06/05/2017
மதுரைக்காரர் சுந்தர்பிச்சை
With Mr. Sundar Pichai CEO of GOOGLE
என் மகன், தான் வேலை பார்க்கும் mountain view வில் உள்ள Google தலைமை அலுவலகத்திற்கு இன்று என்னை அழைத்துச் சென்றான். அந்த பிரமாண்ட அலுவலகத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே வந்தேன். ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களைப் பார்த்த போது மிகவும் கர்வப் பட்டேன். மகனின் அறையையும் பார்த்தேன். அவன் உயர் அதிகாரி ஓர் அமெரிக்கர். மகன் அறிமுகப் படுத்திய போது , கை குலுக்கலைத் தவிர்த்து, நான் இரு கரம் கூப்பி "வணக்கம்" என்ற போது பெருமையாக இருந்தது. ஒவ்வொரு பகுதியாக விளக்கிக் கொண்டே வந்தான். பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் Google ன் முதன்மை அதிகாரி திரு. சுந்தர் பிச்சை நடந்து போய்க் கொண்டிருந்தார். ஓடிப் போய் அவரிடம் மதுரையில் கணித ஆசிரியை என்று அறிமுகம் செய்து கொண்டேன். நான் பிறந்ததும் மதுரை தான் என்று தூய தமிழில் அழகு புன்னகையை தவழ விட்டார். புகைப்படத்திற்கு அனுமதி கேட்ட போது சிரித்துக் கொண்டே, சம்மதம் கொடுத்தது மட்டுமல்லாமல், யாரோ தொலை பேசியில் அவரை அழைக்க, அவர்களிடம் அப்புறம் பேசுகிறேன் என்று ஆங்கிலத்தில் உரைத்து விட்டு, பக்கத்தில் புகைப்படம் எடுக்க ஏதுவாய் நின்றார். உறுதியாய் இது ஓர் மகிழ்வான தருணம் எனக்கு.
SC: Lakshmi RS