் கூடிய இணைய வழி சாதி சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் நலம்.

🔖சில இடங்களில் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும் போது
பெற்றோர் இருவரின் சாதிச் சான்றும் கேட்பதால் வீட்டில் உள்ள அனைவருக்குமே இணைய வழியில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்று பெற்று வைத்துக் கொள்ளுவது நல்லது.

🔖பெற்றோர் படிக்காதவர்கள் அல்லது அவர்களிடம் சாதி தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் அவர்களுடைய பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு சான்று பெற்று அதையே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

🔖சில சாதிகளின் கேட்டகிரி மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக முஸ்லிம் என்பது BC முஸ்லிம்(BCM) என்றும் பள்ளர் என்பது தேவேந்திர குல வேளாளர் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இவர்களும் புதிதாக வேறு சாதி சான்று பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

🔖 திருமணமான பெண்கள் சிலர் கணவர் பெயருடன் இணைத்து சாதி சான்று பெற்றிருக்கலாம். ஆனால் சாதிச் சான்று தந்தை பெயருடன் இருப்பது கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

🔖இது போன்ற தகவல்கள் எனக்கு தெரியுமே என்று சொல்பவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.👍

TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. Total Vacancies: 6244குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க  February...
01/02/2024

TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
Total Vacancies: 6244
குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க February 28 கடைசி நாள்!!
மேலும் விவரங்களுக்கு:-
Gandhi Computers
Pudupettai
Attur
097150 87474

சாதி வருமான இருப்பிட சான்றிதழ்கள் உடனடியாக விண்ணப்பித்து தரப்படும்...மேலும் தொடர்புக்கு: #காந்தி_கம்ப்யூட்டர்ஸ்097150 87...
25/01/2024

சாதி வருமான இருப்பிட சான்றிதழ்கள் உடனடியாக விண்ணப்பித்து தரப்படும்...

மேலும் தொடர்புக்கு:
#காந்தி_கம்ப்யூட்டர்ஸ்
097150 87474

Address

No. 6 Nagaratchi Building, Pudupettai (Po), Attur(Tk)
Salem
636141

Opening Hours

Monday 8am - 9pm
Tuesday 8am - 9pm
Wednesday 8am - 9pm
Thursday 8am - 9pm
Friday 8am - 9pm
Saturday 8am - 9pm
Sunday 10am - 7pm

Telephone

+919715087474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gandhi Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gandhi Computers:

Share