Vanakam Pudhuvai

Vanakam Pudhuvai we are doing weekly newspaper in Puducherry

புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் மீ...
02/09/2026

புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தல் மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான கூட்டுறவு சார்ந்த கடல்பாசி வளர்ப்பு குறித்து பன்முகத்திறன் மேம்பாட்டு மாநாடு துவக்கவிழா, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் இன்று (01.09.2026) காலை 11.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசு மீன்வளத்துறை செயலர் டாக்டர். D. மணிகண்டன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் சிறப்புரையும், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் அவர்கள் தலைமையுரையும் ஆற்றினர். மேலும், இந்நிகழ்ச்சியில், இந்திய அரசின் மாண்புமிகு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் சத்ய பால் சிங் பாகேல் அவர்களும் மற்றும் இந்திய அரசு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களும் கலந்து கொண்டு மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்காணும் பல்வேறு மீன்வள உட்கட்டமைப்புகளை துவக்கி வைத்தனர்.
1. புதுச்சேரி, தேங்காய்திட்டில் ரூ. 15.63/- கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சிந்தனை சிற்பி டாக்டர் சிங்காரவேலர் மீன்பிடித் துறைமுகம்.
2. புதுச்சேரி, நல்லவாடு பகுதியில் ரூ.18.93 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம் (Fish Landing Center).
3. காரைக்கால், காளிக்குப்பத்தில் ரூ.1.92 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கடல்பாசி பதப்படுத்துவதற்கான மேம்பட்ட புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு மையம் (ACICD).
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு. A. அன்பழகன் அவர்கள்,மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. A. நமச்சிவாயம், அவர்கள், மாண்புமிகு குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு. V.P. சிவக்கொழுந்து அவர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) திரு. S.செல்வகணபதி அவர்கள், மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான், I.A.S., அவர்கள், இந்திய அரசின் மீன்வளத்துறை செயலர் டாக்டர் அபிலாஷ் லிக்கி I.A.S., அவர்கள், ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவ கிராம பஞ்சாயத்தார், மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், மீனவர் / மீனவமகளிர் கூட்டுறவு சங்க நிர்வாக பிரதிநிதிகள் மற்றும் மீனவர் சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, மீன்வளத்துறை இயக்குநர், திரு. A. முகமது இஸ்மாயில், அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து மதிய வேலையில் கடற்பாசி வளர்ப்பு மூலமாக, மீனவ மகளிருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளின் நன்மைகளையும், தொழில் நுட்பஉட்கூறுகளையும், மதிப்பு கூட்டப்பட்ட கடற்பாசிகளின் சந்தை வாய்ப்புகளைபற்றியும், கூட்டுறவு தொழில் முறைகளையும் குறித்து, மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவ மகளிர்க்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீ....

30.8.2026 அன்று வில்லியனூர் தொகுதியில் ஏழை மக்கள் கழகம் சார்பில் தமிழ்க்குடியின் மூத்த குடியான என் அன்பு உறவுகள் நரிக்கு...
31/08/2026

30.8.2026 அன்று வில்லியனூர் தொகுதியில் ஏழை மக்கள் கழகம் சார்பில் தமிழ்க்குடியின் மூத்த குடியான என் அன்பு உறவுகள் நரிக்குறவ பழங்குடியினர்களுக்கு உன்ன உணவு உடுக்க உடை குடிநீர் பாட்டில் என நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்த ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் திரு புதுவைக்குமார் மற்றும் ஏழை மக்கள் கழகம் மாநில அவை தலைவர் மருத்துவர் திரு சார்லஸ் ஆண்மீக அணித் தலைவி திருமதி ஜெய்சாந்தி ஊசுடு தொகுதி தலைவர் திரு ஜெயசங்கர் மாநில கொள்கைப்பர்ப்பு செயலாளர் திரு முத்தையன் மனவேளி தொகுதி தலைவர் திரு கலைச்செல்வன் வில்லியனூர் தொகுதி தலைவர் திரு ரமேஷ் மங்கலம் தொகுதி தலைவர் திரு தேவநாதன் மாநில மகளிர் அணி துணை செயலாளர் திருமதி செண்பகவள்ளி மற்றும் அனைவரும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் வழங்கிய இடம் வில்லியனுர் தொகுதி ஒதியம்ப்பட்டில் அந்தி நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் மணம் மகிழ்ச்சியாகவும் நடை பெற்றது ஏழை எளிய மக்கள் அனைவரும் பெற்றுக்கொண்டு நன்றி கூறினார்கள்

30.8.2026 அன்று வில்லியனூர் தொகுதியில் ஏழை மக்கள் கழகம் சார்பில் தமிழ்க்குடியின் மூத்த குடியான என் அன்பு உறவுகள் நர....

நேற்று (27.08.2026) செய்தி மற்றும் விளம்பரத்துறையில் இளைநிலைக் கணக்கு அதிகாரியாக பணிபுரியும் திரு கிருபாகரன் அவர்களுக்கு...
28/08/2026

நேற்று (27.08.2026) செய்தி மற்றும் விளம்பரத்துறையில் இளைநிலைக் கணக்கு அதிகாரியாக பணிபுரியும் திரு கிருபாகரன் அவர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தார்கள். இன்று பிறந்தநாள் விழா கண்ட திரு கிருபாகரன் அவர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனர் முனைவர் குலசேகரன், கண்காணிப்பாளர்கள் திரு பாலமுருகன், திரு திருமுருகன், உதவி புரட்டோகால் அதிகாரி / PRO, மற்றும் துறை ஊழியர் திரு பிரகாஷ் ஆகியோர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

நேற்று (27.08.2026) செய்தி மற்றும் விளம்பரத்துறையில் இளைநிலைக் கணக்கு அதிகாரியாக பணிபுரியும் திரு கிருபாகரன் அவர்கள....

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் வரை தலைமைச் செ...
27/08/2026

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் வரை தலைமைச் செயலர் மற்றும் அனைத்து அரசுத்துறை செயலர்களும் பேரவையில் இருக்க வேண்டும் என சபாநாயகர் அன்பழகன் உத்தரவு.
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளின்போது துறை சார்ந்த விவரங்கள் மற்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கும் வகையில், தலைமைச் செயலர் மற்றும் அரசுத்துறை செயலர்கள் பேரவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கோரிக்கை வைத்தார்..இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அன்பழகன்
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் வரை தலைமைச் செயலர் மற்றும் அனைத்து அரசுத்துறை செயலர்களும் பேரவையில் இருக்க வேண்டும் என சபாநாயகர் அன்பழகன் உத்தரவிட்டார். அதே நேரத்தில், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பேரவையில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் அன்பழகன் அறிவுறுத்தினார்.
இவ்வாறு உரிய காரணமின்றி அதிகாரிகள் பேரவையில் இருந்து வெளியேறும் பட்சத்தில், முதல்வரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் வ....

புதுச்சேரி 26.8.2026 அன்று ஈசிஆர் சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகம் சார்பாக புதியதாக பதவிகள் விருதுகள் ...
27/08/2026

புதுச்சேரி 26.8.2026 அன்று ஈசிஆர் சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகம் சார்பாக புதியதாக பதவிகள் விருதுகள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடை பெற்றது இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் பதவிகள் விருதுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் பதவி விபரம் வருமாறு ஏழை மக்கள் கழகத்தின் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி தலைவராக திரு புதுவைஇலங்குயில் திருமதி ஆ கல்யாணி இந்திராநகர் தொகுதி தலைவராக திரு மணிவண்ணன் வில்லியனூர் தொகுதி தலைவராக திரு ரமேஷ் மங்கலம் தொகுதி தலைவராக திரு தேவநாதன் புதுச்சேரி மாநில மகளிர் அணி செயல் தலைவியாக திருமதி கமலா ஆகியோர்கள் புதியதாக பதவி ஏற்றனர் இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் திரு புதுவைக்குமார் அவர்கள் ஏழை மக்கள் கழகம் அவை தலைவர் மருத்துவர் திரு சார்லஸ் லாஸ்பேட்டை தொகுதி தலைவர் பள்ளி துணை முதல்வர் திரு நாகப்பன் மாநில மகளிர் அணி துணை தலைவி திருமதி லலிதாம்பிகை ஊசூடு தொகுதி தலைவர் திரு ஜெயசங்கர் மாநில துணை அமைப்பாளர் திரு ராஜாமணி மாநல கொள்கைப்பரப்பு செயலாளர் திரு முத்தையன் சமூக சேவகி திருமதி உஷா மற்றும் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரி 26.8.2026 அன்று ஈசிஆர் சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகம் சார்பாக புதியதாக பதவிகள் விருத....

புதுச்சேரியில் அன்னை தெரசா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பில் ...
26/08/2026

புதுச்சேரியில் அன்னை தெரசா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பில் பாரதி பூங்கா அருகில் உள்ள அன்னை தெரசா சிலைக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன், எம்எல்ஏக்கள் ஜான்குமார், நேரு (எ) குப்புசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் புனித அன்னை தெரசா நற்பணி மன்றத்தினர், அருட்சகோதரிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரியில் அன்னை தெரசா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத் து...

மிலாது நபி திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மிலாது நபி வாழ்த்த...
25/08/2026

மிலாது நபி திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மிலாது நபி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மனித குலம் மாண்புடன் வாழ தன்னுடைய உன்னதமான வாழ்வின் மூலம் மானுட சமூகத்திற்க்கு வாழ்வியல் நெறிமுறையை அமைத்து வாழ்ந்து சென்றவர் நபிகள் நாயகம்.
தன்னுடைய உயர்ந்த குணத்தால் எல்லாம் தன்னுடைய ஈகை குணத்தால் ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அரவனைத்து பசித்தோர்களின் பசியை போக்கிய உத்தம நபியின் பிறந்த நாளில் நாம் அனைவரும் அன்னாரின் வாழ்வியல் நெறியை பின்பற்றி நடப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மிலாது நபி திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மிலாது ....

புதுச்சேரி 24.8.2026 அன்று ஏழை மக்கள் கழகம் புதியதாக பதவிகள் வழங்கும் விழா சமூக சேவை விருதுகள் வழங்கும் விழா கழக நிர்வாக...
25/08/2026

புதுச்சேரி 24.8.2026 அன்று ஏழை மக்கள் கழகம் புதியதாக பதவிகள் வழங்கும் விழா சமூக சேவை விருதுகள் வழங்கும் விழா கழக நிர்வாகிகளுக்கு பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக புதுச்சேரி ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு பதவிகள் விருதுகள் வழங்கி கழக நிர்வாகிகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெறிவித்தனர் பதவிகள் விபரம் ஏழை மக்கள் கழகத்தின் புதுச்சேரி மாநில ஆண்மீக அணி தலைவியாக திருமதி ஜெய்சாந்தி லாஸ்பேட்டை தொகுதி தலைவராக பள்ளி முன்னால் துணை முதல்வர் திரு நாகப்பன் மனவேளி தொகுதி தலைவராக முன்னால் காவல் துறை திரு கலைச்செல்வன் காலாப்பட்டு தொகுதி தலைவராக திரு சமூகன் அறக்கட்டளை சரவணன் மாநில மகளிர் அணி துணை தலைவியாக சர்வதேச மக்கள் நல சமூக சேவகி திருமதி லலிதாம்பிகை மாநில மகளிர் அணி செயளாலராக சமூக சேவகி திருமதி சுகந்தினி மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் திரு புதுவைக்குமார் ஏழை மக்கள் கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் திரு கருணாகரன் துணை அமைப்பாளர் ராஜாமனி கொள்கைப்பரப்பு செயலாளர் திரு முத்தையன் சமூக சேவகர் புதுவை இலங்குயில் பல் மருத்துவர் சமூக சேவகி திருமதி ஜனனி மற்றும் அனைவரும் கலந்து கொண்டு பதவிகள் விருதுகள் பிறந்தநாள்கள் என முப்பெரும் விழாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி 24.8.2026 அன்று ஏழை மக்கள் கழகம் புதியதாக பதவிகள் வழங்கும் விழா சமூக சேவை விருதுகள் வழங்கும் விழா கழக நிர.....

https://wp.me/phmMs5-DO
21/08/2026

https://wp.me/phmMs5-DO

Welcome to Vanakam Pudhuvai weekly newspaper Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment *Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.

புதுச்சேரி அரசு சார்பில், (20.08.2026) முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் “நல்லிணக்க நாள்...
21/08/2026

புதுச்சேரி அரசு சார்பில், (20.08.2026) முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் “நல்லிணக்க நாள்” ஆகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், ராஜீவ் காந்தி சிலைச் சதுக்கத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு தற்காலிக சபாநாயகர் அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. இறுதி நிகழ்வாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் “நல்லிணக்க நாள் (சத்பவன திவாஸ்)” உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சார்பில், (20.08.2026) முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் “நல்லிணக்க நா...

Address

01, First Main Road, Mahaveer Nagar, Lawspet
Pondicherry
605008

Alerts

Be the first to know and let us send you an email when Vanakam Pudhuvai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share