10/02/2026
தமிழக அரசியலின் தற்போதைய "கிங் மேக்கர்" - தேமுதிக? 👑❤️💛🖤
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது! ஆனால், இதுவரை இல்லாத ஒரு விசித்திரமான சூழலை இந்த முறை பார்க்க முடிகிறது. பொதுவாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்துவிட்டு தொகுதிகளைப் பங்கிடும் பணியில் வேகம் காட்டும். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக இருக்கிறது.
திணறும் திராவிடக் கட்சிகள்! 🚩🏁❤️🖤
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒருவிதத் தேக்க நிலையில் இருப்பதை மறுக்க முடியாது. இதற்கு மிக முக்கியக் காரணமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது: தேமுதிகவின் அதிரடி முடிவுக்காகக் காத்திருப்பதுதான்!
அதிமுகவின் தயக்கம்: தேமுதிக தங்களது பக்கம் வந்தால் அணைத்து மாவட்டங்களில் வாக்கு வங்கி பலப்படும் என அதிமுக கணக்கு போடுகிறது. அவர்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுக்கத் தயாரா அல்லது அவர்கள் இல்லாமல் களமிறங்குவதா என்பதில் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் அதிமுக தலைமை திணறி வருகிறது.🖤❤️
திமுகவின் கணக்கு: ஒருவேளை தேமுதிக அதிமுகவுடன் இணைந்தால் அது தங்களுக்குச் சிறு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால், தேமுதிகவின் நகர்வுகளை திமுக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.❤️🖤
புரட்சி அண்ணியாரின் "மாஸ்" மூவ்! 🔥💪
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்குப் பிறகு, கட்சியைத் திறம்பட வழிநடத்தி வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இந்த முறை மிக நிதானமாகவும், அதேசமயம் உறுதியாகவும் காய்களை நகர்த்தி வருகிறார்.❤️💛🖤💪
"தனித்துப்போட்டியா? அல்லது கௌரவமான கூட்டணியா?" - அண்ணியாரின் இந்த ஒரு முடிவுக்காகத்தான் ஒட்டுமொத்த தமிழக அரசியலே காத்துக்கொண்டிருக்கிறது.
தேமுதிக எந்தப் பக்கம் சாய்கிறதோ, அந்தப் பக்கம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதுதான் தற்போதைய நிதர்சனம். அதனால்தான், தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் பெரிய கட்சிகள் இன்று வரை திணறி வருகின்றன.
யார் யாருடன் இணைவார்கள்? யாருக்கு எத்தனை தொகுதிகள்? பொறுத்திருந்து பார்ப்போம்!
#தேமுதிக