27/05/2026
சிலர் உன்னை படிக்க எத்தனித்திருக்கலாம்.
சிலர் சில பக்கங்களை மட்டும் படித்து விட்டு பாதியிலேயே பிரிந்தும் சென்றிருக்கலாம்...
அவர்களில் ஒருவரல்லாமல் நான் உன்னை என் அன்பே உனை பெண்ணவளை என்னவளை அவளின் புனிதத்துவத்துடன் படிக்க எத்தனித்து, படிக்க ஆரம்பித்து சில காலங்களே ஆகின்றன. இன்னமும் படிக்க எத்தனிக்கிறேன்...
என் வாழ்வுள்ளவரை உன் அனுமதியுடன் உன்னுடன் பயணித்து...
இது வரை வாசித்த சுவாரஸ்யமான பக்கங்களுடன் என் அன்பின் அனுமதியுடன் அவளை என் நினைவில் நிறுத்தி அவள் மனதின் சுக துக்கங்களில் பங்கேற்று அவளுடனேயே பயணித்து என் ஆண் என்ற அகங்காரத்தை அவளின் அன்பின் முன் புதைத்து புனிதமான அவளை படித்து நானும் புனிதனாக எத்தனிக்கிறேன்...
காதல் ராட்சசன்