குரூர் அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்

  • Home
  • India
  • Kallakkurichchi
  • குரூர் அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்

குரூர் அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தன் கடன் அடியேனை தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே
தொடர்புக்கு 9445295924

திருச்சிற்றம்பலம் நாதனை நாதமிகுத் தோசைய தானவனை    ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரைமாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்   ...
10/08/2026

திருச்சிற்றம்பலம்
நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை, திருக்கானப்பேர்.
திருச்சிற்றம்பலம் பொழிப்புரை:
உலகிற்குத் தலைவனும், நுண்ணிய எழுத்தோசை யும், பரியதாகிய இசையோசையுமாயும், ஞானமாகிய விளக்கினது ஒளியாயும், உடம்பின்கண் உள்ள உயிரும்! நிலத்தில் வளரும் பயிரு மாயும் நிற்பவனும், மாதொரு பாகத்தை உடையவனும். மேலான தகுதியையுடைய, தன் அடியார்களது உள்ளத்தின்மேல் வைத்துள்ள பற்றினைச் சிறிதும் நீங்காதவனும், குற்றம் இல்லாத கொள்கையை யுடையவனும், என்னைத் தன் தொண்டினிடத்து ஆளுகின்ற என் தூதனும், தோழனும், தலைவனும் ஆகியவனும், தாழத் தூங்குகின்ற மகரக் குழையையும் தோட்டையும் அணிந்த அழகிய காதினை யுடையவனும் ஆகிய, மிக்க நீரையுடைய, ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெரு மானை, நாய்போலும் அடியேன் தலைக்கூடப்பெறுவது எந்நாளோ!.
குறிப்புரை:
` நாதன் ` என்றதிலும், இரண்டன் உருபு விரிக்க. ` மிகுத்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ` பாதனை ` என்பதே பாடம் போலும் ! ` என்றனை ஆள் ` என்பது, ` தூதன் ` என்றது முதலிய மூன்றனோடும் இயையும். தலைவனாய் இருப்பவனே தூதனாயும், தோழனாயும் இருக்கும் வியப்பினைப் புலப்படுத்தும் முகத்தால், அவனது பேரருட்டிறத்தை நினைந்து உருகியவாறு ; அதனை, ` நாயடியேன் ` என்றதனாலும் உணர்க. குழை அணிதல் அப்பனாதலையும், தோடணிதல் அம்மையாதலையும் குறிக்கும்

https://t.me/+-nIYF_5YxiE3N2Nl

10/08/2026

***இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!***
இராமேஸ்வரம் தல வரலாறு...
*************************
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான்... ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்...எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது.... மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்....
**22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்**
1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.... இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்...
2. சாவித்திரி தீர்த்தம்,
3. காயத்ரி தீர்த்தம்,
4. சரஸ்வதி தீர்த்தம் :
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது... இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்....
5. சேது மாதவ தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம்.... இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்....
6. நள தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது... இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.....
7. நீல தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது.... இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்....
8. கவாய தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது.... இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்....
9. கவாட்ச தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது.... இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள்.... மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்....
10. கந்நமாதன தீர்த்தம் : சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது.... இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்....
11. சங்கு தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்....
12. சக்கர தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது... இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்...
13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது.... இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்....
14. சூர்ய தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.... இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்....
15. சந்திர தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.... இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்....
16. கங்கா தீர்த்தம்:
17. யமுனா தீர்த்தம்:
18. காயத்ரி தீர்த்தம் :
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.... இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்....
19. சாத்யாம்ருத தீர்த்தம் : திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது... இதில் நீராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்....
20. சிவ தீர்த்தம் : இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது..... இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்....
21. சர்வ தீர்த்தம் : இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னதி முன் உள்ளது.... இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.... கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள்.... இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது....
22. கோடி தீர்த்தம் : இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது....அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது.... அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது... இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.... இதற்கு கட்டணம் உண்டு.... பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்....
கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.....
https://whatsapp.com/channel/0029VaauAm12f3EAycssFD3Y

அடியார் பெருமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் 🙏*நாள்-616**திருமந்திரத்தில் சிவகதி பாடல்கள்-நாள்-(22)* திருமூலர் அருளிய பத...
08/08/2026

அடியார் பெருமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் 🙏

*நாள்-616*

*திருமந்திரத்தில் சிவகதி பாடல்கள்-நாள்-(22)*

திருமூலர் அருளிய பத்தாம் திருமுறையில் - தலமுறையில் திருவாவடுதுறை திருப்பதிகம்

*பண்-திருமந்திரம்- 3'ம் தந்திரம்-- காலசக்கரம்*

*தலம்- ஆவடுதுறை*

"கண்ணன் பிறப்பிலி காண் நந்தியாயுள்ள

எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்

திண்ணென்று இருக்கும் *சிவகதியா* நிற்கும்

நண்ணும் பதம் இது நாட வல்லார்க்கே".

விளக்கம்*

திருமந்திரம் மூன்றாம் தந்திரம் காலச் சக்கரம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர், சிவ யோகியர்கள் சேரும் இடம் சிவகதி என்று கூறுகின்றார். முக்கண் உடையவனும் பிறப்பிலியும் அடியார்களின் வினைகளை குறைத்து அழிப்பதால் நந்தி என்று அழைக்கப் படுபவனும், அடியார்களின் இதயத்தில் அமர்ந்து குருவாக செயல்பட்டு அவர்களை நல்வழிப் படுத்தும் ஒப்பற்றவனும், எங்கும் பரந்து நாம் கருதுகின்ற திசைகள் அனைத்திலும் நிறைந்தவனாக உலகமே தானாக நிற்பவனும் ஆகிய பெருமானையும், அவனது அருட் சக்தியாகிய பிராட்டியையும் நாம் சென்றடையும் வழியை ஆராய்ந்து அறிந்து கொண்டு அனுபவிக்கும் சிவயோகிகள் சேருகின்ற இடம் சிவகதி என்பதே இந்த பாடலின் கருத்து. இதுவே மிகவும் உயர்ந்த ஆனந்தத்தை தருகின்ற இடம் என்பதால், சொர்கம் என்ற பொருள் பட பதம் என்று அழைக்கப் படுகின்றது.

🙏திருச்சிற்றம்பலம்🙏

🙏 *இளையான்குடி உடை மாறன் எம் கற்பகமே* 🙏

ஒம் தென்னாட்டுடைய சிவனே போற்றி!ஒம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!ஒம் ஆரூரா தியாகராசர் பெருமாளே போற்றி!ஒம் பிரம்படி பட்ட...
08/08/2026

ஒம் தென்னாட்டுடைய சிவனே போற்றி!
ஒம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஒம் ஆரூரா தியாகராசர் பெருமாளே போற்றி!
ஒம் பிரம்படி பட்ட சொக்கநாதா போற்றி போற்றி!

திருச்சிற்றம்பலம்.

பத்தனாய்ப் பாடமாட்டேன்
பரமனே பரம யோகீ
எத்தினாற்ப் பத்தி செய்கேன்
என்னை நீ இகழவேண்டா முத்தனே முதல்வா தில்லை
அம்பலத்தாடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
அடியேனன் வந்த வாறே.

திருச்சிற்றம்பலம்.
நற்றுனையாவது நமச்சிவாயவே!

https://aratt.ai/

08/08/2026

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே !!
#திருவாசகம்
#மாணிக்கவாசகர்

https://x.com/muthampikai

08/08/2026

எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம் !!
#திருவருட்பா
#வள்ளலார்_சுவாமிகள் #பாதம்

https://t.me/+-nIYF_5YxiE3N2Nl

ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியேஎன்னை சிக்கென பிடித்து என் அகம் புறம் துருவிஏனோ இன்னமும் இருக்கின...
08/08/2026

ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே
என்னை சிக்கென பிடித்து
என் அகம் புறம் துருவி
ஏனோ இன்னமும் இருக்கின்றேன்

திரு ஆனந்த நடராஜர் திருவடிகள் போற்றி போற்றி

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

இன்றைய கோபுர தரிசனம்🙏🏻🙏🏻**அருள்மிகு திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்**புராண பெயர்(கள்):*திருவந்திரபுரம்*பெயர்:*தி...
08/08/2026

இன்றைய கோபுர தரிசனம்🙏🏻🙏🏻
*
*அருள்மிகு திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்*

*புராண பெயர்(கள்):*
திருவந்திரபுரம்

*பெயர்:*
திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்

*ஊர்:*
அயிந்தை (திருவந்திபுரம்)

*மாவட்டம்:*
கடலூர் மாவட்டம்

*மூலவர்:*
தேவநாத சுவாமி, அயக்கிரீவர்

*தாயார்:*
வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி)

*தீர்த்தம்:*
கருடதீர்த்தம்

*பாடல் வகை:*
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

*மங்களாசாசனம் செய்தவர்கள்:*
திருமங்கையாழ்வார்

*கட்டடக்கலை வடிவமைப்பு:*
தென்னிந்திய கட்டிடக்கலை

*விமானம்:*
சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம்

*தொன்மை:*
1000-2000 வருடங்களுக்கு முன்

ஒம் தென்னாட்டுடைய சிவனே போற்றி!ஒம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!ஒம் சிலையால் அன்றெயில் எரித்த சிவனே போற்றி!ஒம் திருமூல...
07/08/2026

ஒம் தென்னாட்டுடைய சிவனே போற்றி!
ஒம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஒம் சிலையால் அன்றெயில் எரித்த சிவனே போற்றி!
ஒம் திருமூலட்டானனே போற்றி போற்றி!

திருச்சிற்றம்பலம்.

அழுக்கு மெய்கொடுன்றிருவடி
அடைந்தேன் அதுவும் நான்படப்
பால தொன்றானாற்
பிழுக்கை லாரியும் பால் கொள்வார் அடிகேள்
பிழைப்பேன் ஆகிலுந் திருவடிப் பிழேயேன் வழுக்கி
வீழினுந் திருப் பெயரல்லால்
மற்று நான் அறியேன் மறுமாற்றம் ஒழுக்க என் கணுக்கொரு மருந்துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே!

திருச்சிற்றம்பலம்.
நற்றுனையாவது நமச்சிவாயவே!

Follow the குரூர் அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaauAm12f3EAycssFD3Y

Address

Kallakurichi
Kallakkurichchi
606202

Alerts

Be the first to know and let us send you an email when குரூர் அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category