Allware infotech

Allware infotech allware infotech

இனி சைகைகள் மூலம் கணனியை கட்டுப்படுத்தலாம்! வந்தாச்சு புதிய கீபோர்ட்கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் லீ...
11/06/2014

இனி சைகைகள் மூலம் கணனியை கட்டுப்படுத்தலாம்! வந்தாச்சு புதிய கீபோர்ட்
கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் லீப் மோஷன் (Leap Motion) எனப்படும் கை அசைவினைக் கொண்டு செயற்படக்கூடிய கீபோர்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.
99 டொலர்கள் பெறுமதியான இந்த கீபோர்ட்டினைப் பயன்படுத்தி கணனிப் பாவனையாளர்கள் சைகைகள் மூலம் கணினியின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இத்தொழில்நுட்பம் HP Envy 17 மடிக்கணனியில் காணப்படுகின்றது.

இது தவிர விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடுத்தக்கது.

Introducing the HP Leap Motion Keyboard. The first-ever keyboard with integrated Leap Motion technology. Transform how you interact with your digital world.

தெரிந்து கொள்வோம்: "Router Technology"இணையத்தை இயக்குவதில் முக்கியப் பங்கு எப்போதும் Router யை மட்டுமே சேரும் என்பதில் எ...
05/06/2014

தெரிந்து கொள்வோம்: "Router Technology"

இணையத்தை இயக்குவதில் முக்கியப் பங்கு எப்போதும் Router யை மட்டுமே சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தொழில்நுட்ப சுருக்கம்

இணையத்தை இயக்க தெரிந்த நமக்கு, இதன் செயல்பாடுகளை புரிந்து கொள்ள கடினமாகவே உள்ளது.

நமக்கு கிடைக்கும் இணையச் சேவையானது routing என்னும் முறையை பயன்படுத்தி ISP(Internet service provider) மூலமாக நம்மை வந்தடைகிறது.

இதன் வாயிலாக பெறப்படும் சேவை பல பயனாளிகளை சென்றடைவதற்காக switching என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது.

வேறு networkல் இருந்து ISP மூலமாக பெறப்படும் தகவல் packet என்னும் பெயரில் router யை வந்தடைகிறது. இந்த packet ல் தகவல் யாரிடம் இருந்து பெறப்பட்டது, யாரிடம் சென்று சேர வேண்டும் என்று தகவல்கள் துல்லியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். Router அந்த packet யை தனது வழியில் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் உள்ளதா என சோதனையிட்டு அனுமதிக்கும்.

பெறப்படும் மற்றும் சென்றடையும் தகவல்கள் அனைத்தும் protocols மூலமாக தனது செயல்முறையை தொடங்குகின்றன.

தகவல் பரிமாற்றத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு இவற்றில் பல வகைகள் உள்ளன. (eigrp,rip,ospf).

இதன் செயல்பாடுகள் அனைத்தும் ISO (International Organization for Standardization) வகுத்துள்ள அதன் கட்டுப்பாடான 7 layers முறைப்படியே நடைபெறுகிறது.இதன் தொழில்நுட்ப திறனில் பல நிறுவனங்கள் இருந்தாலும் cisco என்னும் நிறுவனம் தான் நீண்டகாலமாக நிலைத்து நின்று சிறந்து விளங்குகிறது.

சோனி நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பட்டிசோனி நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய ஸ...
05/06/2014

சோனி நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பட்டி
சோனி நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பட்டியினை உருவாக்கி முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

100 டொலர்கள் பெறுமதியான SWR10 எனும் இக்கைப்பட்டியனது வெறும் 21 கிராம்களே எடையுடையது.

இதில் ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து குறுஞ்செய்திகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், அலாரம் உட்பட பல வசதிகளைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இதனை விசேட அம்சமாக மீடியா பிளேயர் காணப்படுகின்றது. இதற்கான பிரத்தியேக அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

02/06/2014

நவீன ரக கணனி மேசை உருவாக்கம்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணனியானது பல்வேறு பரிமாணங்களை எட்டி நிற்றின்றது.
இதன் மற்றுமொரு அங்கமாக நவீன கணனி மேசை உருவாக்கப்பட்டுள்ளது.

Lian Li Computer Desk Houses எனப்படும் இம் மேசை அனைத்து கணனி வன்பொருட்களையும் தன்னகத்தே கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதில் இரண்டு வகையான அளவுகள் காணப்படுவதுடன் அவற்றில் ஒன்று 990 டொலர்கள் பெறுமதி உடையதாகவும் மற்றையது 1200 டொலர்கள் பெறுமதி உடையதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30/05/2014
Free Seminar: On IT Jobs (IT Awareness program) IT நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான தகுதிகளும் பற்றிய ஒரு...
30/05/2014

Free Seminar: On IT Jobs (IT Awareness program) IT நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான தகுதிகளும் பற்றிய ஒரு கலந்துரையாடல். All degree & Diploma holders can attend the program on 01/06/2014 (Sunday) அனுமதி இலவசம். இடம் : ALLWARE INFOTECH - Moolapalayam, Erode. Contact : 91500 38833, 88252 88251.

தெரிந்து கொள்வோம்: இணையம் ஹேங் ஆகிறதா? இது தான் பிரச்சனையாக இருக்கும்அன்றாட வாழ்வில் இணையம் நமக்கு முக்கிய பங்கு வகிப்பத...
21/05/2014

தெரிந்து கொள்வோம்: இணையம் ஹேங் ஆகிறதா? இது தான் பிரச்சனையாக இருக்கும்

அன்றாட வாழ்வில் இணையம் நமக்கு முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், அதன் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நாம் இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான ”error” செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது ஹேங் ஆகும்.

இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு, நீங்கள் செல்லலாம்.

மீண்டும் வந்து பார்க்கிற போது "Session Expired" என்ற செய்தி திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம்.

எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம்.

சில தளங்கள் தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாதவர்கள் தளத்தைப் பார்க்க சில நிமிடங்களே அனுமதி தரும். அந்த நேரம் முடிந்துவிட்டால் தானாகத் தளம் மூடப்பட்டு "Session Expired" செய்தி கிடைக்கும்.

மேலும் சில தளங்கள் குக்கீஸ் எனப்படும் குறுந்தகவல் தொகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கும். அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்தை அணுகுகையில் உங்களைப் பற்றிய தகவலை அந்த தளம் அறிந்து கொண்டு உங்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும்.

எனவே குக்கீஸ் பெறுவதனை நீங்கள் தடுக்கும்படி செட் செய்திருந்தால் மாற்றி விடவும். இதற்கு இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று அதில் Privacy டேப் கிளிக் செய்திடவும்.

பின் கிடைக்கும் திரையில் Default என்னும் பட்டனைக் கிளிக் செய்தால் குக்கீஸ் பெறுவது அனுமதிக்கப்படும். கம்ப்யூட்டரில் பயர்வால் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளம் தானாகவே மூடும் வாய்ப்பு உண்டு.

ஏனென்றால் பயர்வால் செட்டிங்ஸ் சில தளங்களை இறக்கம் செய்து பார்க்க விடாது.. இதற்கு உடனே பயர்வால் செட்டிங்ஸ் பார்த்து திருத்தவும். நீங்கள் விரும்பிப் பார்க்கின்ற தளங்களை பயர்வால் அனுமதிக்கும்படி பயர்வால் செட்டிங்ஸை மாற்றவும்.

சில வேளைகளில் தவறான நாள், தேதி மற்றும் நேரத்தை உங்கள் கணனி காட்டிக் கொண்டிருந்தால் அதனாலும் "Session Expired" செய்தி வரலாம். ஏனென்றால் சில தளங்கள் பின்புலத்தில் உங்கள் கணனியின் நேரத்தோடு இணைந்து சில புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட எதுவுமின்றி இணைய தளத்தில் எக்ஸ்பயர் செய்தி வருகிறதென்றால், அதுவும் குறிப்பாக ஒரு தளத்திற்காக வருகிறது என்றால் அந்த தளத்தில் பிரச்னை உள்ளது என்று பொருள்.

எனவே உங்கள் கணனியின் செட்டிங்ஸ் சரி செய்வதனால் இது நிவர்த்தி அடையாது. எனவே இந்த செய்தி வரும் பட்சத்தில் பொறுமையாக உடனே அல்லது சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதனைப் பெற முயற்சிப்பது தான் சிறந்த வழியாகும்.

16/05/2014

நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Logitech K830 கீபோர்ட்
Logitech நிறுவனம் K830 எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கீபோர்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.
கணனியிலிருந்து 10 மீற்றர்கள் தூரத்தில் கூட வைத்து பாவிக்கக்கூடிய இக்கீபோர்ட் ஆனது சூழலில் உள்ள ஒளிக்கு ஏற்ப தன்னிலிருந்து வெளிவரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

மேலும் 90 பவுண்ட்களே பெறுமதியான இக்கீபோர்ட் மூலம் டைப் செய்து முடிந்ததும் 5 செக்கன்களில் தானாகவே பவர் சேவ் மூட்டிற்கு மாறி மின்சக்தியை சேமிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்...
05/05/2014

அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்

அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு லாக் செய்வது இலகுவாகவும், பயனர்களை வெகுவாக கவர்ந்ததாகவும் இருக்கின்றது.

இதனைப் போன்றே விண்டோஸ் மற்றும் அப்பிளிக் மேக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய கணனிகளையும் லாக் செய்வதற்கு Eusing Maze Lock எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் இயங்குதளங்களை இலகுவாக அப்டேட் செய்யமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் காணப்படும் சில அப்பிளிக்க...
05/05/2014

விண்டோஸ் இயங்குதளங்களை இலகுவாக அப்டேட் செய்ய

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் காணப்படும் சில அப்பிளிக்கேஷன்களை குறித்த கால இடைவெளியில் அப்டேட் செய்வது அவசியமாகும்.
இதற்கு Windows Hotfix Downloader எனும் மென்பொருள் உதவுகின்றது.

இந்த மென்பொருளானது இலகுவாகவும், புதிதாகவும் மற்றும் சரியானதுமான அப்டேட்களை தேடி தரவிறக்கும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Windows 8.1, Windows 8, Windows 7 இயங்குதளங்கில் செயற்படக்கூடிய இம்மென்பொருள் Microsoft Office அப்ளிக்கேஷன்களையும் அப்டேட் செய்யும் வசதியினை கொண்டுள்ளது.

Google Driveவின் புதிய பதிவு வெளியீடுஅன்ரோயிட் சாதனங்களுக்கான Google Drive அப்பிளிக்கேஷனின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டு...
05/05/2014

Google Driveவின் புதிய பதிவு வெளியீடு

அன்ரோயிட் சாதனங்களுக்கான Google Drive அப்பிளிக்கேஷனின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் இப்பதிப்பில் நீக்கப்பட்டுள்ளதுடன் சில புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இவ் அப்பிளிக்கேஷன் ஆனது Docs மற்றும் Sheets அப்பிளிக்கேஷன்களை தன்கத்தே கொண்டிராததுடன், குறித்த இரு அப்பிளிக்கேஷன்களையும் தனியாக நிறுவுமாறு கேட்டுக்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Google Drive அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை Google Play Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல்...
29/04/2014

பென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்

பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.

* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.

* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.

Address

1st Floor, MSK Arcade, Nadar Medu Petrol Bunk Bus Stop
Erode
638002

Alerts

Be the first to know and let us send you an email when Allware infotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Allware infotech:

Share