Smart Mobile Service

Smart Mobile Service All Brand Mobile phone & Laptop serviced Here

12/01/2017

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...

11/01/2017

🙎🏻‍♂ 🙎🏻 *ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா. 10,000 ரூபாய்க்கும் செலவு செய்யலாம்.*

*ஆனால்!!!*

*அதையை அவர் வங்கி மூலமா DIGITAL money யா* *செலவழிச்சா சேவை கட்டணம் 15%. 1,500. ரூபாய் போக, அவரால், 8,500.ருபாய் மட்டுமே, செலவழிக்க முடியும்.*

*இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவை கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் செரும்.*

*ஒரு வருடத்துக்கு 24 லட்சம் கோடிரூபாய் சேவை கட்டணம் மட்டும்.*

*இதுதான்டா உலக மகா ஊழல்.*

*நாட்டின் மொத்த பணத்தையும் அச்சடிக்க வெறும் 12 ஆயிரம் கோடியே போதும்.*

*இதுக்கு பேர்தான்டா சர்வாதிகாரம்.இதப்பத்தி, கொஞ்சம் யோசிங்க...*

*அட! கோமாளிகளுக்கு புரியாதது படிக்க வேண்டாம்!*

*ஏன் இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறக்கூடாதா?...*

*மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிக்லாம் பயன்படுத்தகூடாதா?...*
🖥 *ஆன்லைன் பரிவர்தனைகள் வரக்கூடாதா?...*

*ஏன் டீக்கடைல PAYTYM மெசின் யூஸ் பண்ணகூடாதா? வளர்ச்சிடா!. கவர்ச்சிடா!!!*

*அட! அரை மண்டையங்களா!..*

📱 *டெபிட்கார்டு* *பயன்படுத்துவதையும்*, 🖥 *ஆன்லைன் பண பரிவர்த்தனைகள்* *செய்வதையும், ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக,* *உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்தவன் எவன்டா?*

*நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.*

*அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாள சின்னமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.*

*பொது துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே என்று சட்டம் இயற்று.*

*வளங்களை சுரண்டும் கோலா, கார் கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டுவா. அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கு.*

🔑🗝📌 *உற்பத்தி வரி, சேவை வரியை குறைத்து* *தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து.*

*நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவனியை அதிகரிக்க சட்டம் இயற்று.*

⛪🕌🕍 *சாதி, மத அரசியல்களுக்கு முற்றிலும் தடை விதித்து சட்டம் இயற்று.*

🔨 *ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை சட்டமாக்கு.*

💊💉 *மருத்துவத்தை பொதுத்துறையாக மாற்றி சட்டம் இயற்று.*

*இன்னும் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் இருக்க... 2000 ஓவாவை கொண்டுவந்தா, டெபிட் கார்டு வந்துட்டா நாடு வளர்ச்சி அடைஞ்சுரும்னு கூவுறீங்களே நீங்கள்எல்லாம் உண்மையிலேயே கோமாளியா? இல்ல கோமாளிமாதிரி நடிக்கிறீங்களா..*

*படித்ததில் பிடித்தது*

வரப்போவதை நினைத்து கவலைப்படுவதால் பிரச்னை நீங்குவதில்லைஒரு நாட்டில் வித்தியாசமான வழக்கம் ஒன்று இருந்தது. பரம்பரையாக, ஒரே...
10/01/2017

வரப்போவதை நினைத்து கவலைப்படுவதால் பிரச்னை நீங்குவதில்லை

ஒரு நாட்டில் வித்தியாசமான வழக்கம் ஒன்று இருந்தது. பரம்பரையாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் அங்கு மன்னராக முடியாது. குடிமக்களில் யார் வேண்டுமானாலும் மன்னர் ஆகலாம். ஆனால், பதவிக்காலம் ஓராண்டு மட்டும் தான்.
அவ்வாறு மன்னர் ஆகிறவர்கள் பட்டம் கட்டிக் கொள்வதோடு சரி... அப்புறம் அரச வாழ்வையே வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். பட்டு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது.
அறுசுவை உணவே என்றாலும் சாப்பிடப் பிடிக்காது. ஆட்சி முடிந்து விடுமே என்ற கவலை வந்து விடும்.
இப்படியே ஓராண்டு கழிந்ததும், கடைசிநாளில் அரண்மனைக் காவலர்கள் மன்னரை ஒரு படகில் ஏற்றிச் சென்று ஆளே இல்லாத தீவில் விட்டு விடுவார்கள். வனாந்திரமாக இருப்பதால் மலைப்பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் பிடியில் சிக்கி, உயிர் விடுவதைத் தவிர வேறு வழி அங்கில்லை. இப்படியே ஆண்டுதோறும் ஒருவர் மன்னராவதும், கடைசி நாளில் கண்ணீருடன் தீவுக்குச் செல்வதும் வழக்கமாகிப் போனது.
அந்த ஆண்டு இளைஞர் ஒருவர் நாட்டின் மன்னராக இருந்தார். பதவியேற்ற நாளில் மட்டுமில்லாமல் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக எப்போதும் இருந்தார். மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். எதிரி நாட்டினர் படையெடுத்து வந்தபோது, திறமையுடன் போரிட்டு நாட்டைக் காப்பாற்றினார். முன்பை விட வரியைக் குறைத்து சலுகைகளை வழங்கினார். அவருக்கும் பதவிக் காலம் முடியும் நேரம் வந்தது. அன்றும் வழக்கம் போல அறுசுவை பரிமாறப்பட்டது. அதை ரசித்து ருசித்தார்.
இரவு பட்டு மெத்தையில் நிம்மதியாக தூங்கினார். மறுநாள் காலையில் தீவுக்குப் புறப்படவும் தயாரானார்.
மன்னரை அழைத்துச் செல்ல படைத்தளபதி காவலர்களுடன் வந்தார். மன்னரை தீவுக்குக் கொண்டு செல்லப் போகிறோமே என்ற கவலை தளபதிக்குக் கூட இருந்தது. ஆனால், மன்னர் சிறிதும் வருந்தவில்லை. படகில் தீவுக்குச் செல்லும்போது, தளபதி, ""மன்னா! தீவில் நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும். உங்கள் உயிருக்கு அங்கே உத்தரவாதம் கிடையாது. அதை சிறிதும் உணராமல் எப்படி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
""விதியை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் மன்னரானதும் செய்த முதல்பணியே ஆளில்லாத தீவை சீரமைத்து, மக்கள் வாழும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும் என்பது தான். என் நம்பிக்கைக்குரிய நபர்களை ரகசியமாகத் தீவுக்கு அனுப்பினேன். அவர்கள் காட்டை அழித்து நாடாக மாற்றினர். எனக்கான அரண்மனையும் கூட இப்போது அங்கு தயாராக இருக்கிறது. அவர்கள் என் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்,'' என்றார் மன்னர்.
இதைக் கேட்ட தளபதி ஆச்சர்யம் கொண்டார். அங்கு ஆளில்லாத் தீவு அழகான நாடாக காட்சியளித்தது. மன்னரை பணியாட்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். உணவும் தயாராக இருந்தது. தளபதிக்கும், உடன் வந்தவர்களுக்கும் தீவில் மன்னர் விருந்தளித்தார்.
வரப்போவதை நினைத்து கவலைப்படுவதால் பிரச்னை நீங்குவதில்லை. அதற்கான தீர்வைத் தேடுபவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

08/01/2017

உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெ...
08/01/2017

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!”

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!”

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், "இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!”

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கடற்கரையில் எழுதினார், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!”

ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச்சென்றது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு.

தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.

நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.

சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு........

உங்கள் தோழன் பிரசாத்

உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்?நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்...
08/01/2017

உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்

சாலமன் பாப்பையா தனது முகநூல் பக்கத்தில் எங்கே என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள மறைந்த நினைவுகள்
08/01/2017

சாலமன் பாப்பையா தனது முகநூல் பக்கத்தில் எங்கே என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள மறைந்த நினைவுகள்

08/01/2017

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....

08/01/2017

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

என்றும் என்றென்றும் நட்புடன்

 #குட்டிக்கதை"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு."வரு...
07/01/2017

#குட்டிக்கதை

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

#அன்பு #நண்பர்களே,

நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும்,கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.

வாய்ப்பு என்பது நாம் பயன்படுத்தும் விதத்தில் உள்ளதுஅதற்கு உதாரனம் ஷேக்ஸ்பியர் அவர் ஏழை என்பதும், குதிரை சுத்தம் செய்தார்...
07/01/2017

வாய்ப்பு என்பது நாம் பயன்படுத்தும் விதத்தில் உள்ளது

அதற்கு உதாரனம் ஷேக்ஸ்பியர் அவர் ஏழை என்பதும், குதிரை சுத்தம் செய்தார் என்பதும் ஆச்சரியம். இலக்கிய மேதைக்கும் குதிரைக்கும் என்ன சம்பந்தம்.

இருக்கு… குதிரையால் வந்த காசுதான் அவரை மேதை ஆக்கியது என்றால் ஆச்சரியப்படாமல் என்ன செய்வது.

சரி பீடிகை போதுமா அப்ப விசயத்துக்கு வருவோமா.

இதோ

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.

பையனிடம்,

*”டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,”* என்றார்.

“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. *குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.*

*சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர்.* *சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்…* (மயக்க நிலையிலும் வேலையில் இருந்த ஈடுபாடே அவனை குதிரை சுத்தம் செய்ய வைத்தது.)

*மகிழ்ந்தான்…*

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, *குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.*

அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். (எத்தொழில் செய்தாலும் சுற்றிலும் கவணம் இருக்கனும் லாடம் கட்டிய குதிரையாய் இருக்க கூடாது) மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். *அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை #ஷேக்ஸ்பியர்.*

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். *வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.*

*வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வளம் வருகின்றனர்.*
கவனம், ஈடுபாடு, கவனிப்பு, திட்டமிடல் நம்மை நகர்த்திச்செல்லும் செயல்கள் ஆகும்.

#வாய்ப்பு

07/01/2017

🌼கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்…? என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.

🌼இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.

🌼சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம். அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!

🌼பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

🌼பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்

🌼எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள்.

🌼நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன்.

🌼அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

🌼அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

🌼என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.

🌼அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

🌼பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன்.

🌼ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் இருநூறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.

🌼ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் இருபதுரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு இருநூறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.

🌼நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்🌼

Address

24#Lake View Street, Nesapakkam, West KK Nagar
Chennai
600078

Alerts

Be the first to know and let us send you an email when Smart Mobile Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Mobile Service:

Share