07/06/2023
நாம் இணையத்தில் பகிரும் சாதாரணப் புகைப்படங்களை AI உதவியுடன் நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றி செக்ஸ்டார்சன் குழுக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதாக FBI எச்சரிக்கை விடுத்துள்ளது, திடீரென நமக்கு வீடியோ கால் செய்து ஒரு வினாடி நமது முகத்தை மட்டும் ரெகார்ட் செய்துகொண்டு அதை பார்ன் வீடியோக்களில் செருகி பணம் பறிப்பது தான் நடைமுறை. ஆனால் தற்போது நமது இணையப் புகைப்படங்களை Deep n**e AI செயலியில் அப்லோட் செய்தால், நமது முக வடிவம், கண் அளவு, தோல் நிறத்திற்கு ஏற்ப மிகக் கச்சிதமான ஒரு நிர்வாண உடலைத் தயாரித்து, பல்வேறு கோணங்களில் நம் முகத்தை அதனுடன் இணைத்து விடும்.
அலுவலக ஓய்வறையில் தான் எடுத்த சாதாரண புகைப்படத்தை, நிர்வாணமாக மாற்றி மோசடியாளர்கள் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெண் தர மறுக்க, புகைப்படத்தை நண்பர்கள், குடும்பம், அலுவலகத் தலைமை எல்லோருக்கும் அனுப்பி விட, பெரும் மன உளைச்சலுடன் பெண்ணின் வேலையும் பறிபோனது. காரணம் AI உருவாக்கும் படங்கள் உண்மையை விட அவ்வளவு நம்பகமாய் இருக்கும்.
சரி ! சமூக வலைதளங்களில் புகைப்படம் பகிராமல் இருந்தால் இதிலிருந்து தப்ப முடியுமா ?
நிச்சயமாக இல்லை ! திருட்டு நாய்களுக்கு தேவை எனில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் இருந்து கூட எடுப்பார்கள், நமது புகைப்படமே தேவை இல்லாமல் நம்மை வரையும் தொழில்நுட்பம் இனி வந்து விடும். ஆகவே இந்த AI Deep n**e தொழில்நுட்பம் இருப்பதை அறிந்து கொள்வதும், நம் வீட்டில் இருக்கும் பதின் வயது குழந்தைகளிடம் இது குறித்த உரையாடல்களை நிகழ்த்துவதும் தான் இதை எதிர்கொள்ள சிறந்த வழி.
இனி எந்த நிர்வாணப் புகைப்படம் வந்தாலும் அது AI போலி எனக் கடந்து செல்லும் நிலையை உருவாக்குங்கள். அது உண்மையான புகைப்படமாக இருப்பினும், பலர் வாழ்வு காப்பாற்றப்படும்.
Article by : Hariharasuthan