04/09/2026
04/09/2026/ 11 am
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ காற்றானது தொடர்ச்சியாக வலு இழந்து உள்ளது இதன் காரணமாக மாவட்ட சமவெளி பகுதியில் வறண்ட வானிலை நிலவுகிறது !
வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை 3/09/2026 குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை சில பகுதிகளில் மிதமான மழை பதிவானது அதே நேரத்தில் சமவெளி பகுதியில் ஒருசில இடங்களில் சாரல் மழை அளவு பதிவாகி உள்ளது !
கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் #அப்பர்கோதையாரில் _ 21 mm மிதமான மழை அளவு பதிவாகி உள்ளது !
இன்றும் 04/09/2026 குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அதனை ஒட்டி ஒரு சில பகுதிகளில் பிற்பகலுக்கு பிறகு அல்லது மாலையில் வெப்ப சலனமழை வாய்ப்பு உள்ளது !
=========
குமரி மாவட்டத்தில் இன்று #வெள்ளிக்கிழமை 04/09/2026 காலையுடன் முடிவு பெற்ற கடந்த 4 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு ,
அப்பர்கோதையார்=>21mm
சிவலோகம்=======>5mm
சிற்றார்_1அணை=>2mm
சிற்றார்_2அணை=>1mm
என்னும் அளவில் ஒருசில இடங்களில் மட்டும் மாவட்டத்தில் மழை அளவு பதிவாகி உள்ளது !
============