எழுத்து

எழுத்து Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from எழுத்து, Graphic designer, Hosur.

03/09/2020

#பெண்களின்சமுதாயத்தை_போற்றும்பதிவு...!!

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...!!!

இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
#இது_ராமாயணம்

ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன்.மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
#இது_நளாயினிகதை.

இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்...
தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. -
#இது_சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை,ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
#இது_மணிமேகலை

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று.
யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள்,
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. "அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.
#இது_குண்டலகேசி

இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.

அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.
உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.
சங்ககாலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.

ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்..

18/08/2020

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*...
17/08/2020

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
*இதோ*👇

1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகு ம்

11 *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்.

25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.

26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்.

27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

39. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

32. *குள்ளகாற் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்

*நண்பர்களுக்கு பகிருங்கள்*

25/07/2020

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு
மேடையில் இருந்து இறங்கி வந்தார்.!

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து
கொள்கிறீர்களா..?
என்று கேட்டாள்.

என்னைப் பாத்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம்வந்தது?என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே...ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்புகிறேன். எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனைபெற்றுக்கொள்வதை விட...
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை
தாயே என்றே அழைக்கிறேன் என்று.

இதுதான் அறிவின் முதிர்ச்சி.!

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,
அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...!

24/07/2020

#விலையும்_மாற்றமும்...🐝

� 🍊கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ நூத்தி அறுவது ரூவா..
� 🍊நினைத்த போதெல்லாம் பறித்து உண்ட சப்போட்டா கிலோ எண்பது ரூவா..
� 🍊திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா..
🍊�வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா..
� 🍊வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா..
� 🍊இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு பத்து ரூவா..
� 🍊கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..
� 🍊சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா..
� 🍊ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ
நூத்தி இருவது ரூவா..
� 🍊தூக்கி எறிந்த சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..

👉 என்ன பாக்கறீங்க.... உங்களுக்கு இப்போ விவசாயத்தின் உண்மை நிலை புரிந்து இருக்கும்.
👉 இது மட்டும் இல்ல... இந்த விலை பட்டியலில் வேப்பம்பூ , மாம்பூ , மாதுளை பூ , செம்பருத்திப்பூ , நந்தியாவட்டை பூ , மகிழம் பூ மாதிரி மறந்து போன பல
பூக்களின் விலையும் சேர உள்ளது.
👉 மேலும் விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, வில்வம், மாவிலை, நொச்சி, பவளமல்லி, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு..
👉 ஆமா.... இதெல்லாம் என்ன விளைவிக்க முடியாத அதிசயப் பொருளா? இவ்வளவு விலை போட்டு வாங்குவதற்கு...
👉 விளைபொருளே இவ்வளவு விலைக்கு விற்கும் பொழுது இதை விளைவித்த விவசாயி எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்.
👉 ஆனால் அவர்கள் இருக்கும் நிலைமை என்ன? அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விலைகள் மட்டும் உச்சத்தில் உள்ளன. ஆனால் அதை விளைவித்த விவசாயி இருக்கும் இடம் தெரியாத இடத்தில் இருக்கிறான்.
👉 எப்படியோ இன்னும் சில வருடங்களில் விளைபொருட்கள் அனைத்தையும் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கும்.
👉 அப்பொழுது தான் விவசாயிகளின் நினைப்பு நமக்கு வரும். ஆனால் அப்பொழுது இவர் தான் விவசாயி என்று கூறுவதற்கு கூட விவசாயிகள் இருக்க மாட்டார்கள்.
👉 விவசாயத்தின் அழிவையும், விவசாயிகளின் நிலையையும் சற்று நினைத்து பாருங்கள். மேலே விலைபட்டியலில் சொல்லப்பட்ட பொருள்கள் எல்லாம் மந்திரப் பொருட்களோ, அதிசயப்பொருட்களோ அல்ல.
👉 சாதாரணமாக மண்ணில் விளையும் விளைபொருட்கள் தான்.
👉 ஒவ்வொருவருக்குள்ளும் விவசாயி இருக்கிறார். உங்களுக்குள் இருக்கும் விவசாயியை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வாருங்கள்.
யார் விதைத்தாலும் விதைகள் முளைக்கும்....
யார் நட்டாலும் செடிகள் வளரும்...
👉 உங்களால் முடிந்த வரை வீட்டிலேயே வீட்டு தேவைக்காக மரங்களை நட்டு வளருங்கள். வருங்கால நம் சந்ததியினருக்கு இந்த பழங்களாவது கிடைக்கும்.
👉 சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பது மட்டும் அல்ல நம் கடமை. அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு இந்த சுற்றுச்சு ழலை அமைத்து தருவதும் நம் கடமை தான்...ஷ....ரூ🐝

மண்ணின் நலன் கருதி நான் தான் உங்க தேனீ
நான் இல்லை என்றால் உங்களுக்கு அப்போ ?

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

29/01/2019
23/01/2019
13/01/2019
மறந்து போன பாரம்பரியம்
04/01/2019

மறந்து போன பாரம்பரியம்

Address

Hosur
624710

Alerts

Be the first to know and let us send you an email when எழுத்து posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எழுத்து:

Share