08/09/2024
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சண்டைனர் வாகனம் மீது கார் அதி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் , பயணித்த ஓட்டுனர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர்.
கார் அப்பளம் போல் நொறுங்கியதால் , அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடல்கள் மீட்டப்பட்டு வருகின்றன . இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று , உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறேன். இந்த கொடூர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.