Dreams System Sevices

Dreams System Sevices Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dreams System Sevices, Computer repair service, Ramamoorthy Street, Meenakshi Nagar, Madurai.

USED COMPUTER FOR SALEINTEL DUAL CORE, 31 CHIPSET M/B, 2GB RAM, 250GB HDD, KEYBOARD, MOUSE, 15.6 LED MONITOR, RS.7,499/-...
01/05/2017

USED COMPUTER FOR SALE
INTEL DUAL CORE, 31 CHIPSET M/B,
2GB RAM, 250GB HDD,
KEYBOARD, MOUSE,
15.6 LED MONITOR, RS.7,499/-
Dreams System Services
Cell:9944832258

30/12/2014
03/09/2014

பொது அறிவுத் தகவல்கள்!
* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.

* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி. *உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.

* உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'. 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.

சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

10/08/2014

COMPUTER SALES & SERVICE

10/08/2014

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக
மதிப்பெண்கள்
பெறுவதில்லை..
அது மாணவர்களின்
தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்விஆண்டை எடுத்துக்கொள்வோ
ம்..
1.ஒரு வருடத்திற்கு 52
ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
2.கோடை விடுமுறை 50 .
ரொம்ப வெப்பமான காலம்
என்பதால்
படிப்பது கஸ்டம்
மீதி 263 நாள்கள் (313-50=263).
3. தினமும் 8 மனி நேரம் தூங்கும்
நேரம்
என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள்
வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
4. 1 மணி நேரம்
விளையாட்டு நேரம் .
வளரும் பசங்களுக்கு நல்லது. நாள்
கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் .
நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படு
வதால்.
30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
6. 1 மணி நேரம்
பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய
கத்துகலாம்..
15 நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் ,
மீதி 46 நாட்கள்
(81-35=46).
8. காலாண்டு,அரையாண
்டு,பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள் ..
மீதி 3 நாட்கள் (6-3=3).
10. சினிமா, உறவினர்
திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும்..
மீதி இருப்பதோ ஒரேயொரு நாள்
(3-2=1).
11. அந்த ஒரு நாளும் அந்த பையன்
பிறந்த
நாள்..
பின்ன எப்படி தேர்வில் அதிக
மதிப்பெண்கள்
பெறமுடியும்....?????.

Toshiba Quad core C50-BP0010 2GB / 500GB / 15.6" / DOS / 3YEARS Warranty /1year Acdiential Damage Rs.25000/- FIXED PRICE...
07/08/2014

Toshiba Quad core C50-BP0010 2GB / 500GB / 15.6" / DOS / 3YEARS Warranty /1year Acdiential Damage Rs.25000/- FIXED PRICE
CONTACT @ 9944832258

Toshiba Corporate Information

26/07/2014

"வேலையில்லா பட்டதாரி"யில் எனக்குப் பிடித்த ஒரு வசனம்...
"முன்னலாம் இல்லாதவன் இருக்கறவன்ட்ட திருடுவான்
இப்ப ஏன்டா இருக்கறவன் இல்லாதவன்ட்ட திருடுறீங்க?
உரிமைய திருடுறீங்க உழைப்ப திருடுறீங்க
கிடைச்ச வாய்ப்ப திருடுறீங்க
கடைசியில அவன் வாழ்க்கைய திருடுறீங்க"

26/07/2014

இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification),
அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பதிவு முறை:
• இதற்கு மின்னஞ்சல் ஐடி (Email Id) கட்டாயமாக தேவைப்படும்.
• ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல்” என்ற தலைப்பில் கீழ் ஒரு புதிய பயனர்New Register என “பதிவு” மிகையிணைப்பை கிளிக் செய்க.கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல்.

• பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.

• வெற்றிகரமாக உங்களை பதிவு செய்த பிறகு, ஒரு “நன்றி” செய்தி பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் மூலம் ஒரு இணைப்பை பதிவு உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு (Email Id) அனுப்பப்படுகிறது. (உங்கள் கணக்கை செயல்படுத்துவதற்கு)
• உங்கள் மின்னஞ்சல் ஐடி அனுப்பப்படும் என்று இணைப்பை கிளிக் செய்து உறுதி படுத்த வேண்டும். (இணைப்பு 7நாட்களுக்கு பிறகு காலாவதியாகிவிடும்.)
• உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது என்று உறுதி அளிக்கும்.

2) பாஸ்போர்ட் Account Login:

• நான் இப்போது “உள்நுழைவு” மிகையிணைப்பை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே நீங்கள் கொடுத்த பயனர்பெயர் கொடுத்து உள்நுழையும்.
• உங்கள் கடவுச்சொல் கொடுங்கள்.
• உங்கள் திரையில் காட்டப்படும் தட்டச்சு எழுத்துகளை கொடுத்து கிளிக் செய்யவும்.

3) பாஸ்போர்ட் விண்ணப்பம் (Passport Application):

உடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்கும், மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும்.
இரண்டாவதை “Apply for Fresh Passport / Reissue of Passport” கிளிக் செய்யவும்

அதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து –Print செய்து – பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம். அல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.
அடுத்து வரும் புதிய பகுதியில்

முதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தட்கல் முறையில் வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும்.அதன்பின் மற்றொரு பகுதி வரும்.

அதில் உள்ள உங்களது அனைத்து விசயங்களையும் நிதானமாகப் படித்து எழுத்து பிழை இல்லாமல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒவ்வொரு பக்கம் முடித்த பின்னர் “அடுத்து” என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை முடிவடையாத விட்டு & அடுத்த நாள் அதை பூர்த்தி தொடர விரும்பினால் “என் விவரங்கள் சேமி“ கிளிக் செய்து, நீங்கள் கடைசியாக பூர்த்தி செய்த பக்கத்தை “சமர்ப்பி” என்பதை கிளிக் செய்தால் அது வரை நீங்கள் அடுத்த / முந்தைய பக்கம் இடையே செல்லவும் & உங்கள் விவரங்கள் திருத்த முடியும். கடைசியில் ஒருமுறை நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் நீங்கள் எதையும் மாற்ற முடியாது.

• Given Name : உங்களது பெயர்
• Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
• உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
• Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
• S*x: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
• Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
• Place of Birth: பிறந்த ஊர்
• District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
• Qualification: உங்களது படிப்பு (SSLC pass என்றால் NOC அப்ளை செய்யலாம்)
• Profession: தொழில்
• Present Address: தற்போதைய முகவரி
• Permanent Address: நிரந்தர முகவரி
• Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்
• Phone No: தொலைபேசி எண்
• Email Address: இமெயில் முகவரி
• Marital Status: திருமணமான தகவல்
• Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
• Father’s Name: தந்தை பெயர்
• Mother’s Name: தாயார் பெயர்
• தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
• Voter ID, Athaar Card No, PAN Card Number இருந்தால் அதனையும் நிரப்பி விடவும்.
• Is applicant eligible for Non-ECR category? SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.

அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Buttonஐ கிளிக் செய்து செல்லவும், கடைசியாக முக்கியமான ஓன்று அதில் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரியும், தொலைபேசி எண்ணும் கேட்கும். அதை தெளிவாக குறிப்பிடவும். ஏனென்றால் போலிஸ் வெரிபிகேஷன் அதான் முக்கியம்.

5) பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport):

பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும். அதனையும் “Save” செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்


1)நியமனம் பக்கம் 5minutes தான் திறந்திருக்கும் அதற்குள் முடித்துவிட வேண்டும்.
2)அதே நாளில் இரண்டாவது முயற்சித்து கொண்டிருக்க முடியாது. அந்த வழக்கில் நீங்கள் 24 மணி நேரம் காத்திருந்து, அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும்.
3)அதேபோல் அந்த பக்கத்தில் இருக்கும் பொது Reload/Refresh பட்டனை அழுத்தாதிர்கள்.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் +சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.
அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு Receiptதருவார்கள். அவ்வளவு தான் உங்களது வேலை
(குறிப்பு நீங்கள் கொடுக்கும் எல்லா ஆவணகளிலும் ஒரே முகவரியும், பிறந்த தேதியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்)

6) பாஸ்போர்ட் விண்ணப்ப தகுதி ஆன்லைனில் பார்க்க (View Passport Application Status Online):

நீங்கள் PSK-ல் உள்ள நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஒரு கோப்பு எண் பெறுவீர்கள், பிறந்த தேதி இரண்டையும் கொடுத்து “ட்ராக்” பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பாஸ்போர்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

7) போலீஸ் சரிபார்ப்பு (Police Verification):
சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும், அப்போது நீங்கள் உங்கள் VAO- Village Asministrative Officer -ரிடம் நீங்கள் இந்த ஊரில் தான் வசித்துவருகிரீர்கள் என்று விண்ணப்பத்தில் எழுதி வாங்க வேண்டும் மற்றும் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரி கொடுத்தீர்கள் அல்லவா அவர்களையும் விசாரிப்பார்கள்.
8) Passport Dispatch:
அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் தயாராக உள்ளது என, உங்கள் மொபைல் இல் அறிவிப்பு எஸ்எம்எஸ் பெறுவீர்கள் மேலும் அனுப்பப்பட்டதும் உங்கள் பாஸ்போர்ட் எண் தேதி குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சல் ஐடி ஒரு மின்னஞ்சல் வரும். எனவே, ஒரு சரியான மின்னஞ்சல் ஐடி & தொலைபேசி எண் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சில நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வந்துவிடும்.

அவ்வளவுதான் முடிந்தது நண்பர்களே…இனி நீங்களும் அப்ளை செய்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம்..

21/07/2014

We pay you $1.00 for every advert you view!

06/07/2014

இந்நாட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா என்று பார்ப்போம்.

நாம் எப்படித் தெரிந்து கொள்ளுவது?

பள்ளியில் படிக்கும்போது ஏதாவது தெரிந்து கொள்ளலாமா என்றால் அங்கு தமிழர்களைப்பற்றி ஒரு சேதியும் கிடையாது. எவ்விதப் பாடப் புத்தகமும் கிடையாது. அரிவரி பால பாடம் படிக்கும்போதும் அய்யர் -_ பிராமணர் போன்ற வார்த்தைகள்தான் காணப்படுகின்றனவே அன்றித் தமிழர், திராவிடர் என்கின்ற வார்த்தைகளுக்கு அங்கிடமோ அவகாசமோ கிடையவே கிடையாது.

மேல் வகுப்புக்கு வந்து அங்கு ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்றாலோ அதற்கும் இடம் இல்லை. தமிழ்நாட்டுக்கு சரித்திரமே இல்லை. இந்து தேச சரித்திரம் என்பதை எடுத்துக் கொண்டால், இராமாயண பாரதமும், அசோகன் மவுரியன் ஆட்சியும், முஸ்லிம் வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுமே ஒழிய, சேர, சோழ, பாண்டியரைப் பற்றியோ, திராவிடர், தமிழ் என்கின்ற ஆட்சியைப் பற்றியோ காண்பது மிகவும் அருமையேயாகும். அவை எந்த வகுப்புக்கும் பாடமாக இல்லை. அப்படி ஏதாவது எங்காவது காண முடிந்தாலும் அது பெரும் பித்தலாட்டமும், மோசடியுமாகத்தான் காணப்படலாமே தவிர யோக்கியமாய், சரித்திர - ஆதாரமுறையாய் காண்பதற்கு இடமே இல்லை.

ஆகவே, நமது பிள்ளைகள் நம்மைப்பற்றித் தெரிந்து கொள்ள இடமும் இல்லை, வசதியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றும் சொல்லுகிறோம் தமிழன் ஆரியருக்கு முன் என்ன சமயத்தவனாய் இருந்தான், அவன் கடவுள் எப்படிப்பட்டது, அவனது வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது என்பன போன்ற முதலியவைகளைக் காட்ட சரியான சரித்திர ஆதாரம் ஒன்றும் காணப்படுவதில்லை.

தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்பதற்கே ஏராளமான ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, பள்ளிக்கூடத்திலோ, சரித்திரங்களிலோ, நம்மைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆதாரங்கள் இல்லை என்பதோடு தமிழ் நூல்கள் என்பவைகளிலாவது தனித் தமிழர் நிலை எப்படி இருந்தது என்றும், அனுபவபூர்வமான அவர்களது வாழ்க்கை எப்படி இருந்ததென்றும் தெரிந்து கொள்ளப் போதிய ஆதாரங்களும் கிடையாது.

இன்று நம் கண்முன் காணப்படும் தமிழர் வாழ்க்கை என்பதெல்லாம் ஆரியரைப் பார்த்து அதுபோல் வேஷம் போட்டுக் கொண்டு, அவர்களது சாதனங்களை ஏற்றுக் கொண்டு அவர்களைப் பின்பற்றுவது என்பதல்லாமல், வேறு ஒன்றும் காண்பதற்கு இல்லை. ஆரியர் கடவுள்கள், அவை சம்மந்தமான ஆரியர் கதைகள் அவர்களது ஆகமங்கள், அவர்கள் சாஸ்திரங்கள், அவர்களது நீதி நூல்கள் ஆகியவைகளே நம் பண்டிதர்கள் கற்றுக் கொண்டு நமக்குப் போதிக்கப்படுவனவாக இருக்கின்றன.

இவைகளை மாற்றித் தமிழர்களுக்கு என்று மற்ற நாட்டாரையும் மற்ற இனத்தாரையும் போல் ஏதாவது பாடங்கள், சரித்திரங்கள் முதலியவை கண்டுபிடித்து, அல்லது உண்டாக்கி நம் பிள்ளைகளுக்குப் பாடமாக கீழ் வகுப்பில் இருந்தே படிப்பிக்கப்பட்டால் ஒழிய எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்பதையோ சிந்தித்துப் பாருங்கள்.

அந்தப்படி இல்லாததாலேயே நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள நம் பண்டிதர்களே வழிகாட்டிகளாய் இருந்து கொண்டு அவர்களது உச்சிக் குடுமியையும் சாம்பல் மண்பூச்சுகளையும், அவர்கள் பாராயணம் செய்யும் புராணக் கதைகளையும் நாம் பின்பற்றி கடைந்து எடுத்த முட்டாள்களாக ஆக நேர்ந்ததோடு ஆரியருக்கும், ஆரியத்துக்கும் மீளா அடிமைகளாக ஆகி இருக்கும்படி நேர்ந்திருக்கிறது.

தமிழர்களின் படிப்புக்கு கீழ் வகுப்புகளிலாகட்டும் இராமாயண பாரதக் கதைகள் ஏன் சேர்க்கப்பட வேண்டும். அதுவும் தேச சரித்திரத்தில் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?

பஞ்ச காவியங்களைவிட இராமாயண, பாரதம் எப்படி சரித்திர சம்பந்தமான கதைகளாகும்.

பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ள தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, பாரதக் கதைகள் சரித்திரத்திலும், வசன பாடத்திலும் சேர்க்கச் சம்மதித்து இருப்பார்களா? பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் தமிழ்ச் செல்வர்கள் இக்குறைகளை எடுத்துக் காட்டுவதற்கு ஆக நம்மீது பாய்கின்றார்களே தவிர, புராண இதிகாசங்கள், அதுவும் தமிழர்களுக்குச் சம்பந்தமில்லாததும், தமிழர்களுக்கு இழிவைத் தரக்கூடியதும், தமிழர் முற்போக்கைத் தடுக்கக் கூடியதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான விஷயங்கள் கொண்ட புராண இதிகாசங்கள் சமய ஆதாரங்கள் போலவும், புண்ணிய சரித்திரங்கள் போலவும், தேச சரித்திரங்கள் போலவும் நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

இவ்விஷயத்தில் இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள், தமிழ் உபாத்தியாயர்கள், உண்மைத் தமிழ்ப் பெற்றோர்கள் ஒன்றுகூடி மாநாடு கூட்டி இம்மாதிரி விஷயங்கள் பள்ளிப் படிப்பில் நுழையாமல் இருக்கும்படிச் செய்யக் கூடாதா என்று கேட்கின்றோம்.

தமிழிலே, தமிழ் மொழி இலக்கியத்திலே, தமிழர் நல்வாழ்விலே, தமிழர் தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலே கவலையாயுள்ள நம் செல்வங்களுக்கு இந்தக் காரியமெல்லாம் முக்கியக் கடமை அல்லவா என்றும் கேட்கிறோம்.

தலைமுடி எடுத்துக் கொண்டு, காவடி தூக்கி ஆடி, பழனிக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வந்துவிட்டால் தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாய் விட்டது என்று அருத்தமா? பட்டம், பதவி, நிர்வாகப் பெருமை பெற்றுவிட்டால் தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாய் விட்டது என்று அருத்தமா?

நிலை குலைந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி உணர்ச்சி ஊட்டி அவர்களுக்குத் தன்மான உணர்வும் விடுதலை உணர்வும் ஊட்ட வேண்டாமா? தமிழ் மக்களை அவர்கள் படித்தவர்களானாலும், பண்டிதர்களானாலும், மந்திரி, கவர்னர், வைசிராய், நிர்வாக சபை மெம்பர் ஆனாலும் பகுத்தறிவு விஷயத்தால் மரக்கட்டையாக்கி விட்டுத் தமிழரல்லாதவர்கள் அடிமைப்படுத்திச் சுரண்டி கொள்ளை கொள்வதைத் தடுக்க வேண்டாமா?

தமிழ் மக்களின் நலத்தில் கவலை உள்ளவர்கள் எது? எதற்கு என்றுதான் அழுவது. தமிழர்க்குத் தொண்டாற்றுவது என்றால் என்னதான் அருத்தம்.

ஆகவே, பள்ளிகளில் உள்ள சுத்தத் தமிழ் ஆசிரியர்களை இனியாவது இப்படிப்பட்ட புத்தகங்களைப் பாடமாக வைக்காமல் இருக்கக் கேட்டுக் கொள்வதோடு, பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் இனியாவது இவ்விஷயங்களைக் கவனித்து புத்தகங்களை அனுமதிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம்.

நமக்கு சுதந்திரம் வந்த இலாகாக்களின் கதியே இப்படி இருக்குமானால் இத்தமிழர்கள் எந்த முகத்தைக் கொண்டு எல்லா இலாகாக்களிலும் முழுச் சுதந்திரம் கேட்க முடியும் என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

Address

Ramamoorthy Street, Meenakshi Nagar
Madurai
625012

Alerts

Be the first to know and let us send you an email when Dreams System Sevices posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dreams System Sevices:

Share