விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம் விவசாயம் காப்போம் , மரபு வகை தமிழர் வி

பொருட்களை பெண்கள் நடத்தும் கடைகளில் வாங்குங்கள். நீங்கள் தினமும் சந்திப்பது தான் தேனீர் கடை, உணவகங்கள், மளிகை கடை, சாலைய...
15/10/2022

பொருட்களை பெண்கள் நடத்தும் கடைகளில் வாங்குங்கள்.

நீங்கள் தினமும் சந்திப்பது தான் தேனீர் கடை, உணவகங்கள், மளிகை கடை, சாலையில் உள்ள கடைகளை கடந்து செல்வீர்கள். உங்களுக்கு தேவையான பொருட்களை பெண்கள் நடத்தும் கடைகளில் வாங்குங்கள்.

இது சின்ன விசயம் தான் ஆனால் நீங்கள் வாங்கும் பொருட்களில் வரும் இலாபம் முழுவதும் அவர்கள் குடும்ப வளர்ச்சிக்கு பயன்படும். அவர்கள் குழந்தைகள் படிப்புக்கு செலவாகும், அவர்கள் குடும்ப அன்றாட செலவுக்கு பயன்படும். கண்டிப்பாக டாஸ்மாக் செல்லாது.

சிறிய கடைகளில் முடிந்தவரை பேரம் பேசாதீர்கள்.

ஆரை கீரை இந்த கீரையை நாங்கள் எங்கள் கிராமத்தில் இன்று வரை ஒதுக்குகிறோம் , அதற்க்கு முக்கிய காரணம் இந்த கீரை பற்றி எங்களு...
01/04/2022

ஆரை கீரை

இந்த கீரையை நாங்கள் எங்கள் கிராமத்தில் இன்று வரை ஒதுக்குகிறோம் , அதற்க்கு முக்கிய காரணம் இந்த கீரை பற்றி எங்களுக்கு எவரும் சொல்லவில்லை. இந்த கீரை மூலிகை என்பது நேற்று தான் தெரிந்தது ,

இந்த கீரைகள் தொடர்ச்சியாக வயல்கள் செல்லும் வழியில் இருக்கும் முக்கியமாக நெல் வயல்களில் அதிகமாக காணப்படும் .

இதன் நன்மைகள் :-

1. இப்பொழுது நம்மில் பெரும்பானவர்கள் என்பதை விட சொல்லப்போனால் அனைவரும் மன அழுத்தத்தில் தான் உள்ளோம் அவர்களுக்கு மிக உகந்த மருந்து என்று கூட சொல்லலாம் . மன அழுத்தத்தை குறைக்குமாம் .
2. வெறும் கீரையை மென்று தின்றால் வாய்ப்புண் தீர்க்குமாம் .
3. பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் உற்பத்தி செய்யுமாம் .
4. சக்கரை நோயாளிகளுக்கு உகந்த கீரையாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமாம் .
5. நீர் எரிச்சல் , நீர்கடுப்பு & சிறுநீரக பிரச்சனைகளை குணப்படுத்துமாம் .
6. அனைத்து பயன்களும் ஒரு கீரையில் இருப்பதனால் இதை கிராமத்து டானிக் என்று அழைப்பார்களாம் .

நம் கண்முன்னே ஒதுக்கிய கீரை , இவ்வளவு நன்மைகள் உள்ளதை நினைத்து வியப்புகிறேன்

29/10/2016

Address

Pondichéri
605105

Website

Alerts

Be the first to know and let us send you an email when விவசாயம் காப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share