SPM Computers

SPM Computers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SPM Computers, Computer repair service, 1/36, venkatampatti, Dharmapuri.

02/04/2016

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர இருக்கும் விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து

02/04/2016

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:

தேவையில்லாத மற்றும் சமந்தமில்லாத மர்மமான டிரைவ்களை அடிக்கடி கணினியில் போடுவதைத் தவிர்க்கவும். இதைப் பற்றிய சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது ஒரு முறை USB டிரைவ்களை உள்ளே போடும்போது அது அதிக மின்சார பாய்ச்சலினால் கணினியை ஷட்டவுன் செய்கிறது அல்லது மொத்தமாக அளித்தே விடுகிறது. இது ஒரு அதிநவீன தாக்குதலாக கருதப்படவில்லை மாறாக USB டிரைவிலிருந்து காத்துக் கொள்ளவது கஷ்டமாவதால்தான் இந்த தாக்குதல்

01/12/2015
USB 2 & 3
30/11/2015

USB 2 & 3

டேபிள் ஒன்றை உருவாக்கியபின் அதனைப் பிரிக்க எண்ணுகிறீர்களா? அதனைச் சாதாரணமாகக் கர்சர் கொண்டு சென்று பிரிக்க முயற்சித்தால்...
01/09/2014

டேபிள் ஒன்றை உருவாக்கியபின் அதனைப் பிரிக்க எண்ணுகிறீர்களா? அதனைச் சாதாரணமாகக் கர்சர் கொண்டு சென்று பிரிக்க முயற்சித்தால், குறிப்பிட்ட படுக்கை வரிசை அகலாமவதைத்தான் பார்ப்பீர்கள். அதற்குப் பதிலாக, புதிதாய் அமைக்கப்பட வேண்டும் என விரும்பும் டேபிளில் முதல் வரிசையாய் எந்த வரிசை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரை வைத்துப் பின் டேபிள் மெனு செல்லவும். அங்கு ஸ்பிளிட் டேபிள் என்பதில் கிளிக் செய்திடவும். டேபிள் இப்போது பிரிக்கப்பட்டு தனி டேபிள் ஒன்று காணப்படும்.
www.dinamalar.com/supplementary_detail.asp?id=21756&ncat=4

டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக ...
01/09/2014

டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21756&ncat=4

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி நீட்சிக்கான தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதனால், சீன அரசு தன் அலுவலகங்களில், வி...
01/09/2014

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி நீட்சிக்கான தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதனால், சீன அரசு தன் அலுவலகங்களில், விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தக் கூடாது என ஆணையிட்டது. தற்போது தானே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வரும் அக்டோபரில் வெளியிட உள்ளது. முதலில் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், பின்னர் படிப்படியாக ஸ்மார்ட் போன்களிலும் இது பயன்படுத்தப்படும் வகையில் தரப்படும். இந்த தகவலை, அரசின் செய்தி தகவல் தொடர்பு முகமையான Xinhua தெரிவித்துள்ளது. படிப்படியாக, வெளிநாட்டு நிறுவனங்களின் எந்த சிஸ்டமும் சீன தகவல் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. மொபைல் சாதனங்களில் கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் இதே முறையில் நீக்கப்படும்.
தேசிய அளவில் தனக்கென மட்டும் பயன்படுத்தும் வகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தயாரிக்க சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 2000 ஆண்டில், Red Flag Linux என்ற பெயரில் ஓ.எஸ். ஒன்றை வடிவமைத்து, அப்போதைய விண்டோஸ் 2000க்குப் பதிலாக சீனா கொண்டு வந்தது. Red Flag Software என்னும் நிறுவனம், முழுக்க அரசு நிதியுதவியுடன் இதனை வடிவமைத்தது. ஆனால், அந்நிறுவனம் மூடப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியைத் தழுவியது. அந்நிறுவனத்தை Penta Wan Jing Information Technology என்ற நிறுவனம் வாங்கியது. அநேகமாக, அந்த சிஸ்டத்தினையே, மீண்டும் புதிய முறையில் வடிவமைக்கும் முயற்சியில் புதிய நிறுவனம் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
by
dina malar
share this post

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின், நிறக் கட்டமைப்பினை (Colour Scheme) மாற்றும் முயற்சியில் ஈடுபட்டீர்களா? அவ்வாறு மாற்...
01/09/2014

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின், நிறக் கட்டமைப்பினை (Colour Scheme) மாற்றும் முயற்சியில் ஈடுபட்டீர்களா? அவ்வாறு மாற்றியிருந்தால், உடனடியாக அந்த புதிய அமைப்பினை நீக்கிவிடவும். இந்த நிறக் கட்டமைப்பு மாற்றுவதற்கு உதவும் புரோகிராம் தான், பேஸ்புக் தளம் வழியாக வேகமாகப் பரவும் வைரஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் கம்ப்யூட்டர்களைப் பாதித்த இந்த வைரஸ், பன்னாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனை உணர்ந்த பேஸ்புக் நிறுவனம், இதனைச் சரி செய்திடும் முயற்சியில் இறங்கி, புரோகிராமினைச் சரி செய்தது. இருந்தாலும், மறுபடியும் இந்த வைரஸ் அதே வழியில் பரவுவதாக அறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் முதலில் ஓர் அறிவிப்பனை வெளியிடுகிறது. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின் நிறத்தை மாற்றலாம், என இந்த புரோகிராமிற்கான விளம்பர அறிவிப்பாக இது வெளியிடப்படுகிறது. இதன் பால் ஈர்க்கப்பட்டு, இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்த பின்னர், நாம் வைரஸ் அடங்கியுள்ள தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். அங்கு, எப்படி நிறம் மாறுதலை மேற்கொள்ளலாம் என்பது வீடியோ காட்சி மூலம் விளக்கப்படுவதாக ஒரு வீடியோவிற்கான லிங்க் கிடைக்கிறது. இதில் கிளிக் செய்தவுடன், பேஸ்புக் வாடிக்கையாளரின் அக்கவுண்ட் பற்றிய தகவல்கள் திருடப்படுகின்றன.
வீடியோ காட்சியைப் பார்க்க வாடிக்கையாளர் விரும்பவில்லை என்றால், உடன் புரோகிராம் ஒன்றைப் பதிவிறக்கம் செய்திடுமாறு கூறுகிறது. உடன் நாம் அந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்தால், அதனை இயக்கும்போது, வைரஸ் கம்ப்யூட்டரிலிருந்து பரவுகிறது. இந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்து, ”அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று உள்ளவர்கள், உடனடியாக அந்த புரோகிராமினைக் கப்யூட்டரிலிருந்தே நீக்குவது நல்லது. உடன் பாஸ்வேர்டினை மாற்றுவதும் அறிவுறுத்தப்படுகிறது.
by dina malar

புதிய கம்ப்யூட்டர் வாங்கப் போகிறீர்களா? உங்களை ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கலாமே? என்று ஒரு சிலர் அறிவுரை கூறலாம் (அறிவுரை ...
01/09/2014

புதிய கம்ப்யூட்டர் வாங்கப் போகிறீர்களா? உங்களை ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கலாமே? என்று ஒரு சிலர் அறிவுரை கூறலாம் (அறிவுரை கூறுபவர் விண்டோஸ் பயன்படுத்தி வருகிறார் என்பது வேறு விஷயம்). சிலர் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துங்கள். அதில் நிறைய பாதுகாப்பு வசதிகள் உண்டு எனக் கூறலாம். ஆனால், நீங்கள் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்றால், 96% மக்கள் பம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவது தான் நல்லது. உலகில் இயங்கும் 10 கம்ப்யூட்டர்களில் 8 கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை.
பாதிக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 சிஸ்டமும், மீதம் உள்ளவற்றில் பாயன்படுத்துதியில் எக்ஸ்பி சிஸ்டமும் இயங்குகின்றன.
நீங்கள் பல ஆண்டுகளாக விண்டோஸ் பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்கள். இதில் இயங்கும் உங்களுக்கு வசதியான சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள். வெளியில் இணைத்து இயக்கும் பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்றவற்றைக் கூடப் பல ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்துடன் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தினுடையதையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறீர்கள்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மாற்றம் வேண்டும் எனத் திட்டமிட்டாலும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மட்டுமே மாற்றிக் கொள்கிறீர்கள். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ்8க்கு மாறிக் கொண்டு பயன்படுத்துவதில் திருப்தி அடைகிறீர்கள். இவை கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் இப்போது ரூ.30,000க்குள் கிடைக்கிறது. விண்டோஸ் சில சாப்ட்வேர் புரோகிராம்களுடன் கிடைக்கிறது.
அவை போதும் என்று, உங்கள் பணியைத் தொடர்கிறீர்கள். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கினால், விலை சற்று குறையலாம்; ஆனால், உங்களுக்குத் தேவையான பயன்பாட்டு தொகுப்புகளுக்கு விண்டோஸ் தான் சரியான இயக்க முறைமையாக அமையும். எனவே தான், சிறிய விலை வேறுபாட்டினைப் பொருட்படுத்தாமல், விண்டோஸ் இயக்கத்திற்கே செல்கிறீர்கள். மேலும், லினக்ஸ் பயன்பாடு வேண்டும் என்றால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரிலேயே, லினக்ஸ் சிஸ்டத்தினையும் பதிந்து இரட்டை இயக்கமாகக் கொள்ளலாம்.
by
dina malar

30/08/2014

Address

1/36, Venkatampatti
Dharmapuri
636705

Alerts

Be the first to know and let us send you an email when SPM Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SPM Computers:

Share