17/09/2020
உங்கள் குழந்தைகள்
படுக்கையிலேயே சிறுநீர்
கழித்து விடுகின்றார்களா? அப்படியானால் கண்டிப்பாக
இதைப் படிங்க!
எழுத்தாக்கம்:
டாக்டர்.முஹம்மது கிஷார்
(Dr D Mohamed kizhar)
என் கிளினிக்கில் சில வருடங்கள் முன்பு
" டாக்டர் என் மகளுக்கு 9 வயசு ஆவுது..
#எருமமாடு இன்னும் படுக்கையில் மூத்திரம் போவுது..
எவ்வளவோ திட்டியாச்சி..
இவ தம்பி சின்ன பையன் .
அவன் அப்படி செய்யல.
' அவன் மூத்திரத்தை குடி அறிவு வரும்' னு மோசமா திட்டியச்சி..
அடிச்சாசி..
#பண்டிபுள்ளைக்கு அறிவே இல்லை..
இன்னும் டெய்லி பெட்ல ஒண்ணுக்கு போயிரா..
ஒன்னு ரெண்டு வருஷத்துல பெரியவலா ஆவிருவா ..
இன்னும் புத்தி வரல்லை..
நீங்க தான் நல்ல சிகிச்சை....."
இப்படி படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தன் மகள் பற்றி மூச்சு விடாம பொரிஞ்சு தள்ளிட்டாங்க..
அந்த சின்ன பொண்ணு அப்படியே தலை குனிந்தபடி வெட்கி வெதும்பி நின்றதை கவனித்தேன்..
நான்.
" #சிகிச்சைஅவளுக்குஇல்லை..
உங்களுக்கு தான் தரணும்...
பிரச்சனையே நீங்க தான்..."
தாய்:
" என்ன சார் இப்படி சொல்றீங்க.."
நான்:
"கொஞ்ச இருங்க.."
அந்த பொண்ணிடம் ஆறுதல் கூறி பேசி விட்டு, முழுவதும் பரிசோதித்து விட்டு இருக்கும் போது
அந்த பொண்
" சார் நானும் ஒவ்வொரு நாளும் , ஒண்ணுக்கு போககூடதுண்ணு எவ்வளவோ நினைக்கிறேன்..
முயற்சிக்கிறேன்...
தூங்க முன்னே கடவுளை வேண்டுறேன்..
ஆனா எல்லாத்துக்கும் மேலே,
#அம்மாதிட்டுறதுதான் என் கண்ணுக்கு முன்னே வந்து,
'தூங்கு போது என்னை அறியாமலே இன்னைக்கு ஒண்ணுக்கு போக கூடாதுன்னு முயற்சி செய்து தோற்று போறேன்"
நான் அவள் தாயிடம்
" இங்க பாருங்க..
இந்த பொண்ணு படுக்கையில் ஒண்ணுக்கு போறது,
#அவளதுகட்டுப்பாட்டையும்மீறிய செயல்..
அவள் வேணும்னு போகல...
.ஆனால் நீங்க அவளை இத காரணம் காட்டி திட்டும் போது,
மற்ற பிள்ளைகள் கூட ஒப்பிட்டு பேசும் போது,
அவளின் #மனஅழுத்தம்அதிகமாகும ஒழிய, குறையாது..
மன அழுத்தம் கூடினால் #பிரச்சினை #தீவிரமாகும்...
அவளுக்கு தேவை உங்கள் #அரவணைப்பு...
#உற்சாகமூட்டும் #அன்பானகனிவானவார்த்தைகள்..
' உன்னால கண்ட்ரோல் பண்ண முடியும்' அப்படின்னு பண்ணுங்க..
அப்ப கண்டிப்பா அவளால் முடியும்..
#சிறுநீர்போகாதஇரவுகளை ஒரு டைரி யில் குறித்து வைத்து,
அதற்கு ஒரு #வெகுமதி கொடுங்க..
குறைஞ்ச பட்சம் #பாராட்டுகொடுங்கள்..
#முத்தம்கொடுங்க
அட்லீஸ்ட் #திட்டாமஇருங்க..
சிறுநீர் கழிக்கும் இரவு,
' கொஞ்ச முயற்சி செய்மா ' அப்படின்னு கனிவ காட்டுங்க..
அதை விட்டுட்டு
கழுதை, எருமைன்னு சொன்னா
அந்த பொண்ணு மனசு கஷ்டபட்டு, மேலும் மனஅழுத்தம் பெற்று,
பிரச்சினை இன்னும் அதிகம் ஆகும்.
உலகில் சாதித்த
பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள் பலரிடம் சிறுவயதில் இப்பழக்கம் இருந்துள்ளது
ஏன்..என்னிடம் கூட இருந்ததாக என் அம்மா சொல்லி இருக்காங்க"
தாய்
" சாரி..சார் ..
இந்த விசயம் தெரியாது...
திட்டுநா திருந்துவான்னு அப்படி செய்ஞ்சுட்டேன்..இதை எப்படி..."
நான்
" ..."புரிஞ்சா போதும்..
இது ஒரு பழக்க வழக்க வேறுபாடு( )..
குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அது பழக்கவழக்க குறைபாடு ( ) ஆகிறது..
பொதுவா #4வயதுக்குள் இரவில் சிறுநீர் படுக்கையில் போவது கட்டுக்குள் வரும்..
ஆனால்..
ஒரு ஆய்வு படி
#5வயதில் 5%குழந்தைகளும்,
15 வயதில் 1% குழந்தைகளும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு..
இது #குடும்பவாரிசில் வரலாம்..
தாயின் அரவணைப்பில் இல்லாத அல்லது தாயிடம் இன்றி வேறு இடத்தில் வளரும் குழந்தைகளிடம் இது அதிகம் காணப்படுகிறது..
கண்டிப்பா கட்டுக்குள் வந்து விடும்..
இரவு ஆறு மணிக்கு மேல் திரவ உணவு, தண்ணீர் குறைத்து கொள்ளுங்கள்..
இரவு உணவுக்கு பிறகு அறை டம்ளர் தண்ணீர் மட்டும்..
#படுக்கும்முன்பு சிறுநீர் இருமுறை கழித்து விட்டு ..
படுத்து 1 மணி நேரம் கழித்து, எழுப்பி விட்டு , #மீண்டும்சிறுநீர் கழிக்க வையுங்கள்...
சிறுநீர் வராவிட்டாலும் , முக்கி கழிக்க சொல்லுங்கள்.
பகலில் சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்ட உடன், #கொஞ்சநேரம்தாமத் படுத்தி, சிறுநீர் அடக்கி செல்லுவதால், control தன்மை கிடைக்கும்..
பகலில் சிறுநீர் கழித்து விட்டு வந்தவுடன், மீண்டும் சிறுநீர் வராவிட்டாலும், சும்மாவாவது பாத்ரூமிி உட்கார்ந்து முக்க சொல்லுங்கள்..
இதன் மூலம் சிறுநீர் பை பயிற்சி கிடைக்கும்..
இதற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தல் என்று பெயர்..
சிறுநீர் போகாத இரவுகளை குறித்து வைத்து, ' ஏய் ஜெயிச்சுட்டியே' சொல்லி பரவச படுத்துங்க...
தேவை என்றால் அதற்கு கிஃப்ட் கொடுங்க..
அந்த கிஃப்ட் உங்க முத்தமா கூட இருக்கட்டும்..
சில குழந்தைகளின் #சிறுநீர்கழித்தபடுக்கையை , அவங்க விழிக்கும் முன்பு நீங்களே #அப்பறபடுத்தி அவங்க கவனத்திற்கு வாராம பார்துங்குங்க..
இவ போல வளர்ந்த பொண்ணுங்களை, சிறுநீர் கழித்த படுக்கையை #அவங்களையேதுவைக்க ,அன்பு கட்டளை இடுங்க..
பெட்டில் சிறுநீர் போனதும், #அலாரம்அடிக்கும், முறை உள்ளது..அதை வாங்கி பயிற்சிக்காக..
இவங்க பெட்ல சிறுநீர் கழிக்க விசயம் மற்ற சம வயது குழந்தைகளுக்கு தெரியாமல் மறையுங்கள்..
தேவை இன்றி இதை பெரிது படுத்தாதீங்க..
அவங்க வேணும்னு இதை செய்யல, அவங்க கட்டுப்பாடு மீறி வருதுன்னு புறியுங்க..
நீங்களும் ஒரு வகையில் இதுக்கு காரணம்..ஏன்னா உங்க கூட இருக்கலாம்..
ஏன் நீங்க கூட இப்படி செய்து இருக்கலாம்..
நான் சொன்னதை ஒரு மாதம் ஃபாலோ பண்ணுங்க.. அடுத்த மாதம் வாங்க..
அப்பவும் இந்த பழக்கம் நிக்கலைன்னா , மருந்து தாரேன்.."
இவ்வளவு பேசும் போது,
அந்த பொண்ணின் முகத்தில் 1000 watts மகிழ்ச்சி பிரகாசம் தெரிந்தது..
அதிலேயே, அவள் மன அழுத்தம் குறைந்தது உணர்ந்தேன்..
எப்படியும் கட்டுக்குள் வரும் என்று நம்பிக்கை எனக்குள் பிறந்தது..
அடுத்த மாதம் விசிட் போது,
மிக முன்னேற்றம் என்றும்...சில மாதத்தில் முழுவதும் கட்டுக்குள் வந்தது என்றும் அந்த தாய் சொன்னார்கள்...
படிப்பினை எல்லோருக்கும்..
Dr D Mohamed DrMohamed Kizhar
https://m.facebook.com/story.php?story_fbid=10215293458324559&id=1678008038