Sri Kavi Recharge Centre & Mobile Accessories

Sri Kavi Recharge Centre & Mobile Accessories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Kavi Recharge Centre & Mobile Accessories, Mobile Phone Shop, 4/172 Sourahtrapuram Main Road, Vandiyur, Madurai.

14/05/2017

லீலை கண்ணன் கதைகள்.....36...

கோவர்த்தன மலையை தூக்குதல்....

பிருந்தாவன மக்கள் இவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்திருக்க இந்திரலோகத்தில் இந்திரன் கடும் கோபத்துடன் இருந்தான். தன்னை அலட்சியம் செய்து ஆயர்குல மக்கள் ஒரு மலைக்குப் பூiஐ செய்ததைக்கண்ட அவனது மனம் ஆத்திரத்தில் துடித்தது. ஆயர்குலத்து மக்களையும் அவர்களுக்கு ஆலோசனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். கடும் கோபம் அவனது புத்தியை மறைத்து விட்டது. பகவான் கிருஷ்ணர், மகாவிஸ்ணுவின் அவதாரமே என்பதையும் மறந்தான்.

தேவர்களின் அரசனான இந்திரன், நீருக்கு தேவனான வர்ணதேவனை அழைத்து தனது மேகங்களை திரட்டி கடும் மழையைப் பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான். இந்திரன் மேலும் வாயுதேவனை அழைத்தான். கடும் சூறாவளிக்காற்றாக வீசி பிருந்தாவனத்து மக்களின் வீடுவாசல்களையும் மரங்களையும் அழிக்கும்படி கட்டளையிட்டான். பிருந்தாவனத்தில் பெரும்புயல் உண்டாகியது. கடும்மழை பெய்தது. சூறாவளிக்காற்று சுழன்று அடித்தது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மரங்களும் குடிசைகளும் கடும் காற்றில் சரிந்து வீழ்ந்தன. ஆயர்குலத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்குவதற்கு இடமின்றி அங்குமிங்கும் ஓடினார்கள். பசுக்களும் வளர்ப்புப்பிராணிகளும் பரிதாபமாக அலறின. எங்களைக் காப்பதற்கு யாரும் இல்லையா என்ற மக்கள் ஓலமிட்டு அழுதார்கள்.

அனைவரும் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தார்கள். கிருஷ்ணர் புன்னகையுடன் அவர்களைத் தேற்றினார். என் அருமைத் தந்தையே! தாயே! ஆயர்குலத்து மக்களே! நீங்கள் யாரும் கலங்க வேண்டாம். இது இந்திரன் நடத்தும் விபரீத விளையாட்டு. ஆனால் நமது பூஜையை ஏற்றுக்கொண்ட கோவர்த்தன மலை இப்போதும் நம்மைக் காக்கும். வாருங்கள். உங்கள் பசுக்களையும் மற்றும் வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். எல்லோரும் கோவர்த்தன மலைக்கே போவோம் என்று கூறினார். கிருஷ்ணர் முன்னே நடக்க நந்தகோபர் யசோதை மற்றும் ஆயர்குலத்து மக்கள் அனைவரும் அவரைப்பின் தொடர்ந்து நடந்தார்கள். பசுக்களும் ஆடுகள் கோழிகள் நாய்கள் பூனைகள் முதலிய வளர்ப்புப்பிராணிகளும் அவர்களுடன் நடந்து சென்றன. அந்தக்கூட்டத்தின் முன்னே நடந்து கோவர்த்தன மலையை அடைந்த கிருஷ்ணர் ஒரு கணங்கூடத் தாமதிக்காமல் அந்த மலையைத் தம் இரு கைகளாலும் தூக்கினார்.

ஒரு குழந்தை தனது பொம்மையைத் தூக்குவது போல் அவ்வளவு எளிதாக கிருஷ்ணர் அந்தப் பெரிய மலையைத் தூக்கினார். தலைக்கு மேலே அதை உயர்த்திய கிருஷ்ணர் தமது இடது கரத்தின் சிறுவிரல் நுனியில் அந்தப் பெரிய மலையை நிலையாக நிறுத்திக் கொண்டார். பின்னர் தம் மக்களை அன்புடன் அழைத்தார். பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் தமது வளர்ப்புப் பிராணிகளுடன் அந்த மலையின் கீழே அமர்ந்தார்கள். ஆயிரக்கணக்கான அந்த மக்கள் கூட்டத்திற்கு கோவர்த்தன மலை ஒரு குடை போன்று விளங்கியது. வெளியே கடும் மழை பெய்தது. காற்று ஓ என்று வீசியது. ஆனால் பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் எவ்வித கஸ்டமும் இன்றி பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் மலைக்குடையின் நிழலில் ஆனந்தமாக இருந்தார்கள். இவ்வாறு ஏழுநாட்கள் மழை தொடர்ந்து பெய்தது. இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்....

தொடரும்.....

Address

4/172 Sourahtrapuram Main Road, Vandiyur
Madurai
6250020

Opening Hours

Monday 8am - 11pm
Tuesday 8am - 11pm
Wednesday 8am - 11pm
Thursday 8am - 11pm
Friday 8am - 11pm
Saturday 8am - 11pm
Sunday 8am - 11pm

Telephone

9500243559

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kavi Recharge Centre & Mobile Accessories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share